இந்த மாதிரி வாழ்றதுக்கே பணத்த நெறய சம்பாதிக்கனும்.. ரோல்ஸ் ராய்ஸின் பின்னால் அமர்ந்து சூரிய மறைவை ரசித்த நடிகை
ரோல்ஸ் ராய்ஸ் கார் (Rolls Royce Car)-இல் அமர்ந்து பயணிப்பது மட்டுமல்ல அந்த காரில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதும் பேரின்பமாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றார் இளம் நடிகை ஒருவர். ராக்ஸ்டார், மெட்ராஸ் கஃபே, மெய்ன் தேரே ஹீரோ, ஸ்பை மற்றும் ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பல முன்னணி திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை நர்கிஸ் ஃபக்ரி. இவரே ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரில் அமர்ந்து இயற்கையை ரசித்தவர் ஆவார்.
இவர் கடைசியாக திரையில் தோன்றியது 2023ஆம் ஆண்டில் வெளியாக 'ஷிவ் சாஸ்த்ரி பல்போவா' திரைப்படத்திலேயே ஆகும். இதற்கு பின்னர் அவர் இந்தியாவிலேயே இல்லை என கூறப்படுகின்றது. வெளிநாட்டிலேயே அவர் வசித்து வருகின்றார். இந்த நிலையிலேயே அவர் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் அமர்ந்து இயற்கையை ரசித்திருக்கின்றார்.

சூர்ய மறைவையே அவர் ரசித்திருக்கின்றார். இதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படத்தை அவரே அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றார். அவர் பகிர்ந்திருக்கும் படத்தின் வாயிலாக அந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) என்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், அவர் அமர்ந்திருப்பது அரபு நாடுகளில் உள்ள ஓர் பாலைவனம் போன்றும் தெரிகின்றது. இங்கு அமர்ந்தபடியே சூரிய மறைவை அவர் ரசித்திருக்கின்றார். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் வழங்கப்பட்டிருக்கும் பலதரப்பட்ட சொகுசு மற்றும் சிறப்பு வசதிகளில் ஒன்றே பின்பக்கத்தில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் வசதி ஆகும்.
சாய்ந்துக் கொள்வதற்கான வசதியுடனேயே இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கும். இந்த இரண்டு இருக்கைகளுக்கும் இடையில் ஓர் கோப்பை தாங்கியும் இருக்கும். அதில் பானங்களை வைத்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே இயற்கை ரசித்தபடி அமர்ந்துக் கொண்டிருக்கின்றபோது, கூடவே பானங்களை ருசித்து அனுபவிக்க முடியும்.
இத்தகைய காரிலேயே நடிகை ஹாயாக அமர்ந்திருக்கின்றார். விரைவிலேயே இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. ஹரி ஹர வீர மல்லு மற்றும் ஹவுஸ்ஃபுல் 5 ஆகிய படங்களே இந்த 2025 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளன. இந்த மாதிரியான சூழலிலேயே இப்போதே ரசிகர்களின் மனதைக் கவர தொடங்கிவிட்டார் நடிகை நர்கிஸ் ஃபக்ரி.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் பின் பக்க டோர் இரண்டு பாதியாக திறக்கும். கீழ் பாதியே இரண்டு பேர் அமரக் கூடிய வசதியைக் கொண்டிருக்கும். தேவைக்கேற்ப அவற்றை சற்றே வலது-இடது என திருப்பிக் கொள்ள முடியும்.
இந்த காரை மே 2018-லேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு உலக பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியிடத்தில் இந்த கார் மாடல் மட்டும் ஐந்திற்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது.
சொகுசு அம்சங்கள் மிக அதிகம் என்பதால் இந்த காரை மிக அதிக எண்ணிக்கையில் முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 600 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி கார் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காருக்கே இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








