கார்களில் வழங்கப்படும் ஏர்-ப்யூரிஃபையர்கள் உண்மையில் அதன் வேலையை செய்வதில்லையா? நிஜத்தை தெரிஞ்சிக்கலாம் வாங்க!

இன்றைய நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான கருவிகளில் காற்று வடிகட்டியும் ஒன்றாகும். இந்த ஏர்-ப்யூரிஃபையர்கள் காருக்குள் இருக்கும் காற்றை வடிக் கட்டி, சுத்தமான காற்றை வழங்கும் திறன் கொண்டவை. இதன் வாயிலாக, காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு தூய்மையான காற்று கிடைப்பது உறுதி செய்யப்படும்.

எனவேதான் இன்றைய கால நவீன கார்களில் கட்டாயம் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த ஏர் ப்யூரிஃபையர்கள் காற்றில் கலந்திருக்கும் மாசுகளை மட்டுமின்றி வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழிக்கும் கூறப்படுகின்றது. அதாவது, காற்றில் கலந்திருக்கும் நுண்ணுய உயிர்கள் மற்றும் கிருமிகளைக் கூட அழிக்கும் திறன் கொண்டதே இந்த ஏர்-ப்யூரிஃபையர்கள் ஆகும்.

 Car air purifier

ஆனால், இந்த அம்சங்களை அது கட்டாயம் செய்கின்றதா என்பது பலரின் கேள்விக் குறையாக இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல கட்டுக்கதைகள் ஏர்-ப்யூரிஃபையர் சுற்றி வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாகவே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் தொகுத்து வழங்கி இருக்கின்றது. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காரில் வழங்கப்படும் ஏர் ப்யூரிஃபையர்கள் காற்றில் உள்ள அனைத்து தூசிகளையும் வடிகட்டுமா? நிச்சயம் இது இந்த பணியைச் செய்யும். நீங்கள் டெல்லி போன்ற அதிக மாசினால் தவிக்கும் நகரத்தில் இருக்கின்றீர்கள் என்றால், இதன் பயன்பாடு கண்கூடாக தெரியும். காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் அனைத்தும் முழுமையாக இது ஃபில்டர் செய்யும்.

Nebelr car air purifier ionizer

ஆகையால், அதிக மாசுள்ள பகுதியில் உங்கள் கார் பயணிக்கிறது என்றால்கூட நீங்கள் தைரியமாக வெளியே செல்லலாம். காருக்குள் இருக்கும் காற்றை முழுமையாக இது வடிகட்டி நீங்கள் சுவாசிக்க உகந்ததாக வழங்கும். இது காற்றை வடிகட்டுகிறது என்பதற்கு சான்றாக, அதனுள் இருக்கும் ஸ்பாஞ்சு இருக்கின்றது.

ப்யூரிஃபையர் சேர்க்கப்பட்ட புதிதில் இந்த ஸ்பாஞ்சு புத்தம் புதிதாகவும் பார்க்க தெளிவாகவும் இருக்கும். ஆனால், சில நாட்கள் பயன்பாட்டிற்கு பின்னால், அதைக் கழட்டி பார்த்தால் அதிகப்படியான மாசால் அந்த ஸ்பாஞ்சு நிறைந்திருக்கும். இதுவே, ஏர்-ப்யூரிஃபையர் வேலை செய்கிறது என்பதற்கு சான்றாக இருக்கின்றது.

Philips gopure gp

இந்த ஏர்-ப்யூரிஃபையர்கள் விலை அதிகம், மேலும், பராமரிப்பதும் கடினம்னு சொல்றாங்களே அது உண்மையா? முன்பைக் காட்டிலும் இப்போது காற்று வடிகட்டிகள் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றன. அதேபோல், அவற்றை பராமரிப்பது சற்று எளிதாகவே இருக்கின்றது. மேலும், ஏதேனும் பாகனம் பழுதாகியிருந்தால், அதை நீக்கிவிட்டு புதிதாக நாமே மாற்றிக் கொள்ள முடியும்.

இதற்கு தனியாக மெக்கானிக்கைக்கூட தேடி செல்ல வேண்டியிருக்காது. குறிப்பாக, ஏர்-ஃபில்டர்களை மாற்றுவது மிக மிக சுலபமானதாக இருக்கின்றது. இவற்றின் செயல்திறன் எப்படி இருக்கும்? ஏர்-ஃபில்டரை ஆன் செய்த உடனே காருக்குள் இருக்கும் காற்று வடிகட்டப்படுவிமா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. சிறிது நேரம் இதற்கு அவை எடுத்துக் கொள்ளும்.

அதேவேளையில், உங்கள் ஏர்-ப்யூரிஃபையர் புதிதாக இருந்தால் அதன் செயல்திறன் மிக மிக வேகமாக இருக்கும். அதுவே சற்று பழையதாக இருப்பின் அதன் செயல்பாட்டில் லேசாக சுணக்கம் இருக்கும். அதேநேரத்தில் காற்றை சுத்தம் செய்வதில் அது தவறாது என கூறப்படுகின்றது. அதேநேரத்தில் அனைத்து கார் காற்று வடிகட்டுகளும் ஒரே மாதிரி வடிவமைக்கப்படுவதில்லை.

அவை பிராண்டிற்கு ஏற்ப மற்றும் தொகைக்கு ஏற்ப மாறுபட்டுக் காட்சியளிக்கும். ஏர்-ஃபில்டர்கள் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்குமா? அனைத்து விதமான கார் காற்று வடிகட்டிகளும் இந்த பணிகளை செய்துவிடுவதில்லை. ஒரு சில ஏர் ஃப்யூரிஃபையர்களிலேயே இந்த வசதி வழங்கப்படுகின்றது.அவை காற்றில் உள்ள தூசி உடன் சேர்த்து துர்நாற்றத்தையும் வடிக்கட்டும். உதாரணமாக, காருக்குள் இருக்கும் சிகரெட் புகையை அதனால் நீக்க முடியும். ஆனால், அதனால் ஏற்பட்ட நாற்றத்தை வெளியேற்ற முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்று வடிகட்டிகளால் பல்வேறு நன்மைகள் கிடைத்துக் கொண்டிருப்பதாக தரவுகள் சில தெரிவிக்கின்றன. வைரஸ் மற்றும் கிருமிகளிடம் இருந்து பயணிகளைப் பாதுகாப்பதோடு சுத்தமான காற்றிற்கும் அது வழிவகுக்கின்றது. இதனால்தான் பலர் இந்த அம்சம் கொண்ட காரை விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதுதவிர ஒரு சிலர் இந்த அம்சத்தை வெளி மார்கெட்டில் இருந்து வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 4, 2023, 22:30 [IST]
English summary
Myths and facts about air purifiers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X