3 மணிநேரத்தில் லண்டனிலிருந்து நியூயார்க்... புதிய கன்கார்டு விமானத்தை வெளியிட்ட நாசா!

Written By:

புதிய சூப்பர்சானிக் ரக விமானத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வருகின்றன. முதல்முறையாக இந்த விமானத்தை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

உலகின் மிக அதிவேக பயணிகள் விமான மாடல் என்ற பெருமை கன்கார்டு விமானத்திற்கு உண்டு. இயக்குதல் செலவு மிக அதிகம், விபத்து அபாயம் போன்ற காரணங்களால், 2003ம் ஆண்டு இந்த விமானம் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

இந்த நிலையில், போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் விதத்தில், அதி விரைவான பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூப்பர்சானிக் பயணிகள் விமானங்கள் உருவாக்கம் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

அந்த வகையில், நாசா அமைப்பும், லாக்ஹீட் மார்ட்டின் விமான நிறுவனமும் இணைந்து புதிய சூப்பர் சானிக் ரக பயணிகள் விமானத்தை தயாரித்து வருகின்றன. 290 மில்லியன் பவுண்ட் முதலீட்டில் இந்த புதிய சூப்பர்சானிக் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

இந்த புதிய விமான திட்டம் QueSST என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த விமானம் கன்கார்டு விமானத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும்.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

லண்டனிலிருந்து நியூயார்க் நகரை சாதாரண பயணிகள் விமானங்கள் சராசரியாக 8 மணி நேரம் செல்கின்றன. இந்த விமானம் வெறும் மூன்று மணிநேரத்தில் கடந்துவிடும். இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணிக்க முடியும் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

சூப்பர்சானிக் வேகத்தை எட்டும்போது சானிக் பூம் என்ற அலாதி சப்தத்தை கன்கார்டு விமானம் வெளிப்படுத்தும். ஆனால், இந்த விமானம் கன்கார்டு விமானத்தைவிட அதிர்வுகளும், சப்தங்களும் மிக குறைவாக இருக்கும்.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

மாதிரி விமானத்தை உருவாக்கும் முயற்சிகளில் படிப்படியாக வெற்றிகள் கிடைத்து வருகின்றன. எனவே, இந்த விமானத்தின் சோதனை ஓட்டங்கள் வரும் 2021ம் ஆண்டிலிருந்து துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதிவேகத்தில் பயணிக்கும் புதிய கன்கார்டு விமானத்தை தயாரிக்கும் நாசா!

இந்த விமான தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் விமான போக்குவரத்து துறை புதிய பரிமாணத்தில் செல்லும். பயணிகளுக்கும் மிக விரைவான சேவையை பெற வழி பிறக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Nasa Unveils Supersonic Passenger Jet Concept.
Story first published: Thursday, September 28, 2017, 13:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark