நயனுக்கு விக்கி கொடுத்த கோடி ரூபா பரிசு.. யாருனா கண்ணு வச்சுடுவாங்களோனு ஃபோட்டோவகூட முழுசா போடல!
தன்னுடைய காதல் கணவன் விக்கி (விக்னேஷ் சிவன்), மிக மிக விலை உயர்ந்த பரிசு பொருள் ஒன்றை வழங்கி இருப்பதாக முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய இந்த ஸ்வீட்டஸ்ட் மொமண்டை ரசிகர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளும் விதமாக அவர் இந்த தகவலை பகிர்ந்திருக்கின்றார். மேலும், தனக்கு கிடைத்த அந்த பரிசு பொருளின் சின்னத்தை மட்டுமே அவர் பகிர்ந்திருக்கின்றார்.
ஆனால், விக்கி கொடுத்த பரிசு பொருள் என்னது? அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்? மற்றும் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களை அவர் அந்த பதிவில் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் நயன்தாரா வெளியிட்டு இருக்கும் சின்னத்தை வைத்தே அவருக்கு கிடைத்த பரிசு என்ன என்பதை யூகிப்பின் அடிப்படையில் டீகோட் செய்திருக்கின்றோம். வாருங்கள் அது என்ன என்பதை பார்க்கலாம்.

நயன்தாரா கடந்த 18 ஆம் தேதி அன்று பிறந்தநாளைக் கொண்டாடினார். இப்போது அவருக்கு 39 வயது ஆகின்றன. இந்த பிறந்தநாளையே அவருக்கு மறக்க முடியாத நாளாக மாற்றும் விதமாக, நயன்தாராவின் காதல் கணவன் விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த பரிசு பொருள் ஒன்றை நடிகைக்கு வழங்கி இருக்கின்றார்.
அந்த பரிசு பொருள் என்ன என்பதை தெரிவிக்காமல், வெறும் அதன் படத்தை மட்டுமே நயன்தாரா சமூக வலைதளம் வாயிலாக பகிர்ந்து உள்ளார். படத்தை வைத்து பார்க்கையில் அது விலை உயர்ந்த கார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆமாங்க, அது மெர்சிடிஸ் மேபேக் வகை ஆடம்பர கார் ஆகும்.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அது மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் லிமோசைன் கார் மாடல் என்றே நாங்கள் கணித்துள்ளோம். இதன் விலை ரூ. 2.7 கோடி ஆகும். இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
மேலும், இந்த கார் இப்போதைய நிலவரப்படி இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 4 மேட்டிக் மற்றும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 4 மேட்டிக் ஆகியவையே அவை ஆகும். இதில், மேபேக் எஸ்680 4 மேட்டிக்கே விலை உயர்ந்த தேர்வாகக் காட்சியளிக்கின்றது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 3 கோடியே 40 லட்சம் ஆகும். இந்த இரண்டில் எதை விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், இந்த இரண்டிலும் ஏதேனும் ஒன்றையே அவர் பரிசாக வழங்கி இருப்பார் என நிச்சயமாகக் கூறலாம்.
விக்னேஷ் சிவன் நயன் தாராவிற்கு பிறந்த நாள் பரிசாக வழங்கி இருக்கும் இந்த கார் விலையில் மட்டுமல்ல சொகுசு விஷயத்திலும் மிக மிக உயர்ந்ததாகவே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள், மசாஜ், வெண்டிலேட் மற்றும் குளிர் காலத்தில் சூடான உணர்வை வழங்கும் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இருக்கை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த இருக்கை பிரீமியம் தர லெதரால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மேலும், அது மிகுந்த பிரீமியமான நிறத்தையும் கொண்டிருக்கும். இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டுகள், மெர்சிடிஸ் எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் மேபேக் எஸ்-கிளாஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இவற்றுடன் சேர்த்து கார் இணைப்பு அம்சம், முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற நவீன கால அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல சிறப்பு மற்றும் சொகுசு அம்சங்களை மிக தாராளமாக இந்த காரில் மெர்சிடிஸ் வழங்கி இருக்கின்றது. இத்தகைய காரையே நயன்தாராவின் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றும் விதமாக விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காரை திரைநட்சத்திரங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தொழிலதிபர்களும் பலரும் கூட இந்த ஆடம்பர காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், அதானி, அம்பானி மற்றும் கியாரா அத்வானி போன்ற பல பிரபலங்கள் இந்தியாவில் மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையிலேயே தற்போது நயன்தாரா இணைந்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









