நீண்டநாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்! யார் இவர்? இந்தியாக்கும் இவருக்கும் என்ன தொடர்பு!

போயிங் ஸ்பேஸின் முதல் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் (Crew Flight Test) பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) பறக்க இருக்கும் இரு விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டிருக்கின்றது. இதில், இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றார். யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?, என்ன மாதிரியான சாதனைகளை இந்த துறையில் அவர் படைத்துள்ளார் என்பது பற்றிய முழு விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

2006 டிசம்பர் 9ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்ட டிஸ்கவரி விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்டதன் வாயிலாக உலகளவில் அறியப்பட்ட நபராக மாறியவர் சுனிதா வில்லியம்ஸ். இதுவே அவருடைய முதல் விண்வெளி பயணம் ஆகும். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார்.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கின்றார். இதுவரை இரண்டு முறை அவர் விண்வெளிக்கு பயணித்திருக்கின்றார். முதலில் 2006 ஆம் ஆண்டிலும், இரண்டாவது முறையாக 2012 ஆம் ஆண்டிலும் அவர் விண்வெளி சென்றிருக்கின்றார். விண்வெளியில் மாரத்தான் ஓடுவது போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்திருக்கின்றார்.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

இரண்டு முறையும் சேர்த்து 322 நாட்கள் வரை அவர் விண்வெளியில் தங்கியிருக்கின்றார். இதைத்தொடர்ந்தே, தற்போது மீண்டும் ஒரு நீண்ட நாட்கள் விண்வெளி பயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கின்றார். இவரின் இந்த சாதனைகள் பெண்கள் சமூகத்திற்கே பெரும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

இந்த நிலையில் மற்றுமொரு சாதனை பயணத்தை நோக்கி சுனிதா வில்லியம்ஸ் புறப்பட தயாராகி வருகின்றார். விரைவில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு முதல் முறையாக புறப்பட தயாராக இருக்கும் போயிங்கின் ஸ்டார்லைனரில் சுனிதா பயணிக்க இருக்கின்றார். இவருடன் சேர்ந்து நாசாவின் பேரி பட்ச் என்று அழைக்கப்படும் வில்மோரும் பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

சுனிதா வில்லியம்ஸ் பைலட்டாகவும், வில்மோர் கம்மேண்ட் வழங்கும் நபராகவும் இந்த பயணத்தின்போது இருப்பர். இதுகுறித்த தகவலை அமெரிக்க ஸ்பேஸ் ஏஜென்சி கடந்த ஜூன் 16ம் தேதி அன்று உறுதிப்படுத்தியது. தொடர்ந்து, இந்த குழுவினர் சுமார் இரண்டு வாரங்கள் வரை விண்வெளி நிலையத்தில் தங்கி பணி புரிய இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

ஆனால், இந்த பயணம் எப்போது தொடங்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் வெகு விரைவில் இப்பயணம் ஆரம்பிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இருவருடன் சேர்த்து பேக்-அப் பைலட்டாக ஃபின்கோ என்பவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

இவர்கள் ஃப்ளோரிடாவில் உள்ள கேனேவரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் இருந்து யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் வி ராக்கெட் வாயிலாக புறப்படுவர். இந்த பயணத்திற்காக தற்போது தீவிர பயற்சியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

முன்னதாக சிஎஃப்டி-யின் பேக்-அப் டெஸ்ட் பைலட்டாக இருந்தவரே வில்லியம்ஸ். பின்னர், நாசாவின் போயிங் ஸ்டார்லைனர்-1 மிஷனின் கம்மேண்டராக உயர்த்தப்பட்டார். தற்போதைய புதிய ரோலின்கீழ் அவர் க்ரூ ஃப்ளைட்டின் டெஸ்ட் பைலட்டாக உருவெடுத்துள்ளார். முன்னதாக இந்த இடத்திற்கு நாசா விண்வெளி வீரர் நிகோல் மான் என்பவரே நியமிக்கப்பட்டர்.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

பின்னர் இவரை ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-5 மிஷனில் இணைத்ததனால், இவருக்கு பதிலாக, அந்த இடத்தை நிரப்பும் விதமாக வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். க்ரூ ஃப்ளைட்டை சோதனை செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விண்வெளி பயணத்திற்காக தற்போது இரு விண்வெளி வீரர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது வரை இருவரை மட்டுமே விண்வெளிக்க அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த பணியில் மேலும் சிலரையும் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேவைப்பட்டால் இந்த செயலை அது செய்யும் என கூறப்படுகின்றது.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?

குஜராத்தைச் சேர்ந்த தீபக், ஸ்லேவேனியாவைச் சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிகளுக்கு பிறந்தவரே சுனிதா வில்லியம்ஸ். இவர் அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தார். நீதம் உயர்நிலை பள்ளியில் 1983 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இவர், 1987 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கப்பற்படை அகாடமியில் அறிவியில்துறையில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.

நீண்ட நாள் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்... யார் இவர்? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

இதன் பின்னர் 1989 ஆண்டு அமெரிக்காவின் கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 1993 இல் டெஸ்ட் ஃப்ளைட் ஸ்கூலில் பட்டத்தையும், 1995 ஆம் ஆண்டில் ஃப்ளோரிடா தொழில்நுட்ப கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார். இதன் பின்னரே நாசாவால் சுனிதா வில்லியம்ஸ் 1998 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையிலேயே போயிங் தயாரித்த ஸ்டார்லைனரில் விண்வெளி செல்ல அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nasa selects sunita williams as pilot for starliner s first crewed mission
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X