முன்னாள் எஃப்1 பந்தய வீரரே இந்த காரை வாங்கிட்டாரா! விலையை கேட்டு அதிர்ந்து போயிட்டோம்... காசு கொட்டுறாங்கப்பா!

நரைன் கார்த்திகேயன், இவரை அறியாதவர்கள் ஒரு சிலரே என கூறலாம். குறிப்பாக, வாகனம், வாகனம் சார்ந்த பந்தயங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களுக்கு இவர் ஓர் ரோல் மாடல் என்றே கூறலாம். அந்த அளவிற்கு வாகன ஸ்போட்ர்ஸ் உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிக் கொண்டிருந்தவரே நரைன் கார்த்திகேயன்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இவரே இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் ஆவார். அவர் தற்போது போட்டிகளில் ஈடுபடுவதில்லை. இதில் இருந்து ஓய்வு பெற்ற வெகுநாட்கள் ஆகின்றன. சமூக வலைதளத்தில் மிகவும் ஈடுபாடாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

Narain karthikeyan buys benz c class

இவர் தற்போது விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் கொள்முதல் வாயிலாக அவர் வாகன உலகில் பெரிதும் பேசப்படும் நபராக மாறி இருக்கின்றார். கடந்த காலங்களில் வாகன பந்தயங்களில் சாதனைப் புரிந்ததற்காக செய்திகளில் இடம் பிடித்து வந்த அவர், தற்போது இந்த காரை கொள்முதல் செய்ததன் காரணத்தினால் நீண்ட நாட்கள் கழித்து வாகன உலகின் தலைப்பு செய்தியாகவே மாறி இருக்கின்றார்.

அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் செடான் வகை கார் மாடல் ஆகும். அதிக சொகுசு வசதிகளுக்கு பெயர் போன கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய ஆடம்பர வகை காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் காரணத்தினாலேயே அவர் தற்போது பேசப்படும் நபராகவும் மாறி இருக்கின்றது.

Narain karthikeyan

நரைன் கார்த்திகேயனின் இந்த கார் கொள்முதல் குறித்த தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. அதன் அதிகாரப்பூர்வ யுட்யூப் பக்கத்தின் வாயிலாகவே இந்த தகவலை அது உறுதி செய்திருக்கின்றது. இந்த காரை அவர் ஏன் தேர்வு செய்தார் என்பது குறித்த தகவலே அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

பிரீமியம் லக்சூரி வசதிக் கொண்ட உள் பக்கம் மற்றும் மிகவும் கம்ஃபர்டபிள் ரைடிங் அனுபவத்தை வழங்கியதன் காரணத்தினாலேயே இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றாராம். இவ்வாறே அந்த வீடியோ பதிவில் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் தெரிவித்து இருக்கின்றார்.

நரைன் கார்த்திகேயன் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸின் எந்த வேரியண்டை வாங்கி இருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், வீடியோவில் இடம் பெற்றிருக்கும் காரின் தோற்றத்தை வைத்து பார்க்கையில் அது சி300டி வேரியண்டாக இருக்கும் என எங்களால் யூகிக்க முடிகின்றது. இது ஓர் டீசல் எஞ்ஜின் கொண்ட தேர்வாகும்.

இந்த தேர்வில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 261 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 9ஜி ட்ரானிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், மைலேஜ் விஷயத்திலும் இந்த கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. நரைன் இந்த காரை பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் மோடிலேயே பன்படுத்துவார் என கூறப்படுகின்றது. இந்த மோடிலேயே முரட்டுத் தனமான எஞ்ஜின் திறனை பெற முடியும். இதன் விலை ரூ. 66 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரை மட்டுமல்ல நரைன் கார்த்திகேயன் இன்னும் பல ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக அவரிடத்தில் சூப்பர் கார்களே அதிக அளவில் இருக்கின்றன. அவரிடத்தில் இருக்கும் மிக முக்கியமான கார் மாடலாக போர்ஷே 911 ஜிடி3 இருக்கின்றது. இந்த காரை அவர் 2018 ஆம் ஆண்டிலேயே அவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகமாகும். இவர் வைத்திருக்கும் இந்த கார் வழக்கமான கார் மாடலைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், அவர் அதிகம் விரும்பும் கார் மாடலாக ஜிடி3 இருக்கின்றது. இதைக் கொண்டு அவர் ரேஸ் டிராக்கில் பயணிக்கையில் வேற லெவலில் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நரைன் கார்த்திகேயன் மட்டுமில்லைங்க, இந்தியாவில் பெரும்பாலான பிரபலங்கள் சூப்பர் கார் விரும்பிகளாக இருக்கின்றனர். குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் மிகப் பெரிய ஆடம்பர கார்கள் மற்றும் சூப்பர் கார் காதலர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கார்கள் விஷயத்தில் அவர்கள் பணத்தைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, October 13, 2023, 23:23 [IST]
English summary
Narain karthikeyan buys benz c class
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+