மாமியார் வீட்டு சீதனமோ.. 20 லட்ச ரூபா பைக்கில் ஜாலியா ரைடு செய்த சமீபத்தில் 2வது திருமணம் முடித்த நடிகர்!

தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் நாக சைதன்யாவும் ஒருவர் ஆவார். இவர் விலை உயர்ந்த பைக் ஒன்றில் தமிழக சாலையில் வலம் வரும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. நாக சைதன்யா ஓட்டி வந்த அந்த பைக், பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த பைக்கை அவர் வாங்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ எந்தவொரு வார்த்தைகளும் வெளியாகவில்லை. அதேவேளையில், நாக சைதன்யா ஓட்டி வந்த அந்த பைக்கில் நிரந்தர பதிவெண்ணிற்கு பதிலாக, டிசி (Trade Certificate) நம்பர் பிளேட்டே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

எனவே, இது நாக சைதன்யாவால் சொந்தமாக்கப்பட்ட வாகனம்தானா என்பது துள்ளியமாக தெரியவில்லை. அதேநேரத்தில் நாக சைதன்யா இந்த பைக்கை ஓட்டி எஞ்ஜாய் செய்ததை வைத்து பார்க்கையில், அதை வாங்கும் நோக்கிலேயே நாக சைதன்யா ஓட்டி பார்த்திருப்பார் என்பதை யூகிக்க முடிகின்றது. இதேபோல், அவர் வலம் வந்தது சென்னை நகர சாலை என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

Naga chaitanya rides bmw motorcycle without helmet

இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை பதிவெண் கொண்ட வாகனங்கள் பல அந்த சாலையில் வலம் வரும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. சமீபத்திலேயே நாக சைதன்யாவின் இரண்டாவது திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. சமந்தா உடன் விவாகரத்து பெற்றநிலையில் நீண்ட காலமாக அவர் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையிலேயே சோபிதா துலிபாலா என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையிலேயே ஆடம்பர பைக்கில் அவர் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. மிக முக்கியமாக அவர் தலைக் கவசம் அணியாமல் பைக்கை ஓட்டி பார்த்ததால் மிகப் பெரிய சர்ச்சையும் இந்த நிகழ்வு கிளப்பி இருக்கின்றது.

பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தை இயக்கும்போது தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால், அதை நடிகர் பின்பற்றவில்லை. நடிகரின் இந்த விதிமீறல் செயலையும் தாண்டி, ஓர் விஷயம் பலரைக் கவரும் அமைந்திருக்கின்றது. அது அவர் பயன்படுத்திய அந்த பிஎம்டபிள்யூ பைக்தான்.

ஆர் 1250 ஜிஎஸ் (R 1250 GS) எனும் மாடலையே அவர் ஓட்டி பார்த்திருக்கின்றார். இது ஓர் அட்வென்சர் (Adventure) வகை பைக் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த பைக் ரூ. 20.55 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த பைக்கில் அதிக பவர்ஃபுல்லான மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. 1,250 சிசி திறன் கொண்ட மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 எச்பி பவரை 7,750 ஆர்பிஎம்மிலும், 143 என்எம் டார்க்கை 6,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். இத்தகைய திறன் கொண்ட மோட்டார்சைக்கிளையே மிகவும் பிசியான சாலையில் வைத்து நாக சைதன்யா, தலையில் கவசம்கூட அணியாமல் ஓட்டி பார்த்திருக்கின்றார். இதனாலேயே அவர் தற்போது சர்ச்சையிலும் சிக்கி இருக்கின்றார். விரைவில் இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்திலேயே நாக சைதன்யாவிற்கு திருமணம் ஆனதால் அவருக்கு அவருடை மாமியார் வீட்டில் இந்த பைக்கை சீதனமாக வழங்க முன் வந்திருக்கலாம் என்கிற கருத்துகளும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் வெளியாகவில்லை. அதேவேளையில், மிகப் பெரிய பைக் மற்றும் கார் கலெக்சனுக்கு சொந்தக்காரரே நாக சைதன்யாவும், அவருடைய அப்பா நாகர்ஜூன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, December 13, 2024, 18:44 [IST]
English summary
Naga chaitanya rides bmw r 1250 gs without helmet sparking safety concerns
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+