ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

பேங்க் வேலையை உதறி தள்ளிய அதிசய மனிதருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அது ஏன்? என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

கர்நாடக மாநிலம் மைசூர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயை எப்படி கவனித்து கொள்ள வேண்டும்? அவர்களிடம் எந்த அளவிற்கு பாசத்தை காட்ட வேண்டும்? என்பதற்கு கிருஷ்ண குமார் ஒரு எடுத்துக்காட்டு. 39 வயதாகும் கிருஷ்ண குமார் தாய் பாசத்தில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

கிருஷ்ண குமாரின் தாய் பெயர் சூடாரத்னா. இவருக்கு 70 வயதாகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதிக்கு முன்பாக சூடாரத்னா தனது சொந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. ஆனால் அதன்பின் காட்சிகள் மாறின. இன்று இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு அவர் பயணம் செய்துவிட்டார்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

இதற்கு காரணம் கிருஷ்ண குமார். தாய் சூடாரத்னா வெளியே பெரிதாக எங்கும் சென்றதில்லை என்பதால், அவருக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றி காட்ட நினைத்தார் கிருஷ்ண குமார். எனவே கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி மைசூரில் இருந்து 'Mathru seva sankalpa yatra' எனும் பெயரில் அவர் யாத்திரையை தொடங்கினார்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரைதான் இந்த யாத்திரைக்கு அவர் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தற்போது இந்த ஸ்கூட்டருக்கு 20 வயதாகிறது. ஆனால் இன்னமும் சலிக்காமல் கிருஷ்ண குமாரையும், அவரது தாயையும் சுமந்து கொண்டு இந்தியா முழுக்க கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர். உண்மையில் இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

கிருஷ்ண குமாரும், அவரது தாய் சூடாரத்னாவும் தற்போது வரை 48,162 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்து விட்டனர். இந்த பயணத்தில் பல்வேறு புனித தலங்களுக்கும் அவர்கள் சென்றுள்ளனர். ஒரு காலத்தில் தனது சொந்த ஊரை விட்டு வெளி உலகமே தெரியாமல் இருந்த சூடாரத்னா இன்று கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பயணம் செய்து விட்டார்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

அவர்களின் பயணம் தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களுக்கு தாயை கூட்டி செல்ல கிருஷ்ண குமார் திட்டமிட்டுள்ளார். கிருஷ்ண குமாரின் இந்த பயணத்தை பற்றி அறிந்த மனோஜ் குமார் என்பவர், இந்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டார். அவரால் நேற்று இரவு (அக்டோபர் 22) இது தொடர்பாக ட்விட் செய்யப்பட்டது.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

கிருஷ்ண குமார் மற்றும் அவரது தாய் தொடர்பான வீடியோ ஒன்றையும் மனோஜ் குமார் வெளியிட்டிருந்தார். எனவே மனோஜ் குமாரின் ட்விட் உடனடியாக வைரலாக தொடங்கியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவையும் அந்த ட்விட் சென்றடைந்தது. ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

இந்த சூழலில் கிருஷ்ண குமாரின் பயணம் தொடர்பாக அறிந்த ஆனந்த் மஹிந்திரா, அந்த தகவலை பகிர்ந்த மனோஜ் குமாருக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ண குமாரை என்னுடன் தொடர்பு கொள்ள வைத்தால், அவருக்கு தனிப்பட்ட முறையில் மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி கார் ஒன்றை பரிசளிக்க விரும்புவதாகவும் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

இதன் மூலம் கிருஷ்ண குமார் இனி தனது தாயை காரில் அழைத்து செல்ல முடியும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஆனந்த் மஹிந்திராவிற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆனந்த் மஹிந்திரா பரிசளிக்க விரும்பும் காரை கிருஷ்ண குமார் ஏற்றுக்கொள்வாரா? என்பது சந்தேகமே.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

ஏனெனில் கிருஷ்ண குமார் தற்போது பயணம் செய்து வரும் ஸ்கூட்டரை அவரது தந்தை கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பரிசளித்தாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்கூட்டரில் அவர் தனது தந்தையை பார்க்கலாம். தனது தந்தை மற்றும் தாயுடன் பயணம் செய்வதை போன்று உணரலாம். எனவே ஆனந்த் மஹிந்திராவின் பரிசை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்பது நிச்சயமாக சந்தேகம்தான்.

ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா?

முன்னதாக கிருஷ்ண குமார் பற்றிய மற்றொரு ஆச்சரியமான தகவல் ஒன்றை மனோஜ் குமார் தனது ட்விட் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். தனது தாயை யாத்திரை அழைத்து செல்வதற்காக பேங்க் வேலையை கிருஷ்ண குமார் உதறி தள்ளியதாக மனோஜ் குமார் கூறியுள்ளார். இப்படி ஒரு மனிதரை பார்ப்பது உண்மையில் ஆச்சரியமாகதான் இருக்கிறது!!

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2019, 15:09 [IST]
English summary
Mysore Man Takes 70-year-old Mother On a 48,000 KM Pilgrimage On His Bajaj Chetak Scooter: Anand Mahindra Offers KUV 100 NXT. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+