மொபைல் போன் விற்றே கோடீஸ்வரர் ஆனவர்... மகனுக்கு பிறந்த நாள் பரிசாக 'காஸ்ட்லீ' கிஃப்ட்

லேண்ட் ரோவர் (Land Rover), உலகம் முழுவதும் பிரபலமான கார் நிறுவனம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த பிரிட்டிஷ் கார் நிறுவனத்தின் கார்களை நம் நாட்டிலும் பலர் ஆர்வமாக வாங்குகின்றனர். லேண்ட் ரோவர் கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பதால், செல்வந்தர்களாலும், தொழிலதிபர்களாலும் மட்டுமே வாங்க முடிகிறது. அந்த வரிசையில், கேரளாவின் முன்னணி மொபைல் போன் (Mobile Phone) விற்பனையாளர் புதியதாக லேண்ட் ரோவர் கார் ஒன்றை தனது மகனுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

பணக்கார குடும்பங்களில் அவ்வப்போது புதியது, புதியதாக சொகுசு கார்களை வாங்குவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில்தான், கேரளாவின் முன்னணி மொபைல் போன் சில்லறை விற்பனை நிறுவனமான மை ஜி (myG)-இன் உரிமையாளரான ஏகே ஷாஜி (A.K Shaji) அவரது மகனுக்காக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரை வாங்கி உள்ளார்.

ak shaji gifts land rover

மொபைல் போன் மட்டுமின்றி, லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவி போன்ற இதர வீட்டு உபயோக மின்சாதன பொருட்களையும் பல்வேறு விதமான பிராண்ட்களில் விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான சில்லறை விற்பனை கடலாக மை ஜி விளங்குகிறது. இதுவரையில் சுமார் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டியுள்ள நிறுவனம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலமாக, ஏகே ஷாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் மிக செல்வ செழிப்பான வாழக்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனை மீண்டும் உலகிற்கு வெளிக்காட்டும் விதமாகவே சமீபத்திய நிகழ்வு நடந்துள்ளது. மைஜி ஓனர் ஏகே ஷாஜி தனது மகன் முகமது ஹனி (Muhammed Hani)-க்காக வாங்கிய பிராண்ட்-நியூ லேண்ட் ரோவர் கார் அவரது வீட்டிற்கே வந்து ஹோம் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

ak shaji gifts land rover

அதுவும் சாதாரணமாக இல்லை... இந்த டெலிவிரிக்காக ஓர் சிறிய நிகழ்ச்சியை வீட்டின் வளாகத்திற்குள் ஏகே ஷாஜி ஏற்பாடு செய்துள்ளார். பெரிய கனரக லாரியில் கொண்டுவரப்பட்ட லேண்ட் ரோவர் கார், ஏகே ஷாஜியின் வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த சிவப்பு கம்பளத்தில் நிறுத்தப்பட்டு, குடும்பத்தினர் முன்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, புதிய லேண்ட் ரோவர் காரின் அடர் பச்சை நிறத்துக்கு இணையாக ஏகே ஷாஜியின் குடும்பத்தினர் அடர் பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் உடை அணிந்து இந்த கார் டெலிவிரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர். ஏகே ஷாஜியின் மகன் முகமது ஹனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்த காஸ்ட்லீயான பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ak shaji gifts land rover

மேலும், இந்த நிகழ்வுகளை வீடியோவாக காட்சிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டதோடு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் ஏகே ஷாஜி தெரிவித்துள்ளார். முகமது ஹனி பெற்றிருப்பது, லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) காரை ஆகும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.03 கோடியில் இருந்து ரூ.2.85 கோடி வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்டு இருப்பது, டிஃபெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் அதிகமாக வரும். இருப்பினும், பல ஆயிரம் கோடி ரூபாய்களில் பிஸ்னஸ் செய்பவருக்கு சில கோடி ரூபாய்களில் கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 11:35 [IST]
English summary
Myg mobile shop owner ak shaji gifts land rover defender to his son
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X