பானி பூரி கடை நடத்தியே ரூ2 கோடிக்கு காரை வாங்கி கணவருக்கு பரிசளித்த மனைவி! என்ன கார் தெரியுமா?
பானி பூரி கடை நடத்தி வருபவர் தனது கணவரது பிறந்தநாளுக்கு ரூபாய் 2 கோடிக்கு கார் வாங்கி பரிசாக வழங்கினார் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதுதான் தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. இப்படியாக ரூ2 கோடி செலவு செய்து அவர் வாங்கிய கார் எது? எப்படி இதை வாங்கினார் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் நந்தனா இவர் மலேசியாவில் நானா குரூப் என்ற பெயரில் பானி பூரி மற்றும் இந்திய பலகாரங்களை தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மலேசியாவில் ஏகப்பட்ட இந்தியர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கான இனிப்பு மற்றும் பலகார தேவைகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது. மிகப் பெரிய அளவில் இவர் தொழில் செய்து வருகிறார்.

மலேசியாவில் பல்வேறு இடங்களில் கடை நடத்தி விடுவது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமும் இவர் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை டெலிவரி செய்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் இவர் பதிவிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாக பரவும். குறிப்பாக மலேசிய மக்கள் மத்தியில் இவர் பிரபலமான நபராக இருக்கிறார்.
இந்நிலையில் இவரது கணவர் கணவருக்கு பிறந்தநாள் வருவதை முன்னிட்டு தனது கணவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஏதாவது பரிசளிக்க வேண்டும் என விரும்பினார். இதனால் தனது கணவர் விரும்பிய காரை பரிசளிக்க விரும்பினார். இதற்காக அவருக்கு என்ன வாகனம் பிடிக்கும் என அவரிடம் ஒரு வீடியோ கேட்டார். அந்த வீடியோவில் அவர் ஜிடிஆர் என பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து கணவருக்கு தெரியாமல் மனைவியாக குறித்து விசாரித்த போது நிஷா நிறுவனத்தின் ஜிடிஅர் கார் இந்திய மதிப்பில் ரூ2 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. எப்படியாவது இந்த காரை வாங்கி தனது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்த மனைவி இந்த காரையும் சொந்தமாக வாங்கி உள்ளார். இதை அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெரிய கண்ணாடி பெட்டிக்குள் வைத்து அதை அலங்காரம் செய்து குறிப்பிட்ட இடத்தில் வைத்துள்ளார்.
தனது கணவர் பிறந்தநாள் அன்று அவரது கண்களை கட்டி அந்த இடத்திற்கு கூட்டி வந்த அவர், கண் கட்டை அவிழ்த்து அவர்கள் சர்ப்ரைஸ் காட்டியுள்ளார். அவருக்கு கார் என பார்த்ததும் குஷியாகிவிட்டது. உடனடியாக சென்று மூடப்பட்டிருந்த காரை ஓடிச்சென்று திறந்து பார்த்தார்.

அப்பொழுது அவர் தனது மனைவியிடம் கேட்ட நிஸான் ஜிடிஆர் காரை மனைவி அவரது பிறந்த நாள் பரிசாக வழங்கியுள்ளதை பார்த்தார். இதையடுத்து அவன் தனது மனைவியுடன் சேர்ந்து அந்த காரில் பயணம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ரூ 2 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மலேசியாவில் புதிதாக வாங்கப்பட்ட காரா அல்லது ஏற்கனவே பயன்படுத்திய காரை இவர் செகண்ட் வாங்கி கணவருக்கு பரிசளித்தாரா என்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரையில் 369 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 பேர் வரை இந்த காரில் பயணம் செய்யலாம்.
2 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 7 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. காரில் உள்ள எக்ஸாஸ்ட் நோட் தான் கவனத்தை இருக்கும். சாலையில் இந்த கார் செல்லும்போது பலரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இந்த காரில் இருந்து சத்தம் வரும். இது ஒரு ரேஸ் கார் போன்ற லுக்கை நமக்கு தரும்.
இந்த காரை வாங்க வேண்டும் என ஆர்வமாக காத்திருந்த நிலையில் பானி பூரி கடை நடத்தி வரும் பெண் ஒருவர் தனது கணவர் பிறந்தநாளுக்கு இந்த ரூபாய் 2 கோடி மதிப்பிலான காரை வாங்கி பரிசோதித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பானி பூரி கடை நடத்தி வருபவர் தனது கணவருக்கு ரூபாய் 2 கோடி மதிப்பிலான காரை வாங்கி பரிசளித்தது ஆச்சரியமான விஷயம் தான். சமீப காலமாக இப்படியாக புதிதாக கார் வாங்குபவர்கள் அதை சர்ப்ரைசாக பரிசளிக்கும் வீடியோவை சமூக வடிவங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இந்த வீடியோவும் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications









