42 லட்ச ரூபாய் காரில் வந்திறங்கிய விஜய் டிவி பிரபலம்! இந்த கார்ல அப்படி என்ன தான் இருக்குது!

டிவி, சினிமா பிரபலங்கள் காஸ்ட்லியான கார்களை வாங்கி அதை ஓட்டி செல்லும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த வீடியோக்கள் எல்லாம் வைரலாக பரவி வருகின்றன. இப்படியாக சமீபத்தில் விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகரான நாஞ்சில் விஜயன் ரூபாய் 42 லட்சம் மதிப்பிலான காரை ஓட்டி வரும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காரை அவர் சொந்தமாக வாங்கியுள்ளாரா? இந்த காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன? அதிக விலையில் இந்த கார் விற்கப்படுவதற்கான காரணம் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் பிரபலமான காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் அவ்வப்போது மாறுவேடமிட்டு திரையில் தோன்றி காமெடி செய்யும் காட்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இவர் பெண் வேடமிட்டு நடிக்கும் காட்சிகள் பல சமூக வலைதளங்களில் கூட வைரலாகி வருகின்றன. இதனால் இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருக்கிறார்.

nanjil vijayan drive mini cooper

இவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் மினி கூப்பர் கார் ஒன்றை ஒட்டி வருவதாக காட்சி அமைந்துள்ளது. இந்த காரை அவர் ஓட்டி வந்து ஒரு இடத்தில் நிறுத்தி காரில் இருந்து இறங்கி காரின் முன்னே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக இந்த காட்சி இருக்கிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சியை பதிவிட்ட நாஞ்சில் விஜயன் அவர் தான் கார் ஓட்டுவதாகவும் கார் அவருக்கு சொந்தமானது இல்லை எனவும் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் அவருக்கு போட்டி வந்த கார் காஸ்ட்லியான ஹேட்ச்பேக் ரக காராகும். மினி நிறுவனத்தின் கூப்பர் மாடல் காரை தான் அவர் ஒட்டி வந்துள்ளார். இந்த கார் பல்வேறு விதமான அம்சங்கள் கொண்ட காராக இருக்கிறது.

nanjil vijayan drive mini cooper

மினி நிறுவனத்தின் கூப்பர் காரை பொறுத்தவரை 1998 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 129 பிஎச்பி வரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் முன்பக்க வீல் டிரைவ் கொண்ட இன்ஜினாக இருக்கிறது. இந்த கார் 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.7 நொடியில் எட்டிப் பிடிக்கிறது.

அதிகபட்சமாக இந்த கார் 235 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. மினி கூப்பர் எஸ் மற்றும் மினி கூப்பர் எஸ் ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆகிய வேரியண்ட்கள் விற்பனையாகி வருகின்றன. இதன் விலையை பொருத்தவரை ரூபாய் 41.95 லட்சம் முதல் ரூபாய் 42.53 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த கார் லிட்டருக்கு 16.58 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 10 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் சிறப்பம்சமே இதன் காம்பேக்ட்டான டிசைன் தான் மற்றும் இந்த காரின் இன்ஜினும் பவர்ஃபுல்லான இன்ஜினாக இருப்பதால் இந்த காரை ஓட்டி பார்க்கும்போது நல்ல அனுபவம் கிடைக்கும்.

இந்த காரின் காம்பெக்டான டிசைன் பின்பக்க சீட்டில் போதுமான இடவசதி இல்லாத பிரச்சனை இருக்கிறது. அதே நேரம் இந்த காரின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்த காரின் பிராண்ட் பெயர் மற்றும் வடிவமைப்பு டிரைவிங் அனுபவத்திற்காக பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள். இந்த பதிவில் உள்ள காட்சிகளின் படி நாஞ்சில் விஜயன் அவரது நண்பர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது.

பிரபலங்கள் இப்படியான காஸ்ட்லியான கார்களை வைத்திருப்பதை ஒரு கௌரவமாக கருதுகிறார்கள். இப்படியாக தான் நாஞ்சில் விஜயனும் இந்த காரை ஓட்டி வந்து அதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்த தற்போது பலரும் பேசி வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கூப்பர் கார் என்பது வெகு குறைவான மக்களே வாங்கும் காராக இருக்கிறது. இந்த காரை வாங்குபவர்கள் கௌரவத்திற்காக தான் பெரும்பாலும் வாங்குவார்கள். அதிக விலை இருப்பதால் இந்த காரை பலர் வாங்க தயக்கம் காட்டுவார்கள். இந்நிலையில் இந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் போன்ற பிரபலங்கள் பகிர்ந்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 14:27 [IST]
English summary
Nanjil vijayan drive mini cooper video gone viral
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+