சினிமா, அரசியலை கட்டி ஆண்ட முதல் சூப்பர்ஸ்டாரின் பேத்தியா இது! சலூனுக்கு வந்துட்டு போகவே ஒன்னரை கோடி ரூபா கார்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz). இதன் செடான் (Sedan) மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு, திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) சொகுசு காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைத்து வருகிறது. அவை 300d 4Matic AMG Line, 450 4Matic மற்றும் 450d 4Matic ஆகியவை ஆகும்.
இதில், 300d 4Matic AMG Line வேரியண்ட்டின் விலை 99 லட்ச ரூபாய் ஆகவும், 450 4Matic வேரியண்ட்டின் விலை 1.12 கோடி ரூபாய் ஆகவும், 450d 4Matic வேரியண்ட்டின் விலை 1.17 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆன்-ரோடு விலை முறையே 1.24 கோடி ரூபாய், 1.40 கோடி ரூபாய் மற்றும் 1.46 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இந்த காரின் 300d 4Matic AMG Line வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினும், 450 4Matic வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 450d 4Matic வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளன.
பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் கங்கனா ரனாவத் (Kangana Ranaut), ஹூமா குரேஷி (Huma Qureshi), பொம்மன் இராணி (Boman Irani), ஃபர்ஹான் அக்தர் (Farhan Akhtar) போன்றவர்களிடம் எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் உள்ளது. இந்த வரிசையில் பிரபல நடிகரின் பேத்தி ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, நயோமிகா சரண் (Naomika Saran) ஆவார். இவர் பாலிவுட் திரையுலகின் 'லெஜெண்ட்' ஆக இருந்த ராஜேஷ் கண்ணாவின் (Rajesh Khanna) பேத்தி ஆவார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல முகங்களை கொண்டிருந்த ராஜேஷ் கண்ணா, கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என ராஜேஷ் கண்ணா அழைக்கப்படுகிறார்.
அப்படிப்பட்ட லெஜெண்ட்டின் மகளும், தமிழில் பிரசாந்த் உடன் மஜ்னு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகையுமான ரிங்கி கண்ணாவின் (Rinke Khanna) மகள்தான், நாம் தற்போது பேசி கொண்டுள்ள நயோமிகா சரண். அவர் பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் டாப் வேரியண்ட்டாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் உள்ள சலூன் ஒன்றுக்கு நயோமிகா சரண் வந்தபோதுதான் இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நயோமிகா சரண் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் ஏராளமான சொகுசு வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை எல்லாம் தவிர, 590 வாட் 13 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளும், இந்த காரின் முக்கியமான அம்சங்களாக உள்ளன. அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.
இதில், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற வசதிகளை எல்லாம் உள்ளடக்கிய அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமானதாகும். இதுதவிர 9 ஏர்பேக்குள், 360 டிகிரி கேமரா, டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அஸிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகிய அம்சங்களில் தலை சிறந்து விளங்குவதால்தான், விலையை பொருட்படுத்தாமல், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி காரை திரையுலக நட்சத்திரங்கள் விரும்பி வாங்குகின்றனர் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








