சின்ன தப்புனால ஒரு பயணி கூட புக் செய்யாமல் காலியாக பறந்த விமானம்! என்ன தப்பு தெரியுமா?
நேபால் நாட்டைச் சேர்ந்த விமானங்கள் பயணிகளே இல்லாமல் காலியாக விண்ணில் பறந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த விமானம் அறிவிக்கப்பட்டதால் இதில் பயணிகள் யாரும் புக் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நேபால் நாட்டிற்கு சொந்தமான நேபால் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் விமான சேவைகளை வழங்கி வருகிறது. நேபால் சிறிய நாடுதான் என்பதால் அங்கு வெகு சில விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றன. நேபாளை சுற்றியுள்ள குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே இந்நாட்டின் விமான சேவைகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேபால் நாட்டில் புத்தர் பிறந்த இடமாக கருதப்படும் பைராகவா என்ற பகுதியில் கெளதம புத்தர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் என்ற புதிய விமான நிலையத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அந்நாடு திறந்தது. இந்த விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பைராகவா என்ற பகுதி நேபால் நாட்டின் தலைநகரான காட்மாண்டு வில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த பகுதி மிகப்பெரிய நகரமோ அல்லது தொழில் வசதிகள் நிறைந்த நகரமோ இல்லை. இது புத்தர் பிறந்த இடம் என்பதால் ஆன்மீக தலமாக மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் இங்கு நேபாள் நாட்டு அரசு சர்வதேச விமான நிலையத்தை கட்டமைத்து அங்கிருந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கௌதம புத்தர் இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து டில்லிக்கும் மற்றொரு விமானம் காட்மாண்டு வழியாக ஹாங்காங்கிற்கும் செல்ல நேபால் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான சேவையை அறிவித்தது. இந்த விமானங்களுக்கான புக்கிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. புக்கிங் துவங்கிய 2 நாளிலேயே விமானம் பறக்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விமானத்தில் பயணிக்க யாருமே புக் செய்யப்படவில்லை. பயணிகள் யாருமே புக் செய்யப்படாமல் இந்த விமானம் காலியாக வானில் பறந்தது. குறிப்பாக பைராகவா பகுதியிலிருந்து காட்மாண்டு வழியாக ஹாங்காங் செல்லும் விமானம் பைராகவாவிலிருந்து காட்மாண்டுவிற்க்கு காலியாக பறந்து வந்து பின்பு பயணிகளை ஏற்றிக்கொண்டு அது ஹாங்காங்கிற்கு பறந்தது.
நேபால் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கான விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய இரண்டு விமானங்கள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் இந்த விமானங்களுக்கு போதுமான வரவேற்பு இல்லை. இந்த இரண்டு விமானங்களும் தற்போது வாரம் ஒருமுறை அதாவது செவ்வாய்க்கிழமை மட்டும் பைராகவா பகுதியில் இருந்து டெல்லிக்கும், ஹாங்காங்கிற்கும் தனித்தனி விமானங்கள் செல்கின்றன.
இந்த விமானங்கள் தங்கள் முதல் பயணத்திலேயே எந்த பயணிகளும் இல்லாமல் காலியாக பறந்துள்ளது. பயணிகள் இல்லை என்றால் ஏன் பறக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்ற கேள்வி பலருக்கு தோன்றலாம். டெல்லி வரும் விமானத்தை பொறுத்தவரை டெல்லியிலிருந்து அந்த விமானத்திற்கு ரிட்டன் செல்லும்போது பயணிகள் புக் செய்து இருக்கலாம். அவர்களுக்கு அங்கு விமானம் வேண்டும் என்பதற்காக இந்த விமானம் பயணிகள் இல்லாமல் காலியாக பறந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
ஹாங்காங் விமானத்தை பொறுத்தவரை முன்னரே சொன்னபடி இது காட்மாண்டுவில் நின்று செல்லும் விமானம் என்பதால் காட்மாண்டு நீங்கள் இந்த விமானத்தை புக் செய்து இருப்பார்கள் அவர்களுக்காக விமான சேவையை வழங்க இது பைராகவா பகுதியில் இருந்து காட்மாண்டு விற்கு காலியாக பறந்து இருக்கும்.
இது குறித்து நேபால் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறும்போது இது முதல் சேவை என்பதால் பயணிகளுக்கு புக் செய்யப் போதிய காலம் இல்லை. இதனால் விமானம் காலியாக பறந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் பயணிக்கும் இந்த விமானத்தில் பயணிகள் புக் செய்து விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற பெரிய நாடுகள் விமான சேவையை வழங்குவது எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் நேபால் போன்ற சிறிய நாடுகள் விமான சேவையை வழங்குவதே மிகப்பெரிய சவாலான விஷயம் தான். அந்த நிலையில் அந்நாட்டிற்கு இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் தொடர்ந்து இந்த மாதிரியான நிலை இல்லாமல் இந்த விமானங்களில் பயணிகள் பயணிப்பார்கள் என நம்புவோம்.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








