ரூ. 7.75 லட்சம் கொடுத்து தெலங்கானாவின் பேன்சி பதிவெண்ணை வாங்கிய நடிகர்.. என்ன நம்பரை வாங்கினாரு?

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் நந்தமுரி பாலகிருஷ்ணா-வும் ஒருவர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்ல ஆந்திரா அரசியலுலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். ஹிந்துபுறம் தொகுதியின் எம்எல்ஏ இவரே ஆவார். இந்த நபரே பெரும் தொகையை செலவிட்டு தற்போது பேன்சி பதிவெண்ணை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'டிஜி 09 எஃப் 0001' (TG 09 F 0001) எனும் பேன்சி பதிவெண்ணையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இதற்காக அவர் செலவிட்டு இருக்கும் தொகையும் மிக அதிகம் ஆகும். ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தே அந்த பதிவெண்ணை அவர் வாங்கி இருக்கின்றார். சமீபத்தில் தெலங்கானா வட்டாரா போக்குவரத்து அலுவலகம் சில பதிவெண்களை ஏலத்தின் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்தது.

Balayya spends rs 7 75 lakh on fancy number

இந்த ஏலத்தில் பங்குபெற்றே பாலையா இந்த ஃபேன்சி பதிவெண்ணை வாங்கி இருக்கின்றார். அவர் மட்டுமல்ல இன்னும் பல செல்வந்தர்கள் இந்த ஏலத்தில் பங்குக் கொண்டு தங்களுக்கான ஃபேன்சி பதிவெண்களை வாங்கி இருக்கின்றனர். இந்த ஏலத்தின் வாயிலாக ரூ. 37.15 லட்சம் வருமானம் தெலங்கானா மாநிலத்திற்குக் கிடைத்திருக்கின்றது.

நந்தமுரி பாலகிருஷ்ணாவை போலவே மற்றவர்களும் பெரும் தொகையைக் கொடுத்தே தங்களுக்கான ஃபேன்சி பதிவெண்களை வாங்கி இருக்கின்றனர். அந்தவகையில், டிஜி 09 எஃப்0001 பதிவெண்ணிற்கு அடுத்தபடியாக மிக அதிக தொகைக்கு டிஜி 09 எஃப் 0009 (TG 09 F 0009) எண் ஏலம் போயிருக்கின்றது.

Fancy number

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இது ரூ. 6.70 லட்சத்திற்கு ஏலம் போயிருக்கின்றது. இதை வாங்கியது கமலாலயா ஹைசாஃப்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ரூ. 1 லட்சத்திற்கு டிஜி 09 எஃப் 9999 (TG 09 F 9999) எனும் ஃபேன்சி எண்ணை எக்கோ டிசைன் ஸ்டுடியோ வாங்கி இருக்கின்றது.

இதேபோல், ஜெட்டி இன்ஃப்ரா நிறுவனம் ரூ. 1.49 லட்சத்திற்கு டிஜி 09 எஃப் 0005 (TG 09 F 0005) பதிவெண்ணையும், ஸ்ரீநிவாஸ் நாய்டு என்பவர் ரூ. 1.37 லட்சத்திற்கு டிஜி 09 எஃப் 0007 (TG 09 F 0007) பதிவெண்ணை வாங்கியிருக்கின்றார். இதுமட்டுமின்றி டிஜி 09 எஃப் 0019 பதிவெண் ரூ. 60 ஆயிரத்திற்கும், டிஜி 09 எஃப் 0099 (TG 09 F 0099) எண்கிற எண் ரூ. 4.75 லட்சத்திற்கும் ஏலத்திற்கு விற்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அனைத்து எண்ணைக் காட்டிலும் நடிகர் பாலையா வாங்கியிருப்பதே அதிக காஸ்ட்லியானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த பதிவெண்ணை வாங்கியதன் வாயிலாக நடிகர் பாலையா தான் ஓர் மிகப் பெரிய வாகன ஆர்வலர் என்பதை வெளிக் காட்டியிருக்கின்றார். சமீபத்தில்தான் தன்னுடைய பட இசையமைப்பாளருக்கு விலை உயர்ந்த ஆடம்பர காரை பரிசாக வழங்கியிருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது.

ரூ. 1.42 கோடிக்கும் அதிகமான மதிப்புக் கொண்ட போர்ஷே கேயன்னே (Porsche Cayenne) காரையே அவர் பரிசாக வழங்கினார். 'டாக்கு மஹாராஜ்' படத்திற்கு சிறந்தை இசையை தயார் செய்துக் கொடுத்த நந்தமுரி தமன்-க்கே இந்த காரை அவர் பரிசாக வழங்கினார். ஆடம்பர காரை பரிசாக தந்த இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி (BMW 6 Series GT), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி (Mercedez Benz GLS 400d) உள்ளிட்ட கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இதுமட்டுமல்ல அவரிடத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crista) காரும் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் பாலையாவிடம் போர்ஷே, லம்போர்கினி மற்றும் ஃபெர்ராரி உள்ளிட்ட பிராண்டுகளின் கார்களும் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் அதிக விலைக் கொடுத்து ஃபேன்சி பதிவெண்ணை வாங்கி இருக்கின்றார். இந்த ஃபேன்சி எண்ணை அதன் மதிப்பிற்கு ஏற்ற விலை உயர்ந்த புதிய காரிலேயே பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 14:04 [IST]
English summary
Nandamuri balakrishna makes headlines by paying rs 7 75 lakh for fancy number tg 09 f 0009
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+