சின்ன ஆணி குத்தி உங்க வண்டி ரோடுல நின்னாலும் டிவிஎஸ் உதவி கரம் நீட்டும்.. சூப்பரான சர்வீஸை தொடங்கியிருக்காங்க!
டிவிஎஸ் மொபிலிட்டி (TVS Mobility) குழுமத்தின்கீழ் இயங்கும் ஓர் பிராண்டு மை-டிவிஎஸ் (myTVS). இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் ஆட்டோமோட்டிவ் ஆஃப்டர்மார்க்கெட் பிளாட்பாரம் இதுவாகும். அதாவது, வாகன சர்வீஸ் மற்றும் பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்கி வரும் பிராண்டு இதுவாகும். இந்த நிறுவனமே பான் இந்தியா அளவில் ஓர் புதிய சேவையை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. 'மொபிலிட்டி அஸ் எ சர்வீஸ்' (Mobility-as-a-Service) எனும் சேவையையே தொடங்கி இருக்கின்றது. இது ஓர் லாஸ்ட் மைல் இவி ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கான ஓர் தளம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதாவது, மின்சார வாகனங்களை சார்ந்து டெலிவரி மற்றும் கால் டாக்சி போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருவோருக்கான ஓர் தளம் இதுவாகும். இந்த தளத்தின் வாயிலாக பலதரப்பட்ட சேவைகளை மை டிவிஎஸ், அதன் பயனர்களுக்கு வழங்க இருக்கின்றது. சர்வீஸ், ஸ்பேர் பார்ட் வழங்குதல், வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல்வேறு சேவைகளையே அது மொபிலிட்டி அஸ் எ சர்வீஸ் எனும் ஒற்றை குடையின் கீழ் வழங்க இருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்த சேவைகளை மட்டுமல்ல, டெலிமேட்டிக்ஸ், ரோடு-சைடு அசிஸ்டன்ஸ், இன்சூரன்ஸ் மற்றும் டயர் மேனேஜ்மென்ட் போன்றவற்றையும் வழங்க இருக்கின்றது. அதாவது, வாகனம் பழுது அல்லது பஞ்சர் போன்றவற்றால் தடைப்பட்டு நிற்குமானால் உடனடியாக வந்து அந்த வாகனத்தை மீட்டெடுக்கவும் இந்த சேவை பெரும் உதவியாக இருக்கும்.
ஆகையால், இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் தடையின்றி தங்களின் லாஸ்ட் மைல் சேவையைச் செய்துக் கொள்ள முடியும். அதாவது, கால் டாக்சி போன்ற சேவையில் ஈடுபட்டவர்கள் சவாரியை ஏற்றிச் சென்றுக் கொண்டிருக்கும்போது சார்ஜ் இல்லாமல் தங்களின் மின்சார வாகனம் நின்றுவிட்டால் மை டிவிஎஸ் உடைய மொபிலிட்டி அஸ் எ சர்வீஸ் பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி தங்களின் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும்.
மை டிவிஎஸ்-இன் இந்த சேவை வாயிலாக வாகனங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் விதமான மறு சீரமைப்பு பணிகளையும் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, இந்த சேவையில் இணைபவர்கள் வாழ்நாள் முழுக்க எந்தவொரு கவலையுமின்றி தங்களின் மின்சார வாகனத்தை வாடகை வாகன சேவையில் பயன்டுத்திக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
ஆனால், இந்த சேவைக்கான கட்டணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மை டிவிஎஸ்-இன் இந்த சேவை வாடகை வாகன ஓட்டுநர்களின் வளர்ச்சி மற்றும் தடையில்லா சேவையை வழங்குவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிகின்றது. தன்னுடைய இந்த சேவையை டிஜிட்டல் வாயிலாக மை டிவிஎஸ் வழங்கும் என்பதால் உடனடி தீர்வை அது வழங்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இந்த சேவையை தொடங்கிய கையோடு மோவிங் (MoEVing) நிறுவனம் மை டிவிஎஸ் உடன் இணைந்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல நிறுவனங்கள் மை டிவிஎஸ்-இன் இந்த சேவைக்காக கூட்டணியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோவிங் ஓர் மின்சார வாகனங்களைச் சார்ந்து லாஜிஸ்டிக் சேவையை நாட்டில் மேற்கொண்டு வருகின்றது.
எனவே, கால் டாக்சி நிறுவனங்கள் மட்டுமல்ல அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களும் மை டிவிஎஸ் உடன் இணையலாம் என தெரிகின்றது. முன்னணி பிராண்டுகள் பல சுற்றுச்சூழலின் நலனைக் கருத்தில் கொண்டு மின்சார நான்கு சக்கர வாகனங்களை தங்களின் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மை டிவிஎஸ் பீரியாடிக் மெயின்டனன்ஸ் சர்வீஸ், டென்ட்டுகளை சரி செய்தல், மழைக் கால வாகன பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றது. இதுதவிர, வாகன ஏசி சர்வீஸ், கார் ஸ்பா மற்றும் க்ளீனிங், வாகன டீடெய்லிங் சர்வீஸ், வாகனத்தின் திறனை அதிகரிக்கச் செய்தல் மற்றும் பிற பழுதுகளை நீக்கும் பணி உள்ளிட்டவற்றை அது மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக சேவையையும் அது தொடங்கி இருக்கின்றது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன், ஹோண்டா, டொயோட்டா, ஸ்கோடா, கியா, ஃபோர்டு, எம்ஜி மற்றும் ரெனால்ட் என பலதரப்பட்ட பிராண்டு வாகனங்களுக்கும் இந்த சேவையை அது வழங்கி வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதமாக வீட்டுக்கே வந்து வாகனங்களை பிக்-அப் செய்வது, ஆன்லைனில் சர்வீஸை டிராக் செய்யும் வசதி போன்றவற்றையும் மை டிவிஎஸ் வழங்கி வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே மின்சார வாகனங்களை வாடகை வாகன சேவையில் பயன்படுத்தி வருபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் சேவையை அது தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தனி நபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமல்ல வாடகை வாகன பிரிவிலும் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், போதிய சார்ஜ் மையங்கள் இல்லாத காரணத்தினால் சிலர் மின்சார வாகனங்களை நம்பி கால் டாக்சி சேவையில் களமிறங்க தயக்கம் காட்டுகின்றனர். இத்தகையோருக்கு மிகப் பெரிய ஆறுதலை மை டிவிஸ்-இன் புதிய சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








