இஸ்ரோவ இதுலையாச்சும் முந்துவோம்!.. பொறாமையில் நாசா செய்த சம்பவம்.. என்னங்க இது நம்பறதா, வேண்டாமா?
இஸ்ரோ உலக நாடுகளையே திரும்பி வைக்கின்ற வகையில் சாதனைகளைச் செய்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் சந்திரயான் 3 (Chandrayaan 3) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. மேலும், இதுவரை எந்த ஒரு நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கியது.
இதுமட்டுமின்றி, பிரக்யான் லேண்டர் தன்னுடைய ஆய்வு பணிகளையும் நிலவின் தென் துருவத்தில் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இவை எந்தவொரு உலக நாடுகளும் செய்திராக சாதனை ஆகும். இதனால்தான் அமெரிக்காவின் நாசா தொடங்கி உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் அனைத்தும் இஸ்ரோவை பார்த்து வியந்து நிற்கின்றன.

இந்த நிலையிலேயே அடுத்ததாக உலக நாடுகளை மீண்டும் மிரட்டும் வகையில் இஸ்ரோ சூரியனை ஆராய்ச்சி செய்யும் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இருக்கின்றது. இதற்கான கவுன்டவுண்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆதித்யா எல்1 விண்கலம் இன்று (செப்டம்பர் 2) காலை 11.05 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கின்றது.
இதற்கான அனைத்த ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதுபோன்று தொடர் சாதனை நிகழ்வுகளை இஸ்ரோ நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில், நாசா அதன் பக்கம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓர் சம்பவத்தை செய்திருக்கின்றது. அது ஓர் பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இந்த விமானம் மின்னல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் எனில் நாசா ஆய்வில் களமிறங்கி இருக்கும் பயணிகள் ஜெட் விமானமானது வெறும் 90 நிமிடங்களில், அதாவது, ஒன்றரை மணி நேரத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்து லண்டனுக்கு பறந்து சென்று விடுமாம்.
அந்த அளவிற்கு அதீத வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஜெட் விமானத்தையே உருவாக்கும் ஆராய்ச்சி பணிகளிலேயே தற்போது நாசா ஈடுபடத் தொடங்கி இருக்கின்றது. இந்த ஜெட் விமானம் கான்கார்டு வகை சூப்பர்சோனிக் விமானத்ததை ஒத்ததாக இருக்கும். இந்த கான்கார்டு வகை விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கே சுமார் 3 ஆயிரம் மைல்களுக்கு மேல் பயணிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

இத்தகைய திறனே நாசா உருவாக்கி வரும் பயணிகள் ஜெட் விமானத்தை வெறும் 90 நிமிடங்களில் நியூயார்க்-லண்டனை சென்றடைய உதவியாக இருக்கப் போகின்றது என நாசா அதன் அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது. நாசா உருவாக்கி வரும் இந்த ஜெட் விமானம் ஒலியைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.
நான்கு மடங்கு அதிக வேகத்தில் அது பயணிக்குமாம். ஆம், நீங்கள் சொன்ன வார்த்தை ஒருவரின் காதுகளை சென்றடைவதற்குள் விமானம் அவ்விடத்தைச் சென்றுச் சேர்ந்துவிடும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான விமானங்கள், குறிப்பாக, பெரிய உருவம் கொண்ட விமானங்கள் ஒலியின் வேகத்தில் 80 சதவீத வேகத்தில் மட்டுமே பயணிக்கின்றன.
கான்கார்டு விமானங்களை விட மிக மிக குறைவான வேக திறனே இதுவாகும். நியூயார்க் நகரிலிருந்து லண்டனுக்கு தற்போது சாத்தியமாக இருப்பதைவிட நான்கு மடங்கு வேகமாகப் பறப்பது என்பது பலரின் கனவாக உள்ளது. இதையே சாத்தியப்படுத்தும் முயற்சியில் தற்போது நாசா களமிறங்கி இருக்கின்றது. நாசா தங்களின் எக்ஸ்-59 விமானத்தை பயன்படுத்தியே இதை சாத்தியமாக்க இருக்கின்றனர்.
ஆகையால், விரைவில் நாசாவிடம் இருந்து ஓர் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட பயணிகள் ஜெட் விமானம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விமானங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்த பணிகள் இரண்டு நிறுவனங்களிடம் வழங்கப்பட இருப்பதாக நாசா தெரிவித்து இருக்கின்றது. சிக்கல்களை தவிர்த்தல், புதுமையான கருத்துகளை உருவாக்குதல், தொழில்நுட்பம் கட்டமைப்பு என ஏகப்பட்ட செயல்களில் அந்த ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரோவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில், சூப்பர் சோனிக் விமானத்தை உருவாக்க இருப்பதாகக் கூறி நாசா உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது. சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியால் ஏற்பட்ட பொறாமையின் உச்சமாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications









