நாளை அமெரிக்க வான்வெளியில் நிகழ இருக்கும் அதிசயம்.. 7வருஷமா சிறுகோளை சுத்திட்டு இருந்த கலம் பூமி திரும்புது!

நம்முடைய பூமியைப் போல் இந்த சூரிய குடும்பத்தில் ஏகப்பட்ட கோள்கள் சூரியனை சுற்றிய வண்ணம் இருக்கின்றன. அதில், எண்ணில் அடங்கா சிறு கோள்களும் அடங்கும். அந்தவகையில் விண்வெளியில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சிறு கோள்ளை ஆராயும் விதமாக கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் ஓசிரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-REx) எனும் விண்கலத்தை நாசா விண்ணிற்கு அனுப்பியது.

இந்த விண்கலம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அந்த விண்கலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பூமிக்கு திருப்பிக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கிவிட்ட நிலையில் நாளைய தினம் இந்த ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் அது சிறுகோளில் இருந்து சேகரித்த மாதிரிகளை பூமிக்கு அனுப்பி வைக்க இருக்கின்றது.

Nasa osiris-rex

பெண்ணு (Bennu) எனும் சிறிய கோளில் இருந்தே மாதிரிகள் எடுக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விண்கலம் கடந்த மூன்று முன்னரே பெண்ணு சிறு கோளில் இருந்து மாதிரிகளைச் சேர்த்துவிட்டது.

இந்த நிலையிலேயே இந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு ஓசிரிஸ் ரெக்ஸ் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றது. இது நாளை காலை அமெரிக்காவின் உட்டா எனும் பகுதியில் மாதிரிகளைச் சேகரித்து வைத்திருக்கும் கேப்ஸ்யூலை தரையிறக்கும். உள்ளூர் நேரப்படி சுமார் காலை 9 மணி அளவில் இந்த நிகழ்வு அரங்கேறும். உடா என்பது பாலைவன பகுதியாகும்.

Nasa bennu asteroid

இந்த இடத்திலேயே மாதிரிகளைத் தாங்கிய அந்த கேப்ஸ்யூல் பத்திரமாக தரையிறக்கப்படட இருக்கின்றது. மணிக்கு 67 ஆயிரம் மைல் வேகத்தில் இந்த களம் பூமியை நோக்கி வரும் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதாவது மணிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கிமீ வேகத்தில் கேப்ஸ்யூல் பூமியை நோக்கி வரும்.

இந்த மணிக்கு பூமியை நெருங்க 13 நிமிடங்கள் இருக்கும்போது மணிக்கு 43 ஆயிரம் கிமீ வேகமாகக் குறைக்கப்படும். இந்த நிலையில் கலனின் கொதிநிலை 2,800 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்த நிலையிலேயே இரண்டு விதமான பாராசூட்களைக் கொண்டு கேப்ய்ஸ்யூலின் வேகம் குறைக்கப்பட இருக்கின்றது.

பூமியை நெருங்கும் முன் ஒன்றும், பூமியை நெருங்கிய பின்னர் ஒன்றும் என இரு பாராசூட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இரண்டாவது பாராசூட்டே கேப்ஸ்யூலை பாலை வனத்தில் மிக மிக குறைவான வேகத்தில் தரையிறக்க உதவியாக இருக்கப்போகின்றது. இருப்பினும் இது தரையை வந்து மோதும்போது சுமார் 650 சதுர அடிக்கு பெரிய பள்ளம் ஏற்படலாம் என கணிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இந்த இடத்தை நாசா பாதுகாப்பு வளையத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஏற்கனவே அந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த தரையிறக்கத்தில் ஏதேனும் சிறு சிக்கல் ஏற்பட்டாலும் அந்த கலம் சூரியனை வட்டமடிக்கும் வகையில் திருப்பி விடப்படும் என்றும், பின்னர் மீண்டும் 2025 ஆம் ஆண்டில் மீண்டும் இந்த கலத்தை பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பெண்ணு சிறு கோளில் இருந்து எடுத்து வரப்படும் மாதிரிகள் நேரடியாக நாசாவில் அமைந்துள்ளது தனி ஆராய்ச்சி அறைக்கு எடுத்துச் செல்லப்படும் அங்கு வைத்தே மாதிரிகள் சில எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றது. சில மாதிரிகளை எதிர்காலத்திற்காகவும் எடுத்து வைக்கப்படும் என கூறப்படுகின்றது.

டெக்சாஸில் உள்ள நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரிலேயே இந்த அனைத்து பணிகளும் நடைபெற இருக்கின்றது. மாதிரிகளைக் கொண்டு செய்யப்படும் ஆய்வின் முடிவுகள் சிலவற்றை அக்டோபர் மாதத்தில் நாசா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று விண்வெளியில் இருந்து மாதிரிகள் பூமிக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு முன்னதாக 1990களிலேயே இந்த முயற்சியில் நாசா ஈடுபட்டதும் குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் இஸ்ரோ சமீபத்தில் உலக நாடுகளின் வாயை அடைக்கும் வகையில் சந்திரனின் தென் துருவத்திற்கே விண்கலத்தை அனுப்பி சாதனைப் படைத்தது. இது அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தென் துருவத்தில் அதன் கால் தடத்தை பதித்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றுமொரு மைல்கல்லை எட்டும் விதமாக மீண்டும் நீண்ட நித்திரையில் இருக்கும் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 23, 2023, 15:47 [IST]
English summary
Nasa s osiris rex returning to earth after 7 years
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+