வெறும் ரூ350க்கு ரயில் முதல் வகுப்பு பெட்டியில் போகலாமா? ரயிலே வித்தியாசமா இருக்குதே!
நீங்கள் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணிக்க வேண்டும் என நினைத்தால் உங்கள் நினைவிற்கு முதலில் வருவது அதிக காஸ்ட்லியாக இருக்கும் என்பதுதான். ஆனால் வெறும் ரூ350 செலவில் முதல் வகுப்பு பெட்டியில் ஒருவர் 500 கி.மீ பயணித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதை இவர் இந்தியாவில் செய்யவில்லை. மியான்மரில் செய்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரயிலில் முதல் வகுப்பு பெட்டி என்றால் நாம் ஏசி, பெரிய ஜன்னல்கள், நல்ல உணவு எல்லாம் கிடைக்கும் என நினைத்திருப்போம். ஆனால் மியான்மர் நாட்டில் முதல்வகுப்பு ஏசி பெட்டியில் ஏசி கூட கிடையாது. இந்த பெட்டி ஸ்லீப்பர் பெட்டியாக இல்லாமல் சீட்டர் பெட்டிகளாக உள்ளன. இந்நிலையில் மியான் மர் நாட்டிற்கு சுற்றுலா சென்ற விலாக்கர் ஒருவர் இந்த ரயிலில் பயணம் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இவர் இந்த ரயிலில் 350 மைல் பயணம் செய்யதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக இவர் இந்திய மதிப்பில் வெறும் ரூ350 மட்டுமே செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில் 350 மைல் தூரத்தை கடந்து கடந்து செல்ல 15-20 மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ரயில் பயணத்தின் போது மது அருந்துவது, புகைபிடிப்பது எல்லாம் சட்டப்படி தவறான விஷயம் ஆகும்.
ஆனால் மியான்மர் நாட்டில் ரயில் பயணத்தில் புகைபிடிப்பதற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போக நம்மூர் ரயிலில் தண்ணீர் பாட்டில் விற்பது போல அந்த நாட்டு ரயிலில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களும் ரயிலில் விற்பனைசெய்யப்படுகிறது. பயணிகள் வேண்டுமானால் அதை வாங்கி ரயிலிலேயே குடித்துக்கொள்ள முடியும். இந்த ரயிலில் ஏசி கிடையாது.ஃ பேன் மட்டுமே உள்ளது.

இங்குள்ள சீட்கள் ஸ்லீப்பர் சீட்களாக இல்லாமல் அமர்ந்து செல்லும் வகையிலான சீட்களாகவே உள்ளன. முதல் வகுப்பு பெட்டி என்பதால் சீட்கள் வசதியாக வழங்கப்பட்டுள்ளது. சாய்வு வசதி மற்றும் கால்களுக்கான சப்போர்ட் வசதியுடன் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ரயிலில் வெளியில் உள்ள சீனரியை பார்க்க பெரிய ஜன்னல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்ள ரயில்களில் அப்பர் கிளாஸ், முதல் வகுப்பு மற்றும் சாதாரண வகுப்பு என்று 3 விதமான ரயில் பெட்டிகள் உள்ளது. இங்கு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் அனைத்து ரூட்களிலும் கிடையாது. சில குறிப்பிட்ட ரூட்களில் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில்கள்உள்ளன. ரங்கூன் முதல் மண்டலே வரை செல்லும் ரயில் ரங்கூன் முதல் பாகேன், மண்டலே முதல் மைட்கைட்னியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் உள்ளது.

மிக குறைந்த செலவில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தது குறித்து இந்த யூடியூபர் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.இதனால் இந்தியா முழுவதும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.பலர் இந்த ரயிலுக்காக இந்திய ரயில்கள் சிறப்பாக இருப்பதாக கூறி வருகின்றனர். சிலர் மியான்மர் ரயிலில் புகைபிடிப்பதற்கான இடம் மற்றும் மது பானங்களுக்கு அனுமதி குறித்து ஆச்சியப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இது எல்லாம் தடையில் இருந்தாலும் பலர் சட்டவிரோதமாக இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மியான்மர் நாட்டில் வெறும் ரூ350க்கு ரயிலில் முதல் வகுப்பில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்பது ஆச்சியரியமான விஷயம் தான். இந்தியாவில் சில ஆயிரங்கள் செலவாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









