சீரியல் வில்லி நடிகை பென்ஸ்-இன் விலை உயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! பெரிய பெரிய நடிகைகளையே மிரள வச்சுட்டாங்க!
கன்னட சீரியல் நடிகை ஒருவர் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த சீரியல் நடிகை யார்? அவர் என்ன சொகுசு கார் மாடலை வாங்கி இருக்கின்றார்? அதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கன்னட சீரியல் உலகின் முன்னணி நடிகைகளில் அர்ச்சனா லக்ஷ்மி நரசிம்மா சாமி-யும் ஒருவர் ஆவார். 1992 ஆம் ஆண்டில் பிறந்த இவர், முதலில் ஓர் நிறுவனத்தில் எச்ஆர்-ஆகவே பணியாற்றி வந்திருக்கின்றார். இதன் பின்னரே அவர் மிகப் பெரிய கனவான மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.

2013 ஆம் ஆண்டிலேயே இந்த துறையில் அவர் கால் தடம் பதித்துவிட்டார். இந்த நிலையிலேயே 2013 ஆம் ஆண்டில் மிஸ் கன்னடா பட்டம் நடிகை அர்ச்சனாக்கு வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை அடுத்தே அவருக்கு திரையுலகில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்பட்டது.
இதைஅடுத்து அவர் மதுபாலா எனும் கன்னடா டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் இதுவே அவரின் முதல் டிவி சீரியல் ஆகும். இதில் நெகட்டீவ் ரோலிலேயே அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்து. இந்த சீரியலில் மட்டுமில்லைங்க, இவங்க தமிழ் சீரியல்கள் சிலவற்றிலும் நடித்திருக்கின்றார்.

அந்தவகையில், கண்ணம்மா, நாயகி உள்ளிட்ட சீரியல்களிலும் அவர் நடித்திருக்கின்றார். இந்த நடிகையே தற்போது மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் 450 ஜிஎல்இ சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். மிகப் பெரிய பூட் ஸ்பேஸும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.
இதன் நான்காம் தலைமுறை கார் மாடலே தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக இடவசதி மற்றும் சொகுசு வசதிகளைத் தாங்கிய கார் மாடல் மட்டுமில்லைங்க இது, அதிக அழகான கார் மாடலாகவும் இது காட்சிளிக்கின்றது. இதன் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக 20 அங்குல அலாய் வீல்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் பாதுகாப்பிற்காக சென்சார்கள் மற்றும் கேமிராக்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பெரிய தொடுதிரை சிஸ்டம் எம்பியூஎக்ஸ் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வண்ண ஹெட்ஸ்-அப் திரை, காற்றோட்டத்தையும் - அதிக சொகுசான ரைடு அனுபவத்தையும் வழங்கும் வசதிக் கொண்ட இருக்கைகள், விரைவில் கேபினை குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி வெண்ட், டைப் சி சார்ஜிங் போர்ட்களும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த காரை இந்தியாவில் இரண்டு பெட்ரோல் மற்றும் 2 டீசல் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். 1993 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் டீசல், 2989 6 சிலிண்டர் டீசல் மற்றும் 2999 சிசி 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.
இதில் எந்த எஞ்சின் ஆப்ஷன் கொண்ட தேர்வை சீரியல் நடிகை வாங்கி இருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இந்த கார் மாடல் ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் வால்வோ எக்ஸ்சி90 ஆகியவற்றிற்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 96.40 லட்சம் தொடங்கி ரூ. 1.15 கோடி ரூபாய் வரையிலான விலையிலேயே பென்ஸ் ஜிஎல்இ 450 இந்தியாவில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் நடிகைகளையே மிரள செய்யும் வகையில் சீரியல் நடிகை சொகுசு காரை வாங்கி அசத்தி இருக்கின்றார். ஏற்கனவே அவரிடத்தில் சில சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் புதிதாக பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையும் வாங்கி இருக்கின்றார். இதன் விலை ஆன்-ரோடில் 1 கோடியைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








