இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தென் சென்னை தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத காரில் வேட்பாளர் வந்த விவகாரம் குறித்தும், இது குறித்த முழுமையான விபரங்களையும் இங்கே காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் என்பது தற்போது நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது செய்திகளில் வேட்பு மனு தாக்கல் குறித்த தகவல்கள் பெரிய அளவில் இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில் தென் சென்னை தொகுதியின் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியிலிருந்து தமிழ்ச்செல்வி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் ஊர்வலமாக வந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஆடி நிறுவனத்தின் ஏ4 காரில் ஊர்வலமாக வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
குறிப்பிட்ட இந்த ஆடி ஏ4 கார் ரூஃப் பகுதி இல்லாமல் காருக்குள் அவர் நின்று கொண்டே தனது ஆதரவாளர்களுக்கு கைகாட்டி செல்லும்படி இந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் பயணித்த இந்த ஆடி ஏ4 கார் இன்சூரன்ஸ் இல்லாத கார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வீடியோக்களில் இருந்த ஆடி ஏ4 காரின் பதிவு என்பது TN 14 L 5069 என்ற பதிவெண் கொண்டதாக இருந்தது. இந்த பதிவெண்ணை பரிவாகன் தளத்தில் தேடுதல் செய்த போது குறிப்பிட்ட காருக்கு கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதியே இன்சூரன்ஸ் என்பது முடிந்துவிட்டது என இருக்கிறது. அதன்பின்னர் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
பொதுவாக ஒரு வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்தால் இன்சூரன்ஸ் வழங்கிய நிறுவனம் அந்த வாகனம் குறித்த தகவல்களை பரிவாகன் தளத்தில் பதிவேற்றம் செய்து விடும். இதன்மூலம் தளத்தில் சோதனை செய்தாலே குறிப்பிட்ட வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா இல்லையா என்ற தகவல் தெரிய வரும். இதன்படி நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்செல்வி பயணித்த காரில் இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் இவர் இன்சூரன்ஸ் இல்லாத காரில் பயணித்திருந்தாலும் பயணித்து இருந்த கார் சற்று வித்தியாசமாக இருந்ததால் பலர் கவனத்தை ஈர்த்தது. ஆடி ஏ4 காரில் இவர் ரூஃப் இல்லாத மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரில் பயணித்துள்ளார். இதன் மூலம் இவர் காரில் நின்று கொண்டே பயணித்தார். இவ்வளவு அதிக விலை கொண்ட இந்த காரை இவர் பிரத்தியேகமாக தேர்தலுக்காக மாடிஃபிகேஷன் செய்திருக்கலாம் என தெரிகிறது.
ஆடி நிறுவனத்தின் இந்த ஏ4 காரை பொருத்தவரை டிடிஏ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இதில் 1968 சிசி டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 190 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ஆடி ஏ4 கார் இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த காராகும். தற்போது இந்த கார் விற்பனையில் இல்லை. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் கார் தான் விற்பனையில் உள்ளது. நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்செல்வி பயணித்த குறிப்பிட்ட கார் 2017-ம் ஆண்டு சென்னை சோளிங்கநல்லூர் ஆர்டிஓ-வில் பதிவு செய்யப்பட்ட காராகும்.
நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி பயணித்த இந்த ஆடி ஏ4 கார் கடைசியாக சென்னையில் விற்பனையில் இருந்தபோது, ரூபாய் 52.20 லட்சம் என்ற விலையில் விற்பனையிலிருந்து. அதன் பின்பு இந்த கார் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வேறு கார்கள் தான் தற்போது விற்பனையில் வந்துவிட்டன. இருந்தாலும் இந்த காரை மாடிஃபிகேஷன் செய்து தமிழ்ச்செல்வி பயன்படுத்தி உள்ளது பார்ப்பவர்களை ஈர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை இப்படியாக வேட்பாளர்கள் பயணிக்கும் கார்கள் மற்றும் அவர்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் வாகனங்கள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும். அவையெல்லாம் மக்களின் கவனத்தை பெறும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பயன்படுத்திய கார் பலர் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








