பேர குழந்தைகள் உடன் மனுஷன் ஜாலியா இருக்காரு! இந்த காரோட விலை எல்லாம் கேட்டால் தலை சுத்துது
அரேபியன் கடல் (Arabian Sea)-இல் மீன் பிடித்து அதனை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய தனியார் நிறுவனங்கள் ஏகப்பட்டவை நம் நாட்டில் உள்ளன. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான், நாஸ் ஃபிஷ்ஷெரிஸ் (NAS Fisheries) ஆகும். இதற்காகவே தனியாக ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவியுள்ள நாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் முகமது அஷராப் (Muhamed Asharaf) புதியதாக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) காரை வாங்கியுள்ளார். இந்த காரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம்.
கேரளாவில் மலை மற்றும் கடல் பகுதியை தவிர்த்து சமவெளி பகுதியை அதிகமாக பார்க்க முடியாது. இதனாலேயே கேரளாவில் பலரது அன்றாட பிழைப்பு கடல் உணவுகளை சார்ந்தே உள்ளது. இந்திய மீன்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், சிலர் மீனை பிடித்து வெளிநாடுகளுக்கு பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதையே ஒரு தொழிலாக பார்த்து வருகின்றனர்.

அவ்வாறு, மீன் ஏற்றுமதியில் ஈடுப்பட்டுவரும் கேரள நிறுவனம் தான், நாஸ் ஃபிஷ்ஷெரிஸ் ஆகும். 1990ஆம் காலக்கட்டத்திலேயே துவங்கப்பட்ட இந்த நிறுவனம் அரபி கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் இருந்து மீன்களை பிடித்து, கேரளாவின் கொச்சியில் அமைத்துள்ள பதப்படுத்தும் மையத்தில் வைத்து பதப்படுத்தி அப்படியே கொச்சி துறைமுகம் வாயிலாக உலகின் பல நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
600 பணியாட்கள் உடன் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 25% வளர்ச்சியை கண்டுவரும் நாஸ் நிறுவனத்தின் மொத்த பொறுப்பையும் நிர்வாக இயக்குனராக கவனித்து வருபவர், முகமது அஷ்ராப் ஆவார். இவர் குடும்பமாக கொச்சியில் உள்ள லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்று டிஃபெண்டர் 110 காரை வாங்கியுள்ளார். டிஃபெண்டர் 90, 110 மற்றும் 130 என 3 விதமான டிஃபெண்டர் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதில் டிஃபெண்டர் 110 காரை டெலிவிரி பெறுவதற்காக லேண்ட் ரோவர் ஷோரூமுக்கு முகமது அஷ்ராப்பின் குடும்பத்தினர் பென்ஸ் மற்றும் டொயோட்டா கார்களில் வந்தனர். ஷோரூமுக்குள் நுழைந்ததும் பூங்கொத்து மூலமாக வரவேற்கப்பட்ட முகமது அஷ்ராப், புதியதாக டிஃபெண்டர் காரை வாங்குவது தொடர்பான அனைத்து வேலைகளையும் ஷோரூமில் அவரது மகன்கள் கவனித்துக் கொண்டனர்.
ஆவணங்கள் சரிப்பார்ப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த பின், காரை டெலிவிரி பெற போவதை கேக் வெட்டி கொண்டாடிய முகமது அஷ்ராப்பின் குடும்பத்தினர், பின்னர் ஷோரூமுக்கு வெளியே வந்து தங்களது பிராண்ட்-நியூ டிஃபெண்டர் காரை திரையை விலக்கி காண்பித்தனர். வெள்ளை நிறத்திலான டிஃபெண்டர் காரை இந்த குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த டிஃபெண்டர் காரின் உட்புறத்தையும் காண முடிகிறது. காரின் வெளிப்பக்கம் வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், உட்புறம் இளம் மெரூன் நிறத்தில் உள்ளது. டிஃபெண்டர் 110 காரை 3 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வாங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுய தொழில் செய்து முன்னேறிய குடும்பமாக விளங்கும் முகமது அஷ்ராப்பின் குடும்பம், எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெரிய அளவிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளனர் போல... முகமது அஷ்ராப்பின் இந்த வெள்ளை நிற டிஃபெண்டர் 110 கார் சாலையில் கப்பல் போல் மிதந்து செல்லும் அளவை பார்க்க 2 கண்கள் போதவில்லை.


Click it and Unblock the Notifications









