ரூ10 கோடிக்கு கார் வாங்கி நடிகைக்கு பரிசளித்த கணவர்! யார் இந்த நடிகை தெரியுமா?

பாலிவுட் நடிகை ஒருவருக்கு அவரது பணக்கார கணவர் பிறந்தநாள் பரிசாக ரூ10 கோடி மதிப்பிலான காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நர்கீஸ் ஃபக்ரீ, இவர் பல ஹிட்டான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக அமெரிக்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனதுபிறந்தநாளை கொண்டாடினார். இவர் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.

Nargis Fakhri Rolls-Royce Cullinan Gift

இந்த நாளை அவர் மறக்காமல் இருகு்க வேண்டும் என்பதற்காக அவரது கணவர் டோனி பேய்ஜ் இவருக்க ரோல்ஸ்ராய்ல்ஸ் நிறுவனத்தின் கல்லீனன் என்ற காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரே தான்இந்த காருடன் இருகு்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளில் வெளியிட்டுள்ளார். இந்த கார் நீள நிற கலரில் இருக்கிறது. இதற்கு காண்ட்ராஸ்டாக சிவப்பு நிற ஆடையுடன் இவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். கார் ஒரு பாலத்தில் நிறுத்தப்பட்ட இந்த போட்டோ சூட் நடத்தப்பட்டது. காரில் சிவப்பு நிற பிரம்மாண்டமான ரிப்பனும் கட்டப்பட்டிருந்தது. இவ்வாறு இவர் பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

ரோல்ஸ்ராயல்ஸ் கல்லீனன் சிரீஸ் 1 காரை பொருத்தவரை ரூ7 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த சீரீஸ் 2 கார் வெளியிாகிவிட்டது.இந்தியாவில் இந்த காரை வாங் ேவண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ10.50 கோடியாவது செலவாகும். இது போக கஸ்டமைஸ்டு ஆப்ஷனை தேர்வு செய்தால் அதற்கான செலவு தனி, நர்கீஸ் அவரது பிறந்தநாள் கழிந்து 1 மாதத்திற்கு பிறகு இந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியானது.

Nargis Fakhri Rolls-Royce Cullinan Gift

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் இந்த கல்லீனன் காரை ஆர்க்கிடெக்ஷர் ஆஃப் லக்ஸரி என்ற கட்டுமான அமைப்பில் உருவாக்கியது. அந்நிறுவனத்தின் பாந்தோம் காரும் இதே கட்டடுமானத்தில் உரவாக்கப்பட்டது தான். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்இந்த கல்லீனன் காரை முதன்முறையாக கடந்த 2018ம் ஆண்டு விற்பவனைக்கு கொண்டு வந்தது. அதன் 2வது சிரீஸ் கார் 2024ம்ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளது.

கல்லீனன் சிரீஸ் 1 காரில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இருந்தது.இந்த காரில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜினை அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இது 571 எச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிளாக் பேட்ஜ் காரில் இதே இன்ஜின் 600 எச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது.

Nargis Fakhri Rolls-Royce Cullinan Gift

இந்த காரின் உட்பகுதி அதிக சொகுசு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளுது. முக்கியமாக டச் ஸ்கிரீன் சிஸ்டத்தில் ஸ்பிரிட் ஓஎஸ் என அந்நிறுவனத்தின் பிரத்தியே ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி பதிவேற்றியுள்ளது. இதை கண்டரோல் செய்ய ரோட்டரி ஆப்ஷனும் உள்ளது. இது போக டிஜிட்டில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிரேடு மார்க் செய்யப்பட்ட அனலாக் கடிகாரணம், 12 இன்ச் எண்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகையின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் ரூ10 கோடி மதிப்பிலான காரை பரிசாக வழங்கியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் பெரிய தொழிலதிபர் என்பதால் அவரால் இவ்வளவு பணத்தை செலவு செய்ய முடியும். இ்நத கார் இந்தியாவிற்கு வந்தால் இதை காணவே பெரும் கூட்டம் கூடும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 23, 2025, 17:00 [IST]
English summary
Nargis fakhri rolls royce cullinan gift 7 crore birthday
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X