இனி தண்ணீல மிதந்துக்கிட்டே சாப்பிடலாம்! சென்னை மக்கள் கொண்டாட புதுசா ஸ்பாட் ரெடியாகுது!
சென்னையில் மிதக்கும் உணவக கப்பல் கட்டுமானம் பணி துரிதமாக நடந்து வருகிறது. சுமார் 5 கோடி மதிப்பில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த கப்பலை கட்டமைத்து வருகின்றனர். இதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சமீபத்தில் பார்வையிட்டார். இந்த கப்பல் பணி குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு முக்கிய சுற்றுலா ஈர்ப்பு தளங்களை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியில் கடலில் மிதக்கும் உணவகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்கனவே செய்திகள் எல்லாம் பெரிய அளவில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அந்த கப்பல் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மேல் சென்று பார்வையிட்டார். இந்த மிதக்கும் உணவாக கப்பல் தற்போது சென்னை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுவாக சென்னையில் உள்ள மக்கள் வார விடுமுறையை கழிக்க முட்டுக்காடு பகுதிக்கு பயணம் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதிதாக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கவரும் வகையில் மிதக்கும் உணவகம் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வழங்கிய அனுமதியில் கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த மிதவை கப்பலில் தற்போது உருவாக்கி வருகிறது.

இந்நிறுவனம் சுமார் 125 அடி நீளம் 25 அடி அகலத்தில் ஒரு மிதவை கப்பல் ஒன்றை தற்போது கட்டமைத்து வருகிறது. இவை இரண்டு அடுக்குகளாக கட்டமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மிதவை கப்பலில் பயணித்துக் கொண்டே உணவருந்தும் அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிதவை கப்பலின் மேல் தளம் முற்றிலும் திறந்த வெளியாகவும், கீழ்த்தளம் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடனும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோக இந்த கப்பலில் சமையலறை சேமிப்பாரை கழிவறை மற்றும் இன்ஜின் அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதன்படி சில உணவுகளை கப்பலிலேயே சமைத்தும் சில உணவுகளை வெளியில் தயார் செய்து கப்பலில் ஏற்றியும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலின் இன்ஜினை பொறுத்தவரை 60 எச்பி திறன் கொண்ட இன்ஜின் மூலம் இந்த கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கட்டுமானத்தில் தற்போது மேல் தளம் மட்டுமே பாக்கி உள்ளது. கீழ பகுதியில் உள்ள பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அடுத்த மகாபலிபுரத்திற்கு ஏகப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களை ஈர்க்கும் விதமாகவும் இந்த மிதக்கும் உணவு வகை கப்பல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இதில் பயணிக்க ஒரு நபருக்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம்.

மேலும் இந்த கப்பல்களில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான நபர்களை மட்டுமே கப்பலில் ஏற அனுமதிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் மற்றும் விபரங்கள் எல்லாம் விரைவில் வெளியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் இது போன்ற மிதக்கும் உணவாக கப்பல் செயல்பாட்டிற்கு வந்தால் அது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கியமான ஸ்பாட்டாக இருக்கும். இதனால் தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் தமிழகத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும். இதுபோன்ற கப்பல்களை சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
