இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

பழங்கால ரயில் நிலையத்தை மாடர்னான ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

393 கோடி ரூபாய் செலவில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை மிகவும் பிரமாண்டமாக புதுப்பிக்கப் போவதாக இந்திய ரயில்வே அமைச்சகம் அண்மையில் தகவல்கள் வெளியிட்டது. தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் புதிய தலைமையகமாக விசாகப்பட்டினம் விரைவில் மாற இருக்கின்றது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

இந்த திட்டத்தின் அடிப்படையிலேயே நவீன வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக அது மாற்றப்பட இருக்கின்றது. இதற்கான ஏலத்தை ஏற்கனவே அமைச்சகம் அறிவித்துவிட்டது. ஏலத்திற்கான விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு ஆகஸ்டு 12ம் தேதியே கடைசி நாள் ஆகும். மறு வடிவமைப்பு பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் மற்றுமொரு ரயில் நிலையத்தையும் ரயில்வேத்துறை அமைச்சகம் உலக தரத்திற்கு உயர்த்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழங்கால ரயில் நிலையங்களில் நாக்பூரும் ஒன்று. இதன் விண்டேஜ் தோற்றத்தையே மாடர்னாக மாற்ற அமைச்சகம் திட்டமிட்டிருக்கின்றது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தின் (Railway Land Development Authority) தலைமையில் நாக்பூர் ரயில் நிலையம் புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றது. ஒன்பதாயிரம் பயணிகள் ஒரே நேரத்தில் கூடுமளவிற்கு இந்த ரயில் மிகவும் பிரமாண்டமானதாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

இதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் இருப்பதைப் போல் நவீன ரக லிஃப்டுகள், எஸ்கலேட்டர்கள் உள்ளிட்டவை இந்த விமானத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளன. 30 லிஃப்டுகள் மற்றும் 31 எஸ்கலேட்டர்கள் ரயில் நிலையத்தில் இடம் பெறப் போவதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

இதுமட்டுமின்றி, நவீன ரக பார்க்கிங் வசதி மற்றும் பயணிகள் காத்திருப்பதற்கான பிரத்யேக அறைகள் ஆகியவை அமைக்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் மறு சீரமைப்பு பணியின்கீழ் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

கூடுதல் சிறப்பு வசதியாக சோலார் பேனல்கள் ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. ரயில் நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை இதன் வாயிலாகவே பெற்றுக் கொள்ளப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த ரயில் நிலையத்தின் கட்டிடம் பசுமை வளாகமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

இந்த திட்டம் எப்படி செயல்பட இருக்கின்றது என்கிற படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களை ரயில்வே அமைச்சகமே வெளியிட்டிருக்கின்றது. பயணிகளுக்கு இந்த ரயில் நிலையம் உலக தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

ரயில் நிலையம் மட்டுமின்றி அதன் சுற்றியிருக்கும் பகுதிகளையும் சீரமைக்க முயற்சியில் அமைச்சகம் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவல் மற்றும் படங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியும் வெளியிட்டிருக்கின்றார்.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

"புதிய இந்தியாவின் நம்ப முடியாத உள்கட்டமைப்பு. விரைவில் நாக்பூர் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்பட உள்ளது. ஸ்டேஷனும், அதனை சுற்றியிருக்கும் பகுதியும் மேம்படுத்தப்பட இருக்கின்றது" இவ்வாறு அமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது நாக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

குறிப்பாக, டெல்லி - சென்னை, ஹவுரா - மும்பை மற்றும் மும்பையின் பிற பகுதிகளுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ரயில் நிலையித்தை சர்வதேச விமான நிலையத்திற்கு இணையானதாக மாற்றும் முயற்சியில் அரசு களமிறங்கியிருக்கின்றது. ரயில் நிலையம்குறித்து வெளி வந்திருக்கும் வரைபடம், நாக்பூர் ரயில் எத்தகைய மாற்றத்தைப் பெற இருக்கின்றது என்பது உறுதிப்படுத்துகின்றன.

இது ரயில் நிலையமா இல்ல விமான நிலையமா?.. மாடர்ன் ஸ்டைலுக்கு மாறவிருக்கும் பழங்கால ரயில் நிலையம்!

விரைவில் புதுப்பித்தலைப் பெற இருக்கும் விசாகப்பட்டினம் ரியல் நிலையத்தில் நவீன வசதிகளாக, ஸ்கை வாக் மேடை, ஆர்எல்டிஏ படி, பயணிகள் காத்திருப்பிற்கான பிரத்யேக அறைகள், மல்டி லெவல் கார் பார்க்கிங், இன்டர்நெட் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதுமாதிரியான சூப்பரான வசதிகள் நாக்பூர் ரயில் நிலையத்திலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 14, 2022, 18:11 [IST]
English summary
Nagpur railway station will soon undergo major makeover
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+