ஒரு தேசிய விருது படம் கொடுத்தாச்சு... இயக்குனரின் வாழ்வில் இனி நடப்பது எல்லாமே நல்லதுதான்!!
ஒரு திரைப்படம் தேசிய விருது பெறுகிறது என்றாலே அந்த படத்தில் ஏதோ ஒரு முக்கியமான கருத்து உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு, கடந்த 2023ஆம் ஆண்டில் வெளிவந்து பல்வேறு தேசிய விருதுகளை அள்ளி சென்ற மலையாள திரைப்படம் 'ஆட்டம்' (Aattam). கதை, திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை குவித்த ஆட்டம் திரைப்படத்தை எடுத்து கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஆனந்த் எகார்ஷி (Anand Ekarshi). இவர் புதியதாக ஸ்கோடா கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுதொடர்பான படங்கள் இன்ஸ்டாகிராமில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆனந்த் எகார்ஷி இயக்கிய ஆட்டம் திரைப்படத்தை பற்றியும், அவர் புதியதாக வாங்கியுள்ள ஸ்கோடா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மலையாள சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள், டூயட் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், கதையில் கவனம் செலுத்தி மிகுந்த வெற்றி பெற்றுள்ள படங்கள் ஏராளமானவற்றை பார்த்துள்ளோம்.

உதாரணத்திற்கு திரிஷ்யம், சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமேல் பாய்ஸ், ஆடுஜீவித்தம் என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில், கடந்த 2023ஆம் ஆண்டில் திரைக்கு வந்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த மலையாள திரைப்படம் ஆட்டம் ஆகும். ஒரு குற்ற பின்னணியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆட்டம் திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருது, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது என 3 தேசிய விருதுகளை வாரி குவித்தது.
மேலும், கடந்த ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தியன் ஃப்லிம் ஃபெஸ்டிவலில் 2023 கிராண்ட் ஜூரி விருதையும் ஆட்டம் திரைப்படம் வென்றது. இத்தகைய திரைப்பட காவியத்தை எடுத்து மலையாள சினிமா உலகில் கவனத்தை ஈர்த்த ஆனந்த் எகார்ஷி இயக்கிய முதல் திரைப்படம் ஆட்டம் என சொன்னால் நம்ப முடிகிறதா. இதற்கு முன்னர், மலையாளத்தில் சில குறும்படங்களையும், மியுசிக் வீடியோக்களையும் மட்டுமே இவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் ஆனந்த் எகார்ஷி புதியதாக ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) என்கிற மாடர்ன் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். இதனை கொச்சியில் செயல்படும் சம்பந்தப்பட்ட ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூம் வீடியோவாக காட்சிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்கோடா குஷாக் காரை வெள்ளை நிறத்தில் இயக்குனர் ஆனந்த் எகார்ஷி வாங்கியுள்ளார். இதனை கேண்டி வெள்ளை என ஸ்கோடா நிறுவனம் அழைக்கிறது.
இது இல்லாமல், அடர் கருப்பு, கார்பன் ஸ்டீல், பிரில்லியண்ட் சில்வர், டொர்னாடோ சிவப்பு, ஹனி ஆரஞ்சு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் குஷாக் கிடைக்கிறது. மற்றப்படி, குஷாக் காரின் எந்த வேரியண்ட்டை ஆனந்த் எகார்ஷி வாங்கியுள்ளார் என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. கிளாசிக், ஆனிக்ஸ் எடிசன், சிக்னெச்சர், ஸ்போர்ட்லைன், மோண்டே கார்லோ, பிரெஸ்டீஜ் உள்ளிட்ட வேரியண்ட்களில் குஷாக் காரை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது.

குஷாக் ஆனது ஸ்கோடாவின் 5-சீட்டர் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. ஆனால், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. விலை குறைவான வேரியண்ட்களில் 1.0 லி என்ஜினும், விலைமிக்க டாப் வேரியண்ட்களில் 1.5 லி என்ஜினும் வழங்கப்படுகின்றன.
இதில் 1.0 லி டர்போ என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும், 1.5 லி என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடனும் வாங்கலாம். பாதுகாப்பு அம்சங்களாக இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, மல்டி-கொலிஷன் பிரேக்கிங் உள்ளிட்டவை குஷாக் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா குஷாக் ஆனது உண்மையில் அருமையான கார் ஆகும். இந்தியாவிற்காகவே ஸ்கோடா நிறுவனம் பார்த்து பார்த்து உருவாக்கிய கார். விலையும் பெரியதாக அதிகம் இல்லை. தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் மட்டுமில்லாமல், அப்பர் மிடில்-கிளாஸ் மக்களாலும் வாங்கக்கூடிய விலையில் தான் குஷாக் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications









