ஹேப்பியா ரெண்டாவது திருமணத்தை முடிச்சுட்டாரு.. இந்த விஷயத்துக்காகவே இவர கல்யாணம் பண்ணியிருப்பாங்க போல!
தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் நாக சைதன்யா-வும் ஒருவர் ஆவார். நடிகை சமந்தாவும், இவரும் நீண்ட காலமாக திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையிலேயே அவருக்கு தற்போது இண்டாவது திருமணம் ஆகி இருக்கின்றது. சோபிதா துலிபாலா என்பவரையே நாக சைதன்யா கரம் பிடித்திருக்கின்றார். தன்னுடைய துறையை போலவே இவர் அதிகம் வாகனங்களையும் நேசிக்கக் கூடியவராகக் காட்சியளிக்கின்றார். சொல்லப்போனால் வாகனங்கள் மீது தீராத காதல் கொண்ட நடிகர்களில் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த இவரும் ஒருவராக இருக்கின்றார்.
மேலும், வாகனங்கள் மீது கொண்டிருக்கும் அதீத காதலின் விளைவாக அவற்றை அதிக எண்ணிக்கையில் அவர் வாங்கி குவித்திருக்கின்றார். மேலும், அதை மிக சிறப்பான முறையிலும் பராமரித்து வருகின்றார். இதற்கே நாக சைதன்யாவை, சோபிதா இரண்டாவதாக மனம் முடிக்க ஓகே செல்லியிருப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த பதிவில் நாக சைதன்யா என்ன மாதிரியான வாகனங்களை வைத்திருக்கின்றார்?, அவற்றின் சிறப்புகள் என்ன என்பது? பற்றிய விபரங்களை பார்க்க இருக்கின்றோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS): இதுவே நாக சைதன்யா சமீபத்தில் வாங்கிய மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஆகும். இந்த ஆண்டின் மத்தியிலேயே அவர் இந்த காரை வாங்கினார். இந்த காரை நாக சைதன்யா வாங்கியதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் அக்காருடன் நிற்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த கார் மாடலின் ஒரே யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே சமீபத்தில் நாக சைதன்யா வாங்கினார். இந்தியாவில் இவர் மட்டுமல்ல இன்னும் பலரும் இந்த ஆடம்பர காரை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சமீபத்தில் நடிகர் அஜித்குமார்-ம் இந்த காரை வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது. மணிக்கு 296 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஓர் சூப்பர் கார் மாடலே இதுவாகும். இதனால் வெறும் 3.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB): நாக சைதன்யாவிடம் போர்ஷோ சூப்பர் கார் மாடல் மட்டுமல்ல 488 ஜிடிபி சூப்பர் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரு. 3.88 கோடி ஆகும். ஆமாங்க, சமீபத்தில் வாங்கிய போர்ஷே காரைவிட அதிக விலைக் கொண்டதே இது ஆகும்.
இந்த காரும் அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்காக இந்த காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 670 பிஎஸ் பவரை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் ஜி 63 ஏஎம்ஜி (Mercedes Benz G Class G 63 AMG): ஃபெர்ராரி சூப்பர் காருக்கு அடுத்தபடியாக நாக சைதன்யா வைத்திருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலாக இது இருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.28 கோடி ஆகும்.
இந்த அதீத விலைக்கு ஏற்ப ஸ்டைலிலும், சொகுசு வசதியிலும் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை தாங்கியிருப்பதிலும் இந்த கார் தலை சிறந்ததாக இருக்கும். இதனால்தான் நாக சைதன்யாவை கவர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த காரில் 4.0லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 577பிஎஸ் பவரை வெளியேற்றும். இந்த அளவிற்கு அதிக ஆற்றலை மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்கள் மற்றும் லக்சூரி அம்சங்களையும் தாங்கிய கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.
நிஸான் ஜிடி-ஆர் (Nissan GT-R): இந்த காரின் மதிப்பும் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமானதாக உள்ளது. ஆகும். அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடிய அதேவேளையில், அதிக கவர்ச்சியான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 333 கிமீ ஆகும். இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்குவதற்காக இந்த காரில் 3.8 லிட்டர் வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 570 பிஎஸ் வரை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.
பிஎம்டபிள்யூ 740எல்ஐ (BMW 740 Li): நாக சைதன்யா வைத்திருக்கும் மிக மிக அதிக விலைக் கொண்ட கார் மாடலாக இது இருக்கின்றது. இது விலை உயர்ந்த மற்றும் அதி நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட சொகுசு கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை ரூ. 1.30 கோடி ஆகும். இந்த காரே நாக சைதன்யாவின் ஃபேவரிட் கார் மாடல் என கூறப்படுகின்றது. தன்னுடைய பொதுவான பயணங்களுக்கே இந்த காரை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue): நாக சைதன்யாவிடம் இந்த ஆடம்பர காரும் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்தியாவின் முன்னணி பிரபலங்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், நாக சைதன்யாவிற்கும் இந்த கார் ஃபேவரிட்டானதாக உள்ளது.
எம்வி அகஸ்தா எஃப்4 (MV Agusta F4): நாக சைதன்யாவிடம் விலை உயர்ந்த கார்கள் மட்டுமல்ல, மிகவும் காஸ்ட்லியான பைக்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், அவர் பயன்படுத்தி வருவதிலேயே மிக மிக அதிக விலைக் கொண்டதாக அகஸ்தா எஃப்4 பைக் மாடல் காட்சியளிக்கின்றது.
இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 30 லட்சத்திற்கும் ஆகும். இந்த பைக்கில் ரூ. 998 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 192 பிஎஸ் பவரை வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும்.
டிரையம்ப் த்ரக்ஸ்டோன் ஆர் (Triumph Thruxton R): இது ஓர்1,200 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். பாரல்லல் ட்வின் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 98 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாக சைதன்யாவிடம் இந்த வாகனங்கள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவரை போலவே இவரின் அப்பா நாகர்ஜூனாவும் மிகப் பெரிய கார் விரும்பியாக இருக்கின்றார். சமீபத்திலேயே இந்த குடும்பத்தினர் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார் மாடலை வாங்கினர். இதேபோல், டொயோட்டா வெல்ஃபையர் எம்பிவி (Toyota Vellfire MPV) ரக காரையும் இந்த குடும்பத்தினர் சமீபத்தினர் வாங்கினர் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








