ரயிலை பற்றி ரீல்ஸ் போட்டா ரூ1.5 லட்சம் கிடைக்கும்! என்ன பண்ணனும் தெரியுமா?
ரயிலை பற்றி ரீல்ஸ் போட்டாலே ரூபாய் 1.5 லட்சம் கிடைக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படியான ஒரு அறிவிப்பை தற்போது ரயில்வே நிர்வாகமே வெளியிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் சொன்னபடி ரீல்ஸ் போடுபவர்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் கிடைப்பதற்கான வாய்ப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் முதல்முறையாக ஆர்ஆர்டிஎஸ் ரக ரயிலாக நமோ பாரத் ரயில்கள் தலைநகர் டெல்லி பகுதியில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த ரயில் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நமோ பாரத் ரயில் மெட்ரோ ரயில் போலவும் அல்லாமல் அதே நேரம் சாதாரண ரயில் போலவும் அல்லாமல் இந்த இரண்டும் சேர்ந்த கலவையாக உருவாக்கப்பட்ட ரயிலாக இருக்கிறது. இதற்காக தனி ரயில் பாதை உருவாக்கப்பட்டு அதில் தான் பயணம் செய்கிறது. மெட்ரோ ரயில் குறுகிய தூர பயணத்திற்கு மட்டுமே பயன்படும். ஆனால் இந்த ரயில் நீண்ட தூரத்திற்காக உருவாக்கப்பட்ட ரயிலாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த ரயில் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தற்போது ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் கன்டென்ட்டை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு இந்த வாய்ப்பை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இதன் மூலம் இளைய தலைமுறை மக்களை ரயில் பக்கம் அதிகம் கவர்ந்திழுக்க முடியும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்படியாக உருவாக்கப்படும் ரீல்ஸ்களில் நமோ பாரத் ரயில் மற்றும் ஆர்ஆர்டிசி ரயில்வே ஸ்டேஷன்கள் குறித்து பேசப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரீல்கள் எல்லாம் ஒன்று முதல் மூன்று நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். இதில் ரயிலின் வேகம் மற்றும் ரயில்வே நிலையங்களில் உள்ள மாடலான தொழிற்நுட்பங்கள் குறித்து கன்டென்ட் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்யாசமான கிரியேட்டிவான யோசனை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் வீடியோவை தயார் செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி இந்த வீடியோவில் வீடியோ குவாலிட்டியாக இருக்க வேண்டும் அதில் கிரியேட்டிவ்வான அம்சங்கள் இடம் பெற வேண்டும் மற்றும் சொல்லவரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் சரியாகவும் மக்களை ஈர்க்கும் விதமாகவும் சொல்ல வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இப்படியாக கன்டென்ட் தயாரித்து வழங்கும் போட்டியாளர்கள் மத்தியில் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தகுதியான அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கு பெற வேண்டும் என்றால் மேலே சொன்னது படி வீடியோக்களை எடுத்து அதை ncrtc தளத்தின் தனித்துவமான பிளாட்ஃபார்மில் அப்லோடு செய்ய வேண்டும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்சிஆர்டிசி இணையதளத்தில் இந்த போட்டிக்கான முழுமையான விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் முன்னேற்ற விதிமுறைகளை எல்லாம் படித்து தெரிந்து கொண்ட பின்னர் போட்டியில் பங்கேற்க முடிவே நீங்கள் எடுக்கலாம்.
இந்த வாய்ப்பு கிரியேட்டிவான திறமைகளையும் நல்ல சிந்தனைகளையும் கொண்ட நபர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பாக இருக்கிறது. அவர்களது கிரியேட்டிவான யோசனைகளை இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற வைப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் நமோ பாரத் ரயில் குறித்து அவர்கள் செய்யும் ரீல்ஸ் மூலம் மக்களுக்கு பெரிய பெரிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நமோ பாரத் ரயில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இதுகுறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்த கொண்டு வருவதற்காகவே அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. இது நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications








