மே 13ம் தேதி மீண்டும் நாகை- காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து! டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா?
நாகபட்டினம் காங்கேயம் துறைமுகம் இடையேயான சிறிய கப்பல் போக்குவரத்து வரும் மே 13ஆம் தேதி மீண்டும் துவங்குகிறது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த சேவை பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த சேவையை துவங்க அரசு முன்வந்துள்ளது. இப்படியாக இந்த சேவையை மக்கள் எப்படி பயன்படுத்த முடியும் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவும் இலங்கையும் அருகே அருகே இருக்கும் நாடுகள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து இலங்கை மிக அருகில் இருப்பதால் கடல் வழி போக்குவரத்து என்பது இலங்கைக்கு மிக சுலபமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான சிறிய கப்பல் போக்குவரத்து மூலம் பயணிகள் போக்குவரத்தை நடத்த இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இதற்கு முன்னர் இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வந்த கப்பல் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா கடந்த ஆண்டு இலங்கையில் உள்ள காங்கிரஸ் துறைமுகத்தை புதுப்பிப்பதற்காக உதவி செய்தது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் உள்ள தமிழகம்-நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேயம் துறைமுகத்திற்கு கப்பல் சேவை துவங்கப்பட்டது.
பிரதமர் மோடி இந்த கப்பல் சேவையை துவக்கி வைத்தார். ஆனால் இந்த கப்பல் சேவை துவங்கப்பட்ட அடுத்த ஒரு சில நாட்களிலேயே இந்த சேவை பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. மக்களிடம் போதிய வரவேற்பின்மை இருந்தது. மேலும் கடலில் ஏற்பட்ட சீர்தோஷன மாற்ற நிலை காரணமாகவும் தற்காலிகமாக இந்த சேவையை நிறுத்துவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது.
அதன் பிறகு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து இந்த சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி INDSRI என்ற தனியார் நிறுவனத்திற்கு இந்த படகு சேவையை நடத்தும் பொறுப்பை இரு நாடுகளும் சேர்ந்து வழங்கி உள்ளன. முக்கியமாக இந்தியா தான் இந்த படகு சேவையை நடத்தி வருகிறது. இது தனியார் ஒப்படைக்க இலங்கை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனம் வரும் 13ஆம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயம் துறைமுகம் வரை கப்பல் சேவையை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த இரு துறைமுகங்களுக்கும் இடையே சிறிய கப்பல் போக்குவரத்து என்பது துவங்க உள்ளது. இந்த போக்குவரத்திற்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செரியாபாணி என்ற கப்பலை தான் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேயம் துறைமுகம் சுமார் 60 நாட்டிகல் மைல் தொலைவில் இருக்கிறது. இந்த பயணத்தை இந்த செரியாபாணி கப்பல் பயணம் செய்ய 4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதன்படி 13ம் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்திலிருந்து கிளம்பும். இந்த கப்பல் சரியாக மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடைகிறது.
பின்பு அங்கிருந்து சரியாக மதியம் 2 மணிக்கு கிளம்பும் இந்த கப்பல் மீண்டும் நாகப்பட்டினத்திற்கு மாலை 6:00 மணிக்கு வந்தடைகிறது. இந்த சேவை தினம் தோறும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி இலங்கைக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இந்திய பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் தாராளமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய ரக கப்பல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு விசா தேவை இல்லை. இந்த பயணத்திற்கான பயண கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 4997 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. செரியாபாணி கப்பலை பொறுத்தவரை சுமார் 133 பயணிகள் லோயர் டெக் என்ற பகுதியில் அமர்ந்து பயணம் செய்ய வசதி இருக்கிறது. இதுபோக அப்பர் டெக் பகுதியும் இருக்கிறது. ஆனால் அப்பர் டெக் பகுதிக்கான டிக்கெட் தற்போது விற்பனையில் இல்லை.
அப்பர் டெக் பகுதியில் வெறும் 25 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்காலிகமாக இந்த டிக்கெட்டை இந்த கப்பல் சேவையை நடத்தி வரும் தனியார் நிறுவனம் விற்பனை செய்யவில்லை. எதிர்காலத்தில் மக்கள் வரவேற்பை பொறுத்து இந்த கப்பலில் இந்த அப்பர் டெக் டிக்கெட் விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த சேவையில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை https://sailindsri.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா இலங்கை மிக அருகே இருக்கும் நாடுகள் என்றாலும் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனை காரணமாக பெரிய அளவில் தமிழகத்துடன் இலங்கை தொடர்பில் இல்லை. இப்படியான கப்பல் சேவையை துவங்குவதன் மூலம் இரு நாட்டிற்கு மத்தியில் நல்லுறவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கப்பல் சேவை மிகக் குறைவான விலையில் பயணம் செய்ய உதவுகிறது.


Click it and Unblock the Notifications








