சொந்தமா டாக்சியை புக் செய்வதற்கான செயலியை உருவாக்கிய கேப் டிரைவர்.. ஓலா-ஊபர் வாலை ஒட்ட நறுக்க திட்டம்!

இந்தியாவின் டாக்சி பிரிவில் தங்களுக்கு என மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள். இந்திய நிறுவனங்கள் பலவற்றை பின்னுக்கு தள்ளி, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும், இந்திய கால் டாக்சி நிறுவனங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களின் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டி இருக்கின்றன.

மேலும், இவர்களுக்கு இப்போதைய நிலவரப்படி பெரிய அளவில் போட்டி இல்லாத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே, ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு போட்டியாக கால் டாக்சி (Call Taxi) டிரைவர் ஒருவர் போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nano travels

அதாவது, இந்த இரண்டு முன்னணி கால் டாக்சி நிறுவனங்களுக்கும் எதிராக அவர் ஓர் புதிய கால் டாக்சி புக் செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றார். இதன் அடிப்படையில் ஓர் செயலியை அவர் அறிமுகம் செய்திருக்கின்றார். அந்த செயலி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், அதில், 600க்கும் அதிகமான கால் டாக்சி ஓட்டுநர்கள் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. நானோ டிராவல்ஸ் எனும் பெயரிலேயே தன்னுடைய கால் டாக்சி சேவையை முன்னாள் கால் டாக்சி ஓட்டுநர் உருவாக்கி இருக்கின்றார். கர்நாடகா மாநிலம், பெங்களூரூவைச் சேர்ந்த லோகேஷ் என்பவரே இந்த செயலியை உருவாக்கியவர் ஆவார்.

இவர் இதற்கு முன்னதாக ஊபர் பார்ட்னராக இருந்து வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே நிறுவனத்துடன் அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஓலா மற்றும் ஊபர் எனும் மாபெரும் ஜாம்பவான் நிறுவனங்களுக்கு எதிராக தன்னுடைய கால் டாக்சி சேவையை லோகேஷ் தொடங்கி இருக்கின்றார்.

ஓர் நானோ டிராவல்ஸ், பயனர் இந்த செயலிகுறித்த தகவலை அவரது எக்ஸ் கணக்கின் வாயிலாக தெரிவித்ததனாலேயே வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. நானோ டிராவல்ஸ் செயலிக்கான க்யூஆர் கோடுடன் கூடிய பதிவையே அவர் பதிவிட்டு இருக்கின்றார். இந்த செயலியின் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2023 ஜூலையில் இருந்தே பயன்பாட்டில் இருக்கின்றது.

அதேவேளையில், ஐஓஎஸ்-க்கான செயலி கடந்த 20 ஆம் தேதி அன்றே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்த செயலிக்கு இரு தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. மிக முக்கியமாக தங்களில் ஒருவர் உருவாக்கி இந்த செயலிக்கு மக்கள் மத்தியிலும், கால் டாக்சி ஓட்டுநர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.

மேலும், பலர் நானோ டிராவல்ஸ் வாயிலாக செய்த ரைடின் போது கிடைத்த அனுபவத்தையும் சமூக வலை தளங்கள் வாயிலாக பகிரத் தொடங்கி இருக்கின்றனர். மேலும், ஊபரில் பணியாற்றிய நபரே ஊபருக்கு எதிராக திரும்பி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கின்றது.

லோகேஷ் இந்த ஜாம்பவான் கார்பரேட் கம்பெனிக்கு எதிராக திரும்பியதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும், பலர் அவரின் முயற்சிக்கு வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஓலா, ஊபர் நிறுவனங்கள் மிக அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பரவலாக இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த மாபெரும் நிறுவனங்களுக்கு எதிராக ஓர் தனி நபர் போர் கொடியைப் தூக்கி இருக்கின்றார். போர் கொடியை பிடித்ததோடு நிறுத்தாமல் அவர்களுக்கு எதிராக புதிய வாடகை வாகன சேவைக்கான செல்போன் செயலியையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகக் கட்டணம் கொள்ளை இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ஒரு சில கிமீட்டர் பயணத்திற்கு பல நூறுகளை கட்டணமாக கேட்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், கட்டணத்தை சீர்படுத்த வேண்டும் என்பதாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 27, 2023, 14:50 [IST]
English summary
Nano travels taxi booking app
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+