ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

By Saravana Rajan

இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய வீரர் என்ற பெருமைக்குரியவர் தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன். விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் ஓட்டுவது அவருக்கு அத்துப்படியான விஷயம்தான். இந்த சூழலில், தனக்கு பிடித்தமான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வாங்கி இருக்கிறார்.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

மும்பையில் உள்ள போர்ஷே சென்டரில் தன்னுடைய புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரை சில தினங்களுக்கு முன் டெலிவிரி பெற்றுக் கொண்டார். நரேன் கார்த்திகேயனின் போர்ஷே 911 ஜிடி3 காரில் கூடுதலாக க்ளப்ஸ்போர்ட் பேக்கேஜ் மற்றும் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் ஆக்சஸெரீகளை பொருத்தி வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

போர்ஷே 911 ஜிடி3 காரின் க்ளப்ஸ்போர்ட் பேக்கேஜில் பக்கெட் இருக்கைகள், அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள், 6 பாயிண்ட் ஹார்னெஸ் ரோல்கேஜ் ஆகிய கூடுதல் ஆக்சஸெரீகள் கொடுக்கப்படுகின்றன. ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜில் டிராக் பிரசிஷன் அப்ளிகேஷன் மற்றும் லேப் ட்ரிக்கர் பிரிப்பரேஷன் ஆகிய பந்தய களங்களில் வீரர்களுக்கு தேவைப்படும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

டேஷ்போர்டில் ஸ்டாப் வாட்ச் கடிகாரமும் இந்த பேக்கேஜில் கொடுக்கப்படுகிறது. சிறிய கட்டுப்பாட்டு சாதனம் மூலமாக இந்த ஸ்டாப் வாட்ச் இயங்குகிறது. இவை அனைத்தும் பந்தய களங்களில் ஓட்டும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

சிவப்பு வண்ண புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரை தேர்வு செய்து வாங்கி இருக்கிறார் நரேன் கார்த்திகேயன். இந்த கார் பந்தய கள சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்த காரில் அலாய் வீல்கள், ஹெட்லைட்டுகள் ஆகியவை சாதாரண மாடலில் இருப்பதுதான். தவிர்த்து, சில கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கி இருக்கிறார்.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

போர்ஷே 911 ஜிடி3 காரில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர்பேக்குகள், விபத்தின்போது தானாக திறந்து கொள்ளும் கதவுகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 493 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும்.. மணிக்கு 318 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

தனது தொழில்முறை சார்ந்த பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய போர்ஷே காரை ரூ.2.30 கோடி விலை கொடுத்து நரேன் கார்த்திகேயன் வாங்கி இருக்கிறார்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's first F1 driver Narain Karthikeyan has treated himself to a new Porsche 911 GT3. Karthikeyan took the delivery of the brand new 911 GT3 at the Porsche Centre in Mumbai. Porsche had launched the 911 GT3 in October 2017 with a whopping price tag of Rs 2.3 crore ex-showroom, but Narain's 911 GT3 cost a lot more.
Story first published: Monday, February 19, 2018, 15:27 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more