வெறும் 7 லட்ச ரூபாய் காரை வாங்கிய பிரபல இசையமைப்பாளரின் மனைவி! ஒட்டுமொத்த திரையுலகமே ஆச்சரியமா பாக்குது!

திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும், அவர்களது குடும்பத்தினரும் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த கார்களை மட்டுமே வாங்குவார்கள். அவர்கள் விலை குறைவான கார்களை வாங்குவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் ஆகும். அப்படிப்பட்ட அரிதான ஒரு விஷயம் தற்போது நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

தென் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹீசம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab). மலையாள மொழி திரைப்படமான ஹிருதயம் (Hridayam), தெலுங்கு திரைப்படங்களான குஷி (Kushi) மற்றும் ஹாய் நானா (Hi Nanna) போன்ற திரைப்படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர். இவரது மனைவி ஆயுஷ்தா சஃபா (Ayshath Safa), தற்போது மிகவும் விலை குறைவான புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகும். இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Music Director Hesham Abdul Wahab Wife Buys MG Comet EV

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.24 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை குறிப்பிடலாம். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 17.3 kWh பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என எம்ஜி நிறுவனம் கூறியுள்ளது.

MG Comet EV

இந்திய சந்தையில், டாடா டியாகோ இவி (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் டாடா பன்ச் இவி (Tata Punch EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. விலை குறைவானதாக இருந்தாலும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் மிகவும் முக்கியமானது ஆகும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும்.

இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கீலெஸ் எண்ட்ரி, 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் உள்ளிட்ட அம்சங்களும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சம் இல்லை.

இதில், ஏர்பேக்குகள், ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவ்வளவு வசதிகள் இருப்பதால், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரானது, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் உருவத்தில் மிகவும் சிறியது. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை சுலபமாக ஓட்ட முடியும். இசையமைப்பாளர் ஹீசம் அப்துல் வஹாப்பின் மனைவி இந்த காரணத்திற்காகவே எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பார் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் அவர் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பது சரியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2024, 22:12 [IST]
English summary
Music director hesham abdul wahab wife buys mg comet ev all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+