கேரளாவுக்கு சென்றால் ஹைவேயில் இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! போலீஸார் விரட்டி, விரட்டி பிடிப்பாங்க!

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கான வேக வரம்பு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் இருந்து இனி கேரளாவுக்கு செல்வோர் நேஷ்னல் ஹைவேயில் நம்ம ஊரில் செல்வதுபோல் சென்றால், அபராதம் விதிக்கப்படும் என்கிற அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

சாலை விபத்துகளை குறைக்க, கேரள மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்கிறது. அதில் ஒரு பகுதியாக ஹைவேயில் வாகனங்களை ஓட்டுவதற்கான ஸ்பீடு லிமிட் கடந்த 1 வருடத்தில் தற்போது 2வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், கடந்த ஆண்டில் ஹைவே ஸ்பீடு லிமிட்டை கேரள மாநில அரசாங்கம் குறைத்திருந்தது.

kerala highways speed limit reduced

அதனை தொடர்ந்து, சரியாக 1 வருடம் கழித்து தற்போது மீண்டும் ஸ்பீடு லிமிட் அந்த மாநிலத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே பொருந்தும். மற்றப்படி, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதற்கு கீழ் உள்ள நகர சாலைகளுக்கு பொருந்தாது. இந்த சாலைகளுக்கு வெவ்வேறு விதமான ஸ்பீடு லிமிட் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரையில், 6 பாதைகள் (லேன்கள்) அல்லது அதற்கு மேல் உள்ள ஹைவே-களில் பயணிப்பதற்கு மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஸ்பீடு லிமிட் பொருந்தும். மற்றப்படி, 4 லேன்களை மட்டுமே கொண்ட நெடுஞ்சாலைகளில் பொருந்தாது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 35 ஆயிரம் கிமீ-க்கும் அதிகமாக 4-லேன் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

kerala highways speed limit reduced

சரி, கேரளாவில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பீடு லிமிட்டை பற்றி பார்ப்போம். மற்ற மாநிலங்களை போன்று, ஹைவேயில் செல்லும் வாகனங்கள் கேரளாவில் எம்1, எம்2, மற்றும் எம்3 என 3 ஆக பிரிக்கப்படுகின்றன. இதில் எம்1 ஆனது டிரைவர் இருக்கை உடன் சேர்ந்து மொத்தம் 9 இருக்கைகளை கொண்ட வாகனங்கள் ஆகும். கார்கள், சிறிய ரக வேன்கள் உள்ளிட்டவை இந்த பிரிவின் கீழ் தான் வரும்.

எம்1 வாகனங்களுக்கான ஸ்பீடு லிமிட் ஆனது 110kmph-இல் இருந்து 100kmph ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளாவில் ஹைவேயில் கார் & வேன்களில் அதிகப்பட்சமாக 100kmph வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். எம்2 மற்றும் எம்3 வாகனங்களை பொறுத்தவரையில், இவை, 9க்கும் அதிகமான இருக்கைகளை கொண்டவை ஆகும். ஆதலால், இவை கனரக வாகனங்களாக விளங்குகின்றன.

kerala highways speed limit reduced

இந்த கனரக வாகனங்களுக்கான ஸ்பீடு லிமிட் 95kmph-இல் இருந்து 90kmph ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் கீழ் வருகின்றன என்றாலும், தங்களது மாநிலத்துக்குள் வேக வரம்பை மாற்றிக் கொள்ளும் உரிமை மாநில அரசாங்கங்களுக்கு உள்ளது. ஆனால், மாற்றுவதற்கு முன் நிச்சயமாக மத்திய நெடுஞ்சாலை துறையிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் பராமரிக்கப்படும் 6 மற்றும் 4-லேன் ஹைவேகளில் அதிகப்பட்சமாக 100kmph வேகத்திற்கு செல்லலாம். இருப்பினும், இந்த சாலைகளில் வாகன ஓட்டிகளின் வேகத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் கேரள மாநில போக்குவரத்து துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், 4-லேன்களை மட்டுமே கொண்ட கேரள ஹைவேகளில் பயணிப்பதற்கு ஸ்பீடு லிமிட்களில் எந்த மாற்றமும் இல்லை.

kerala highways speed limit reduced

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புது, புது பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளையும், விரைவு சாலைகளையும் மத்திய அரசு அமைத்து வருகிறது. அதேநேரம், பயண நேரத்தை எவ்வாறு எல்லாம் குறைக்க முடியும் என்பதையும் மத்திய நெடுஞ்சாலை துறை ஆலோசித்து வருகிறது. அதாவது, ஹைவேகளில் ஸ்பீடு லிமிட்டை அதிகரிக்கலாமா என்கிற பேச்சு எழுந்துள்ளது. ஆனால், மறுபக்கம் கேரள அரசாங்கம் ஸ்பீடு லிமிட்டை குறைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் என்.எச்-இல் கார்களுக்கு ஸ்பீடு லிமிட் 120kmph ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 21:46 [IST]
English summary
National highways speed limit reduced again in kerala check all details here
மேலும்... #off beat #indian roads #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X