வந்தே பாரத் கொஞ்சம் ஓரமா போ.. நமோ பாரத் ரயில் வந்தாச்சு.. சோதனையோட்டமே இவ்ளோ ஸ்பீடுலையா!

இந்தியர்களின், குறிப்பாக, ரயில் பயண பிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக டெல்லி - மீரட் இடையில் இயக்கப்பட இருக்கும் ஆர்ஆர்டிஎஸ் (Regional Rapid Transit System) ரயில் சேவை இருந்து வருகின்றது. இது இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது அந்த ரயிலின் சோதனை ஓட்ட பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன.

'நியூ அசோக் நகர்' தொடங்கி 'சராய் கேல் கான்' வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை இரவு பொதுமக்கள் நடமாட்டம் சற்றே குறைந்த பின்னரே ரயில் சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இரண்டு ஸ்டேஷன்களுக்கும் இடையிலான தூரம் 4.5 கிமீ ஆகும்.

Delhi-meerut rrts train

இதற்கிடையிலேயே யமுனை நதியும் உள்ளது. இதை முதல் முறையாக இந்த ரயில் கடந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், டெல்லி - மீரட் இடையே இந்த ரயில் 55 கிமீ இடைவெளிக்கு இயக்கப்பட இருக்கின்றது. இந்த ரூட்டில் வரும் மூன்றாவது நிறுத்தமே சராய் கேல் கான் ஆகும்.

இந்த சோதனையோட்டத்தின்போது மணிக்கு 40 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், பொது பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அந்த ரயலில் மணிக்கு 82 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும். நகரங்களுக்குள் அதி-வேக பயணத்தை மேற்கொள்ளும் பொருட்டே இந்த ரயிலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

Namo bharat trials begin on delhi-meerut

இதுவே இந்தியாவின் முதல் செமி-ஹை ஸ்பீடு பிராந்திய ரயில் ஆகும். இதேபோல், இந்த ரயிலில் சொகுசு வசதிகளும் மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. மிக முக்கியமாக முழுக்க ஏசி, சொகுசான இருக்கை, சிசிடிவி கேமிரா, ஒய்-ஃபை மற்றும் ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பை வழங்கும் வசதி உள்ளிட்டவை இந்த ரயிலில் இடம் பெற்றிருக்கும்.

எனவே வந்தே பாரத் மற்றும் வந்தே மெட்ரோ போன்ற ரயில்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய ரயிலே விரைவில், டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய பகுதிகளை இணைக்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

முதலில் ஆறு பெட்டிகளுடனேயே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதன் பின்னர் தேவை அதிகரிப்பைப் பொருத்து அது ஒன்பது பெட்டிகளாக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் எந்த நாள் முதல் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை.

கூடிய விரைவிலேயே அது பற்றிய விபரங்களும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இப்போதே இந்த ரயிலின் மீதான எதிர்பார்ப்பு டெல்லி மற்றும் மீரட் இடையே வசிக்கும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் எழும்பி இருக்கின்றது. விரைவான பயணத்தை விரும்புவோர் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும்பாலான நகரங்களின் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டெல்லி போன்ற நகரங்களில் வாகன நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இத்தகைய சூழலை கையாள மக்களுக்கு மெட்ரோ மற்றும் இஎம்யூ ரயில் உள்ளிட்டவை பெரும் உதவியாக இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிதாக ஆர்ஆர்டிஎஸ் ரயிலும் இணைய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 14, 2025, 17:00 [IST]
English summary
Namo bharat train trials commence on final stretch of delhi meerut rrts corridor
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+