9 ஏர்பேக், அடாஸ் இருந்தும் உசுர காப்பாத்த முடியல! இவர் பண்ண சின்ன தப்பு தான் எல்லாத்துக்கும் காரணம்
இன்று கார்களில் விபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்காகவும், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காகவும் பல அம்சங்கள் வந்துவிட்டன.இந்நிலையில் 9ஏர்பேக்குகள், அடாஸ் தொழிற்நுட்பம் என பல அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழிந்துள்ளார். அவரது மகன் மோசமான நிலையில் சிகிக்சைக்காக தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாசிக்கை சேர்ந்த தொழிலதிபர் சுனில் ஹெக்ரே, இவர் தனது குடும்பத்தினருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தார். இவருக்க சொந்தமான மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400 டி எஸ்யூவி காரில் இவர் பயணித்துள்ளார். இந்த காரை இவரது மகன் இயக்கியுள்ளார்.இந்த காரில் இவர்கள் சம்ருதி மஹாகர்க் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கார் திடீரென விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலே தொழிலதிபர் சுனில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மற்றும் இரண்டு குழந்தைகளும் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன தகவலின்படி இந்த காரில் சுனில் குடும்பத்தினர் வேகமாக வந்துள்ளனர். அந்த நேரத்தில் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பொழுது எதிர் வந்த வாகனம் வேகமாக தண்ணீரில் வந்ததால் தண்ணீரில் சுற்றிலும் தெளித்தது. அப்பொழுது. இந்த காரின் விண்ட் ஷீல்டு பகுதியில் தண்ணீர் பட்டதால் இவர்களுக்கு எதிரில் ஒன்றும் தெரியாமல் போயிருக்கும்.

இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாடை இழந்து எதிர்புறம் உள்ள லேனிற்கு சென்று அதையும் தாண்டியுள்ள தப்பு கம்பியில் மோதி தலைகுப்புற உருண்டாக தெரிவித்தனர். இதை வைத்து பார்க்கும் போது கார் மிக வேகமாக வந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்தஅதிக வேகம் தான் விபத்திற்கான முக்கியமான காரணமாக இருக்கும் இந்த விபத்தில் காஸ்ட்லியான காரில் பல அம்சங்கள் இருந்தும் தொழிலதிபர் பலியானதற்கு என்ன காரணம்?
இவர்கள் பயணித்த மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400 டி எஸ்யூவி காரில் 9 ஏர்பேக்குகள், அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட டாப் கிளாஸ் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும் சுனில் இந்த கார் விபத்தில் உயிரிழந்ததற்கு முக்கியமான காரணம் அவர் சீட் பெல்ட் அணியாதது தான். அவர் சீட் பெல்ட் அணியாததால் கார் விபத்தில் சிக்கிய இம்பேக்டில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார். காரில் இருந்த மற்றவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது.

அதிக வேகத்தில் வந்தது ஒரு காரணம் என்றால் சீட் பெல்ட் போடதது விபத்தின் விளைவுகள் அதிகமானதற்கு முற்றொரு காரணம். இவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் ஏர்பேக் செயல்பட்டு அவர் காருக்கு வெளியில் தூக்கி வீசப்படாமல் இருந்திருப்பார். மேலும் அவருக்கு காயங்களும் குறைவாக இருந்திருக்கும். அவர் செய்த சிறிய தவறுதான் இன்று அவர் உயிரையே பறித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்திற்கு முக்கியமான காரணம் வேகமாக வந்ததாக இருந்தாலும் சாலயில் தேங்கியிருந்த மழை நீரும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகாரிகள் சாலையை சரியாக கண்காணித்து பராமரித்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்க முடியும். சாலையில் தேங்கிய நின்ற மழை நீரை எதிர் வந்த கார் கவனிக்காமல் அதில் ஏற்றிதால் தண்ணீர் சிதறியடித்ததில் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









