பாடி பெயின்டிங் பைக்குகள்: அசத்திய அமெரிக்க ஓவியர்

கலைஞர்களின் கற்பனைக்கு வானமே எல்லை. அந்த வகையில், அமெரிக்காவின் பிரபல பாடி பெயின்டிங் ஓவியர் ஒருவர் மனிதர்களை வில்லாய் வளைத்து விதவிதமான பைக் மாடல்களை உருவமாக செய்து காட்டி அசத்தியுள்ளார்.அச்சு அசல் நிஜ பைக்குகளை போன்று தோன்றும் இந்த பாடி பெயிண்ட்டிங் பைக்குகள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

ஒட்டுத் துணியில்லாத அவர்களின் உடலில் ஓவியத்தையே ஆடையாக்கி கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். டிரினா மெர்ரி என்ற அந்த ஓவியரின் ரசனை சொட்டும் கற்பனையின் உச்சத்தை நாமும் இந்த செய்தியில் பகிர்ந்து பருகலாம் வாருங்கள்.

ரெடி ஒன் டூ த்ரீ...!!

ரெடி ஒன் டூ த்ரீ...!!

சினிமாவில் வரும் காட்சி போன்று சீறிப் பாயும் தோற்றத்துடன் ஓர் பைக். டிரினா மெர்ரியின் பெயின்ட்டிங்குடன் 4 மாடல்கள் இணைந்து உருவாக்கிய மனித பைக்.

ஒத்திகை

ஒத்திகை

அட இது ஒத்திகை தாங்க.அசத்தலை காண அடுத்தடுத்த படங்களுக்கு செல்லுங்கள்.

சரியா இருக்கா?

சரியா இருக்கா?

ஸ்போர்ட்ஸ் பைக்கின் உருட்டி முருக்கிய பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட நெஞ்சுப்பகுதி வடிவமைப்பை தத்ரூபப்படுத்தும் முயற்சி.

சென்டர் ஸ்டான்ட் எடுத்துடுங்கோ?

சென்டர் ஸ்டான்ட் எடுத்துடுங்கோ?

டிரினாவின் அசத்தலான பெயின்டிங்குடன் சென்டர் ஸ்டான்ட் போட்டு நிற்கும் மனித பைக்.

ப்ளீஸ் நம்புங்க.. நான் டிரஸ் போட்டிருக்கேன்!

ப்ளீஸ் நம்புங்க.. நான் டிரஸ் போட்டிருக்கேன்!

சாதாரண டிரஸ்ஸைவிட 'பெயின்டிங் டிரஸ்'தான் ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்காம்.

பேக் சீட்ல இடம் இருக்கா?

பேக் சீட்ல இடம் இருக்கா?

மனித பைக்கில் அமர்ந்து கண்களை கிறங்கடிக்கும் பெண் மாடல். கீழே இருக்கும் சைலன்சர், பெட்ரோல் டேங்க், வால் பகுதி எல்லாம் மனித பிணைப்புகளி்ல் உருவானவைதான். ஆனால், அச்சு அசலாக நிஜ பைக்கில் அமர்ந்திருப்பது போன்று தோன்றுகிறது. டவுட்டே இருக்கப்படாது.

இது டர்ட் பைக்?

இது டர்ட் பைக்?

படு நேர்த்தியான பெயின்ட்டிங்குடன் டர்ட் பைக்கை நினைவூட்டும் மனிதபைக்கில் சீறிப்பாய தயார் நிலையில் ஓர் அழகி.

சூப்பரப்பு..!!

சூப்பரப்பு..!!

சூப்பரப்பு சொல்ல வைக்கும் சூப்பர் பைக். பாடி பெயின்டிங் எப்பூடி?- டிரினாவுக்கு ஓர் 'ஓ' போடுங்க.

More from DriveSpark

Article Published On: Saturday, October 27, 2012, 17:20 [IST]
English summary
Trina Merry the fine art and fashion body painter has created a human motorcycle. Don't believe us? Step right in to check out Trina Merry's Human dirt bike, cruiser and sportsbike human models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+