அடுத்த கட்டத்திற்கு செல்லும் நாசா... மின்சார விமானத்தை தயாரிக்கிறது!

By Saravana Rajan

விமானவியல் மற்றும் விண்கல தொழில்நுட்பத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா முதன்மை வகிக்கிறது. எதிர்காலத்திற்கு தேவையான அதநவீன தொழில்நுட்பங்களை கொண்ட விமானங்களை அந்த அமைப்பு தயாரித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது பேட்டரியில் இயங்கும் மின்சார விமானத்தின் மாதிரி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானத்தை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

எக்ஸ்-57 என்ற குறியீட்டுப் பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய மின்சார விமானத்திற்கு மேக்ஸ்வெல் என்று பெயரிட்டு அழைக்கிறது நாசா.

மின்மோட்டார்கள்

மின்மோட்டார்கள்

இந்த விமானத்தின் இறக்கை பகுதியில் 14 மின் மோட்டார்கள் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. போதுமான மேல் எழும்புவதற்கான உந்து சக்தியை இந்த மின் மோட்டார்கள் வழங்கும்.

 சிறப்புகள்

சிறப்புகள்

மின்சார கார்கள் போன்றே, இந்த விமானமும் பறக்கும்போது அதிர்வுகளும், சப்தமும் மிக மிக குறைவாக இருக்கும். புகை வெளியேற்றாது.

வேகம்

வேகம்

இந்த விமானம் மணிக்கு 281 கிமீ வேகம் வரை பறக்கும். சாதாரண விமானங்களை ஒப்பிடும்போது, எரிபொருள் திறன் தேவையும் சாதாரண விமானங்களைவிட 5 மடங்கு குறைவாக இருக்கும்.

சோதனை

சோதனை

இந்த மின்சார விமானத்திற்கான தொழில்நுட்பத்தை தற்போது TECNAM P2006T என்ற விமானத்தில் பொருத்தி சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இயக்குதல் செலவு

இயக்குதல் செலவு

மரபுசார் எரிபொருளில் இயங்கும் விமானங்களை விட இந்த விமானத்தை இயக்குவதற்கான செலவீனம் 40 சதவீதம் வரை குறைவாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
NASA's X-57 Electric Research Plane.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X