டோல்கேட்டை எல்லாம் எப்ப தூக்குவீங்கன்னு ஒரு கேள்வி தான் கேட்டாரு! ஒட்டு மொத்த இந்தியாவுமே ஆடிப்போச்சு!

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக ராஜ்யசபா எம்.பி. பி. வில்சன், நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் முதலீடுகள் மற்றும் மீட்டெடுப்பு தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதா என்பது குறித்து கேட்ட கேள்விக்கு அளித்த பதில் மூலம் நமக்கு கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் பேசுகையில், சுங்க சாவடிகளை குறைக்கவோ அல்லது மூடவோ வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க ஆய்வுகள் தேவையில்லை என்று கூறினார். நெடுஞ்சாலை அமைச்சகம், கட்டண விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலையின் எந்தப் பகுதியையும் பயன்படுத்துவதற்கு முன்பு பயனர்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளது.

National Highway Toll Collection

2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூல்) விதிகளின்படி, உரிமம் வழங்கப்பட்ட காலம் முடியும் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த காலம் முடிந்த பிறகு, அரசு அல்லது செயல்படுத்தும் துறைக்காக குறிப்பிட்டபடி கட்டணங்களை தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.

Take a Poll

பி.ஓ.டி. திட்டங்களுக்கு, உரிமம் வழங்கப்பட்ட காலம் முடிந்ததும், டோல் கேட்கள் அரசுக்கு மாற்றப்படும். பின்னர் அரசு தனது நிறுவனங்கள் மூலம் சுங்க கட்டணங்களை வசூலிக்கும். பொது நிதியளிக்கப்பட்ட திட்டங்களில், நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள் அல்லது சுற்றிச் செல்லும் பாதைகள் போன்ற பிரிவுகள் என எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன, மேலும் விதிகளின்படி ஆண்டுதோறும் இவை உயர்த்தப்பட்டும் வருகின்றன.

National Highway Toll Collection

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்தும் பி. வில்சன் விசாரித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தமிழ்நாட்டில் 1,046.84 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைக்க 38,359.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 48 திட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த திட்டங்கள் 2027 பிப்ரவரிக்குள் ஒவ்வொரு கட்டணமாக நிறைவடையும் நோக்கத்துடன் இருப்பதாக அவர் கூறினார்

இந்தப் பணிகளை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள், காடு அழிப்பு செய்வதில் தாமதங்கள், பயன்படுத்த முடியாத இடத்தில் சாலை அமைக்கும் சவால்கள், இட அனுமதிகள், அதீத மழை, மழைக்காலங்களில் பணிபுரிவதற்கு எதிராக என்.ஜி.டி. உத்தரவுகள், ஒப்பந்ததாரர்களின் மோசமான திட்டமிடல் மற்றும் சாலை அமைப்பதற்கான பொருட்களை திரட்டுதல் ஆகிய பிரச்சனை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

National Highway Toll Collection

சுங்க கட்டணங்களை குறைப்பதற்காக ஆய்வுகள் தேவையில்லை எனவும் அடிப்படை வசதி நிதி நிர்வாகத்தைத் தொடர்ந்து செய்வதற்கான அமைச்சகம், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நிலையான வருவாய் உருவாக்குதற்காகவும் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் தற்போது சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான செலவு தொகை வசூலான பிறகும். அதை இயங்குவதற்கான செலவுகள், தொடர்ந்து மேம்படுத்துவதற்கான செலவுகள் என பல செலவுகள் இருப்பதால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் இ்நத கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக தற்போது பேச்சு எழுந்துள்ளது.

FAQs

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் எப்போதும் வசூலிக்கப்படுமா?

ஆம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் எப்போதும் வசூலிக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

கட்டண சாவடிகளை மதிப்பீடு செய்வதற்கு ஆய்வுகள் தேவையா?

இல்லை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கட்டண சாவடிகளை குறைக்கவோ அல்லது மூடவோ வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஆய்வுகள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

BOT திட்ட உரிம காலம் முடிந்த பிறகு கட்டண சாவடிகள் என்னவாகும்?

BOT திட்டங்களுக்கான உரிம காலம் முடிந்ததும், கட்டண சாவடிகள் அரசாங்கத்திடம் மாற்றப்படும், பின்னர் அவை தங்கள் முகவர்கள் மூலம் பயனர் கட்டணங்களை வசூலிக்கும்.

தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன?

தமிழ்நாட்டில் 1,046.84 கிமீ நீளமுள்ள 38,359.25 கோடி ரூபாய் மதிப்பிலான 48 திட்டங்கள் நிலுவையில் உள்ளன, இவை பிப்ரவரி 2027 க்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்த திட்டங்களை முடிப்பதில் சில சவால்கள் என்ன?

சவால்கள்: நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் பிரச்சனைகள், காடு அழிப்புக்கான தாமதங்கள், பொதுப் பயன்பாட்டுப் பணிகளை மாற்றுவதில் ஏற்படும் சவால்கள், கடன் தொகைக்கு ஒப்புதல்கள், அதிக மழை, மழைக்காலங்களில் வேலை செய்வதற்கு எதிராக NGT உத்தரவுகள், ஒப்பந்ததாரர்களின் மோசமான திட்டமிடல் போன்றவை.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Friday, March 14, 2025, 11:05 [IST]
English summary
The Ministry of Road Transport clarifies that tolls on National Highways will be collected indefinitely without audits. Union Minister Nitin Gadkari highlights user fees are necessary for infrastructure funding and outlines ongoing projects in Tamil Nadu valued at Rs 38,359.25 crore.
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X