உலகையே மிரள வைத்த இந்தியாவின் உல்லாச கப்பல்! வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் போயிரணும்! கட்டணம் எவ்ளோனு தெரியுமா?

உல்லாக கப்பல் (Cruise Ship) பயணங்கள் மனதிற்கு சுகம் அளிக்க கூடியவை. எனவே உல்லாச கப்பல்களில் பயணம் செய்ய மக்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உல்லாச கப்பல்கள் பொதுவாக கடலில்தான் பயணிக்கும் என நினைத்து கொண்டிருந்தால், அது தவறு. ஆறுகளின் வழியாகவும் உல்லாச கப்பல்கள் பயணம் செய்யும்.

இந்தியாவில் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஒரு உல்லாச கப்பல் சேவை இதற்கு ஒரு உதாரணம். எம்வி கங்கா விலாஸ் (MV Ganga Vilas) என்ற பெயரில் ஒரு உல்லாச கப்பல் சேவை இந்தியாவில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஆறுகளின் வழியாக பயணிக்கும் உல்லாச கப்பல் ஆகும். பிரதமர் நரேந்திர மோடிதான் (PM Narendra Modi) இந்த உல்லாச கப்பல் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இது உண்மையில் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும்.

உலகையே மிரள வைத்த இந்தியாவின் உல்லாச கப்பல்! வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் போயிரணும்! கட்டணம் எவ்ளோனு தெரியுமா?

உலகிலேயே நீளமான ஆற்று உல்லாச கப்பல் சேவை!

ஏனெனில் இதுதான் உலகிலேயே மிகவும் நீளமான ஆற்று உல்லாச கப்பல் (World's Longest River Cruise) சேவை ஆகும். இந்த உல்லாச கப்பல் 51 நாட்கள் பயணம் செய்யும். இந்த பயணத்தில், 3,200 கிலோ மீட்டர்களை இந்த உல்லாச கப்பல் கடக்கவுள்ளது. இந்தியாவில் உள்ள 5 மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தில் 27 ஆறுகளின் வழியாக இந்த உல்லாச கப்பல் பயணம் செய்யவுள்ளது. எனவேதான் இந்த உல்லாச கப்பல் இந்தியாவிற்கு பெருமிதமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.

பயணம் தொடங்கியது!

எம்வி கங்கா விலாஸ் உல்லாச கப்பல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். இது தனது பயணத்தை தற்போது தொடங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இருந்து இந்த உல்லாச கப்பலின் பயணம் தொடங்கியுள்ளது. வங்கதேசம் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் பகுதியை இந்த உல்லாச கப்பல் சென்றடையும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டத்தை போல், இது ஒரு சொகுசு உல்லாச கப்பல் ஆகும்.

உலகையே மிரள வைத்த இந்தியாவின் உல்லாச கப்பல்! வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் போயிரணும்! கட்டணம் எவ்ளோனு தெரியுமா?

இவ்ளோ வசதிகளா!

எம்வி கங்கா விலாஸ் உல்லாச கப்பலில் மொத்தம் 3 அடுக்குகள் உள்ளன. இதில் மொத்தம் 36 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், இந்த உல்லாச கப்பலில் இடம்பெற்றுள்ளது. ஸ்பா, ஜிம், சலூன் என இந்த உல்லாச கப்பலின் வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். அத்துடன் எம்வி கங்கா விலாஸ் உல்லாச கப்பலில் தங்கும் அறைகளும் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தனை இடங்களை பார்க்கலாமா!

இந்த உல்லாச கப்பல் பயணம் செய்யும் 51 நாட்களில், சுமார் 50 பகுதிகளை சுற்றி பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், உலக பாரம்பரிய தளங்கள், தேசிய பூங்காக்கள் ஆகியவை அடங்கும். இதுதவிர பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி மற்றும் வங்கதேசத்தில் உள்ள டாக்கா ஆகிய நகரங்களை சுற்றி பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்ளோ கட்டணமா!

ஆனால் எம்வி கங்கா விலாஸ் உல்லாச கப்பலில் சாமானிய மக்கள் பயணம் செய்வது என்பது சிரமமான விஷயம்தான். ஏனெனில் அதன் டிக்கெட் கட்டணம் (Ticket Price) மலைக்க வைக்கும் வகையில் உள்ளது. எம்வி கங்கா விலாஸ் உல்லாச கப்பலில் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டுமென்றால் கூட நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உல்லாச கப்பலில் 51 நாட்களும் முழுமையாக பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒரு பயணிக்கு சுமார் 20 லட்ச ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

எப்படி புக்கிங் செய்வது?

சரி, கட்டணம் எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் ஒரு முறையாவது இதுபோன்ற உல்லாச கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், டிக்கெட்களை எப்படி முன்பதிவு செய்வது (Ticket Booking) என்ற விபரத்தை கூறி விடுகிறோம். Antara Luxury River Cruises-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால் தற்போது தொடங்கப்பட்டுள்ள பயணத்திற்கு யாரும் முன்பதிவு செய்ய முடியாது.

ஏனெனில் இந்த பயணத்திற்கு, ஸ்விட்சார்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று டிக்கெட்களை வாங்கி விட்டது. எனினும் இந்த உல்லாச கப்பலின் அடுத்தடுத்த பயணங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால் அதைப்பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இந்த உல்லாச கப்பல் தனது அடுத்த பயணத்தை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 13, 2023, 16:39 [IST]
English summary
Mv ganga vilas river cruise ticket price booking all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+