செவ்வாய் கிரகத்திற்கான ஸ்பெஷல் வாகனம் அறிமுகம் : நாசாவின் அடுத்தக்கட்ட பிளேன்..!!

Written By:

செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற விண்வெளிக்கான வாகனத்தை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

செவ்வாய் கிரகத்திற்காக பயணிக்க தயாராகி வரும் திட்ட மாதிரிகளை ஃபிளோரிடாவின் கென்னடி விண்வெளி வளாகத்தில் நாசா கட்டமைத்துள்ளது.

அங்கு, விண்வெளி துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு வேண்டி, மார்ஸ் ரோவர் கான்செப்ட்டில் இந்த வாகனத்தை நாசா தயாரித்து அறிமுகம் செய்து வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

‘சம்மர் ஆஃப் மார்ஸ்' என்ற பெயரில் இதற்காக நடந்து வரும் பிரச்சாரங்களில், செவ்வாய் கிரகத்திற்காக இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளை நாசா இளைஞர்களிடத்தில் பரப்பி வருகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் வரக்கூடிய வாகனங்களை போன்று, மார்ஸ் ரோவர் கான்செப்ட் வாகனங்களை நிஜத்தில் நாசா அறிமுகப்படுத்தி உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

இந்த வாகனங்கள் படத்தில் காட்டப்பட்ட போது, அவை தானாக இயக்கம் கொண்டவையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் நடைமுறைக்கு வந்துவிட்ட இந்த வாகனங்களில் சுமார் 4 பேர் அமர்ந்து பயணம் மேற்கொள்ளலாம்.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

மேலும் வண்டியின் பின்பக்கத்தில் சிறிய ஆய்வகமும் உள்ளது. இதில் சில ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

பார்ப்பதற்கு விண்வெளியில் ஓட்டக்கூடிய திறனுடையதாக கருதப்படும் இந்த வாகனத்தை நாம் அங்கு ஓட்ட முடியாது என்பது தான் இதில் வருத்தமான செய்தி.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

செவ்வாய் கிரகத்திற்காக நாசா பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதைக்குறித்த பிரச்சாரங்களை தற்போதைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலே மார்ஸ் ரோவர் கான்செப்ட் வாகனம் அறிமுகமாகி உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

ஹாலிவுட்டில் வெளியாகி செம ஹிட்டடித்த ’ட்ரான்: லெகசி’ மற்றும் ’தி டார்க்நைட்’ போன்ற படங்களில் மிரட்டு தோற்றம் கொண்ட வாகனங்களை தயாரித்தவர்கள் பார்க்கர் சகோதரர்கள்.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

இவர்களின் கைவண்ணத்தில் தான் மார்ஸ் ரோவர் கான்செப்ட் வாகனமும் தயாராகியுள்ளது. நாசா ஆலோசனைகளை வழங்க வெறும் 5 மாதங்களில் பார்க்கர் சகோதரர்கள் இதை தயாரித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

சூர்ய தகடுகளால் ஆற்றல் பெறும் 700 வால்ட் திறன் பெற்ற பேட்டரிக்கள் இதில் உள்ளன. வாகனத்திற்குள் ரேடியோ மற்றும் நேவிகேஷன் தொழில்நுட்பம் உள்ளன.

இந்த தொழில்நுட்பங்களை உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பை கொண்டு தேவைப்படும் நேரத்தில் நாம் இயக்கலாம்.

செவ்வாய் கிரகத்திற்கு போக ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்!

மார்ஸ் ரோவர் கான்செப்ட் வாகனத்தை அடிப்படையாக வைத்து தான், செவ்வாய் கிரகத்தில் இயக்கக்கூடிய வாகனம் தயாராக உள்ளது.

இங்கே எல்லாரும் ஓட்டுவது போன்றில்லாமல், அதற்காக ஸ்பெஷலாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே அதை இயக்குவார்கள்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
NASA Unveils Mars Rover Concept Vehicle For Futuristic Purposes. Click for Details...
Story first published: Thursday, June 8, 2017, 11:12 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark