ஒரு படம் பாக்கற நேரத்துல சென்னைல இருந்து இந்த ஊருக்கு போயிரலாமா! ஆம்னி பஸ்கள் பொழப்புல மண்ண அள்ளி போட்டுடாங்க!

இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு (Vande Bharat Express Trains) பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்கெட் கட்டணம் (Ticket Price) சற்று அதிகம் என்றாலும் கூட, பயண நேரம் (Travel Time) குறைவதாலும், அதிநவீன வசதிகள் (Features) இருப்பதாலும், பயணிகள் விரும்பி பயணம் செய்கின்றனர்.

இதன் காரணமாக மைசூர்-சென்னை (Mysore-Chennai) இடையே கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 12.20 மணிக்கு மைசூர் சென்றடையும். மறுமார்க்கமாக மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். 20607/20608 என்ற எண்களில் (Train Numbers) இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Vande Bharat Express

இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மைசூர்-சென்னை இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (Second Vande Bharat Express Train), கடந்த மார்ச் 12ம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் (Prime Minister Narendra Modi), இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆனால் நேற்று வரை (ஏப்ரல் 4), பெங்களூர் எஸ்எம்விடி (Bangalore SMVT)-சென்னை சென்ட்ரல் வரையே மட்டும்தான், இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. மைசூருக்கு இயக்கப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து (இன்று முதல்) இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூர் வரை நீட்டிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Vande Bharat

இதன்படி இன்று காலையில் இருந்து இந்த 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மைசூர்-சென்னை சென்ட்ரல் இடையே முழுமையாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்கு மைசூரில் இருந்து பயணத்தை தொடங்கும். சரியாக மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைந்து விடும். இடையில் மாண்டியா, பெங்களூர் கேஎஸ்ஆர் (Bangalore KSR), கேஆர் புரம் மற்றும் காட்பாடி என 4 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சரியாக இரவு 11.20 மணிக்கு மைசூர் சென்றடையும்.

இடையில் காட்பாடி, கேஆர் புரம், பெங்களூர் கேஎஸ்ஆர் மற்றும் மாண்டியா ஆகிய 4 ரயில் நிலையங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும். 20663/20664 என்ற எண்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. திட்டமிட்டபடி, இன்று காலை மைசூரில் இருந்தும், மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

இன்று முதல் வரும் ஜூலை 29ம் தேதி வரை புதன் கிழமைகளில், இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்காது. வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயங்கும். ஆனால் வரும் ஜூலை 30ம் தேதியில் இருந்து வியாழக்கிழமைகளில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்காது. வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் வழக்கம் போல் இயங்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் பயணம் செய்யக்கூடிய ஐடி ஊழியர்கள் மற்றும் தொழில் துறையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.

பெங்களூர் கேஎஸ்ஆர்-ல் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். பயண நேரம் 4 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள் ஆகும். கேஆர் புரத்தை எடுத்து கொண்டால், அங்கிருந்து காலை 8.06 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடைந்து விடும். இதற்கான பயண நேரம் 4 மணி நேரம் மற்றும் 19 நிமிடங்கள்தான்.

மறுமார்க்கத்தில் மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் கேஎஸ்ஆர் சென்றடையும். பயண நேரம் 4 மணி நேரம் மற்றும் 25 நிமிடங்கள்தான். கேஆர் புரத்தை எடுத்து கொண்டால், மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.48 மணிக்கே சென்றடைந்து விடும். பயண நேரம் வெறும் 3 மணி நேரம் மற்றும் 48 நிமிடங்கள்தான்.

கேஆர் புரம்-சென்னை சென்ட்ரலுடன் ஒப்பிடும்போது, சென்னை சென்ட்ரல்-கேஆர் புரம் இடையேயான பயண நேரம் 31 நிமிடங்கள் குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே சென்னையில் இருந்து பெங்களூர் வருபவர்களுக்கு இந்த ரயில் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். கேஆர் புரம் ரயில் நிலையத்தைதான், ஐடி ஊழியர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பயண நேரம் மிகவும் குறைவு என்பதால், ஆம்னி பஸ்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. பெங்களூர் நகருக்கு வெளியே உள்ள விமான நிலையத்திற்கு பயணிக்கும் நேரம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் கணக்கில் கொண்டால், விமானத்தை காட்டிலும் கூட இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெஸ்ட் சாய்ஸ்தான்!

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 22:34 [IST]
English summary
Mysore chennai second vande bharat express train begins journey all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+