நடிகர்களுக்கு இணையான சொத்து! நயன்தாராவிடம் உள்ள இந்த காரை பற்றி எல்லாம் கேள்வி பட்டிருக்கவே மாட்டீங்க!!
நயன்தாரா Nayanthara), இவருக்கு தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் நயன்தாராவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் பிறந்தவரான நயன்தாரா சமீபத்திய ஷாரூக்கானின் ஜவான் படத்தில் நடந்ததன் மூலம் இந்திய அளவில் தனது நடிப்பினால் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனையும் தாண்டி, நடிகர் தனுஷ் மீதான குற்றச்சாட்டால் கடந்த சில நாட்களாக நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளார். இவரது பிறந்துநாள் இன்று (நவம்பர் 18). இன்றைய தினத்தில், நயன்தாராவிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக நயன்தாராவை சொல்லலாம். அதிலிலும், திருமணத்திற்கு முன்பாக 100 திரைப்படங்களில் நடித்துவிட வேண்டும் என்பதற்காக சமீப காலமாக தொடர்ச்சியாக அதிக படத்தில் நடித்து வருகிறார். முக்கியமாக, பான் இந்திய திரைப்படமான ஜவானில் நடித்ததன் மூலம் நயன்தாராவுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

இந்த வருவாய்கள் மூலமாக சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவரும் நயன்தாராவுக்கு இன்று 40வது பிறந்தநாள். 40 வயதிலும் ஒருவர் முன்னணி நடிகையாக உள்ளார் என்றால் அது சாதாரணமல்ல. பல அசாத்தியமான சூழல்களை எதிர்கொண்டு இன்றும் நடிப்பில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, அதற்கேற்ற லக்சரியான வாழ்க்கையை கணவர் மற்றும் மகன்களுடன் ஜாலியாக அனுபவித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, நடிகை நயன்தாராவின் நிகர சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.200 கோடி ஆகும்.
சென்னையில் ரூ.100 கோடியில் வீடு, ஹைதராபாத்தில் 2 அப்பார்ட்மெண்ட்ஸ், மும்பையில் 4 பி.எச்.கே வீடு உள்ளிட்டவை இந்த 200 கோடி ரூபாயில் அடங்குகின்றன. லிப்ஸ்டிக் நிறுவனம் ஒன்றில் மற்றும் யுஏஇ நாட்டு நிறுவனம் ஒன்றில் என சில பெரிய முதலீடுகளை செய்துள்ள நயன்தாராவும், அவரது கணவர் & இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து கடந்த 2023ஆம் ஆண்டில் 9ஸ்கின் என்கிற ஸ்கின்கேர் நிறுவனத்தை துவங்கியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

சொகுசு கார்களை பொறுத்தவரையில், நயன்தாராவிடம் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) மற்றும் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்350டி (Mercedes-Maybach GLS350D) என 2 சொகுசு கார்கள் உள்ளன. இதில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.76 கோடியாக உள்ளது. மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்350டி காரை பொறுத்தவரையில், இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார்களுள் ஒன்றாகும்.
கடந்த 2023ஆம் ஆண்டில் இதே தினத்தில் நயன்தாராவின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் விக்னேஷ் சிவன் பரிசளித்து இருந்தார். இதனை நயன்தாரா கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது போட்டோ ஒன்றுடன் தெரிவித்து இருந்தார். இந்த மெர்சிடிஸ்-மேபக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.96 கோடியாக உள்ளது.

மெர்சிடிஸ் கார்கள் மொத்தம் 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் ஆகும். இவற்றில் மேபக் ரக கார்களின் விலைகள் மிகவும் அதிகமாகும். அந்த அளவிற்கு அவற்றில் சொகுசு வசதிகள் ஏராளமானவை வழங்கப்படுகின்றன. எக்ஸிக்யூட்டிவ் இருக்கைகள், எலக்ட்ரிக் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய பின்பக்க கதவுகள் உள்ளிட்டவை அவற்றுள் சில ஆகும்.
மேபக் ஜி.எல்.எஸ் காரில் 4.0 லிட்டர் பை-டர்போ, வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 550 பிஎச்பி மற்றும் 730 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. நடிகை நயன்தாராவிடம் சொகுசு கார்கள் மட்டுமின்றி, ரூ.50 கோடி மதிப்பிலான பிரைவேட் ஜெட் ஒன்றும் உள்ளது. இது நயன்தாரா மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட ஆகாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை நயன்தாராவிடம் வெறும் 2 சொகுசு கார்கள் மட்டுமே உள்ளன என்றால், நாம் அறிந்தது குறைவு என்றே அர்த்தம். ஏனெனில், இந்திய அளவில் பிரபலமான நடிகையிடம் இன்னும் நிறைய சொகுசு கார்கள் இருக்க வாய்ப்புண்டு. நடிகைகளுள் நயன்தாரா சற்று வித்தியாசமானவர். ஆதலால், தன்னிடம் உள்ள சொகுசு கார்களை அவர் வெளிக்காட்டாமல் இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications









