இன்னமும் இவ்ளோ அழகா இருக்காங்களே... மிகவும் விலை உயர்ந்த காரை வாங்கனது அவங்களா... அடையாளமே தெரியல...

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை நவ்யா நாயர் (Navya Nair). தமிழில் மாய கண்ணாடி மற்றும் அழகிய தீயே உள்ளிட்ட திரைப்படங்களில் நவ்யா நாயர் நடித்துள்ளார். இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாக உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.30 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.34 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Navya Nair Buys BMW X7

செயல்திறனை பொறுத்தவரையில், 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 381 பிஎஸ் பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக 340 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது சொகுசு எஸ்யூவி ரக கார் என்றாலும் கூட, செயல்திறனிலும் அசத்த கூடியது.

BMW X7

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கும் சற்றும் பஞ்சம் கிடையாது.

இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுதவிர 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், டிஜிட்டல் கீ, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பை பொறுத்தவரையில், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) உள்ளிட்ட வசதிகள் எல்லாம் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) உள்ளிட்ட கார்களுக்கு எல்லாம் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2024, 12:28 [IST]
English summary
Navya nair buys bmw x7 luxury suv full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+