செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய திருநங்கை... அவரா இது! நல்லா உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் அடையாளமே தெரியுது!
கேரள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நபர் நதீரா மெஹ்ரின் (Nadira Mehrin). திருநங்கையான இவர், ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளம் பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக நதீரா மெஹ்ரின் மாறினார். இவர் தற்போது கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது நிஸான் மைக்ரா (Nissan Micra) ஆகும். நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அது நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகும்.
அப்படி இருக்கும்போது நதீரா மெஹ்ரின் எப்படி நிஸான் மைக்ரா காரை வாங்கியிருக்க முடியும்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. நதீரா மெஹ்ரின் யூஸ்டு கார் மார்க்கெட்டில், நிஸான் மைக்ரா காரை வாங்கியுள்ளார். நிஸான் மைக்ரா கார் ஒரு சமயத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.

ஆனால் விற்பனை 'டல்' அடித்தது மற்றும் பிஎஸ்6 விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிஸான் மைக்ரா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த நிஸான் மைக்ரா கார், கடந்த சில வருடங்களுக்கு முன்பே விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது.
இந்திய சந்தையில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது 5.99 - 8.13 லட்ச ரூபாய் என்ற விலையில் நிஸான் மைக்ரா கார் விற்பனை செய்யப்பட்டது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் இன்ஜினும், டீசல் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் இன்ஜினும் வழங்கப்பட்டு வந்தது.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டன. பல்வேறு வசதிகள் வழங்கப்பட்ட காரணத்தாலும், சிறப்பான மைலேஜ் கிடைத்த காரணத்தாலும், நிஸான் மைக்ரா வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் விற்பனை நிறுத்தப்பட்டு விட்ட காரணத்தால் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் மட்டும்தான் நிஸான் மைக்ராவை வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் மைக்ரா கார் விற்பனையில் இருந்த சமயத்தில், பிரபலமாகவே இருந்தது. ஆனால் விலை அதிகம், போதிய அப்டேட்கள் இல்லை என்பது போன்ற காரணங்களால் அதன் விற்பனை குறைய தொடங்கியது. இதன் விளைவாக இறுதியில் அதன் விற்பனையே நிறுத்தப்பட்டு விட்டது.
நதீரா மெஹ்ரின் தற்போது நிஸான் மைக்ரா காரை வாங்கியிருப்பதற்கு 2 காரணங்கள் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஒன்று நிஸான் மைக்ரா காரின் விசிறியாக அவர் இருக்கலாம். அல்லது அவரது பட்ஜெட்டிற்கு ஏற்ற விலையில் யூஸ்டு கார் மார்க்கெட்டில் நிஸான் மைக்ரா கிடைத்திருக்கலாம்.
இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தபோது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) போன்ற கார்களுடன் நிஸான் மைக்ரா போட்டியிட்டு வந்தது. இதில் ஃபோக்ஸ்வேகன் போலோவும் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








