பொதுவெளியில் உச்சகட்ட வேகத்தில் பாய்ந்த மஸ்டாங் கார்... கைது செய்ய உதவிய யுடியூப்...!
பொது சாலையில் அதிகவேகமாக காரை இயக்கிவரை கைது செய்ய யுடியூப் வீடியோ தளம் உதவியாக இருந்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய தலைமுறையினர் தாங்கள் என்ன செய்தாலும், அதனை முகப்புத்தக பக்கத்திலேயோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ ஸ்டேட்டஸாகப் போட்டு அவர்களது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில், தற்போது மியூசிக்கலி என்ற ஆப் இப்போதைய இளம் தலைமுறையினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுபோன்ற, ஆப்பினைப் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்தமான பாடல், நகைச்சுவை வசனம் உள்ளிட்ட சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு முக பாவனைச் செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் ஒரு படி மேலேச் சென்று, ஆபாசமான முறையில் இரட்டை அர்த்தமுடைய வீடியோக்களை காட்சிப்படுத்தி பதிவிடுகின்றனர்.

இதன்காரணமாக, இதுபோன்ற ஆப்புகளை பயன்படுத்த வேண்டாம், என்றும் அவற்றை பதிவிறக்கம் செய்யவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதுபோன்ற ஆப்-கள் சமூக சீர்கேட்டை ஏற்படுத்துவதாக பலதரப்பில் இருந்து எழுந்த புகாரின் காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளும் இந்த நடவடிக்கை காரணாக உள்ளது.

இதேபோன்று, சிலர் மியூசிக்கலி ஆப்-இனை பயன்படுத்தி, வன்முறையான வீடியோக்களைப் பதிவிட்டதாகக்கூறி அண்மையில் சில இளைஞர்கள் போலீஸார் கைது செய்தனர். இவ்வாறு, சமூக வலைதளங்கள் மூலம் நாளுக்கு நாள் சமூக சீர்கேடானது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், யுடியூபர் பியூ ஆலன் ரோகல் என்பவர், அவரது சக்தி வாயந்த மஸ்டாங் காரை, பொதுசாலையில் வைத்து அதிகவேகத்தில் இயக்கிய காரணத்திற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்ய யுடியூப் உதவியாக இருந்துள்ளது.

எவ்வாறு அவரை கைது செய்ய யுடியூப் உதவியாக இருந்தது என்று தானே கேட்கிறீர்கள். சமூக வலைதளத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் பியூ ஆலன் ரோகல், இவர் மிஸ்ஸிஸிப்பி என்ற மாகாணத்தில் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
பியூ ஆலன் ரோகல், எந்த சாகசத்தைச் செய்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவிடும் பழக்கம் கொண்டவர். அவ்வாறு, அவரது சக்தி வாய்ந்த மஸ்டாங் காரை அதிகவேகமாக ஓட்டிச் செல்வதை யுடியூபில் லைவாக ஒளிபரப்பியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரின் ஸ்மார்ட்போனுக்கு அந்த வீடியோக் காட்சிகள் பரவ ஆரம்பித்தது. அவ்வாறு, அந்த பகுதியின் போலீஸாருக்கும் கட்சிகள் பரவின. இதைத்தொடர்ந்து, பொது பயன்பாட்டில் உள்ள அந்த சாலையில், விதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி காரை ஓட்டிச் சென்ற குற்றத்திற்காக பியூ ஆலன் ரோகல் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனர். இதுகுறித்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பியூ ஆலன் ரோகல் அவரது 2017 ஃபோர்டு மஸ்டாங் செல்பி ஜிடி350 காரை மணிக்கு 289கிமீ என்ற உச்சகட்ட வேகத்தில் ஓட்டிச் செல்கிறார். இதனை அவரது ஸ்மார்ட்போன் மூலம், யுடியூப்-இல் லைவாக காட்சிப்படுத்துகிறார். இதனையறிந்த, அப்பகுதி போலீஸார் விரைந்து வந்து, அதிகவேகமாகச் சென்ற குற்றத்திற்காக அவரைக் கைது செய்கின்றனர். இவையனைத்தும், நேரலையாக யுடியூபில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த காட்சிகள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஆகையால், பியூ ஆலன் ரோகல் சமீபகாலமாக செய்துவந்த சாகசங்களைக் காட்டிலும் அவரை போலீஸார் கைது செய்துள்ள வீடியோ தான் அதிகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் இயக்கிச் சென்ற மஸ்டாங் செல்பி ஜிடி350 கார் தற்போது 5,0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜினில் கிடைக்கிறது. இது அதிகபட்சமாக 396 பிஎச்பி பவர் மற்றும் 515 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியது. இதில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கருப்பு, சில்வர், ஆக்ஸ்போர்டு ஒயிட், ரேஸ் ரெட் மற்றும் ட்ரிபிள் யெல்லோ ட்ரை-கோட் என பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








