மிரட்டும் புதிய எஸ்யூவி காரில் சென்று ரசிகர்களை சந்தித்த ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா..!!

Written By:

அறம் படம், தமிழ் ரசிகர்கள் அனைவரையும் பெரியளவில் பாதித்துள்ளது. நயன்தாரா என்பதையும் தாண்டி அறம் படத்தின் கதை மிகப்பெரிய தாக்கத்தை இன்றைய சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

நயன்தாராவிற்கு மீடியா வெளிச்சம் பிடிக்காது. தான் நடித்த எந்த படத்தின் பிரோமஷனுக்கும் நயன்தாரா இதுவரை பங்கேற்றது கிடையாது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

ஆனால் அறம் படத்தின் முக்கியத்துவம் என்பது வேறு. அதை கருத்தில் கொண்டு சென்னையில் அறம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து நயன்தாரா படம் பார்த்தார்.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

அப்போது தான் நமக்கு நயன்தாரா பயன்படுத்தி வரும் கார் கண்ணில் பட்டது. அதுவரை பிஎம்டபுள்யூ-வின் ரசிகையாக இருந்தவர் தற்போது ஃபோர்டு ரசிகையாக மாறியுள்ளார்.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

தமிழ்சினிமாவில் முதலில் விஜய், சூர்யா உட்பட சில முன்னணி நடிகர்கள் மட்டுமே அப்போது பிஎம்டபுள்யூ கார்களை வைத்திருந்தனர்.

நடிகைகளின் முதன்முதலாக பிஎம்டபுள்யூ வாங்கியது நயன்தாரா தான். அவர்களுக்கு பிறகே த்ரிஷா, அசின் உள்ளிட்டோர் பிஎம்டபுள்யூ-விற்கு மாறினர்.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

நயன்தாரா முதலில் வாங்கியது பிஎம்டபுள்யூ எக்ஸ்5 எஸ்யூவி கார். கருப்பு நிறத்தில் அசரடிக்கும் திறன் பெற்ற இந்த காரை நயன்தாரா பல வருடங்களாக பயன்படுத்தி வந்தார்.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

ஆனால் சமீபத்தில் அவர் ஃபோர்டு நிறுவனத்தின் எண்டவர் காருக்கு மாறியிருப்பது, அறம் பட பிரோமஷன்களில் போதே தெரியவந்தது. தற்போது தமிழ் ஆட்டோமொபைல் உலகம் அதை உற்றுநோக்கி வருகிறது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

அடர் சிவப்பு நிறத்தில், க்ரோம் ஃபினிஷீங் செய்யப்பட்டுள்ள நயன்தாராவின் ஃபோர்டு எண்டவர் காரில் பெரியளவில் கஸ்டமைஸ் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

இந்தியாவில் எண்டவர் என்று அறியப்பட்டாலும், வெளிநாடுகளில் எண்டவர் மாடலை எவெரஸ்ட் என்று பெயரில் ஃபோர்டு விற்பனை செய்கிறது.

Trending On Drivespark:

'தேவசேனா' அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த 'பாகுபலி' பிரபாஸ்..!!

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் ஓனர்!

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

ஒரு வெளிநாட்டு கார் என்ற தோற்றத்தை தர நயன்தாரா தனது காரில் எண்டவர் என்ற பெயரில் இருந்து, எவெரஸ்ட் என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

மேலும் பம்பர் மீதே ஃபோர்டு என்ற நிறுவன முத்திரை கிரோம் நிறத்தில் பதிக்கப்பட்டு இருப்பது இந்த காருக்கு சிறப்பான கஸ்டமைஸ் வசதியாக உள்ளது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

எவரெஸ்ட் என்ற பெயருக்கு ஏற்றவாறு, பம்பரின் மேல் முனையில் மலைக்கான சில குறியீடுகள் இடம்பெற்றிருப்பது காருக்கு தனித்தோற்றத்தை தருகிறது.

2016 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட எண்டவர் மாடலைத்தான் தற்போது நயன்தாரா பயன்படுத்தி வருகிறார்.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

7 இருக்கைகள் கொண்ட இந்த கார் டீசல் பயன்பாட்டில் மட்டுமே வருகிறது. டைட்டேனியம் மற்றும் டிரெண்டு என இரண்டு மாடல்களில் மொத்தம் 6 வேரியண்டுகள் ஃபோர்டு எண்டவர் காரில் உள்ளன.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

நயன்தாரா பயன்படுத்தி வரும் மாடல் ஃபோர்டு எண்டவர் டைட்டேனியம், இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 29.57 லட்சம் விலையில் இருந்து தொடங்குகிறது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

சிவப்பு, கருப்பு, சாம்பல் உட்பட 6 நிற வண்ணத்தேர்வுகளில் கிடைக்கும் 2016 ஃபோர்டு எண்டவர் ஏர்பேகுகள், உராய்வு கட்டுப்பாட்டு கருவி, மின்னணு உறுதிப்பாடு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

சாதாரண சாலைகளில் மட்டுமில்லாமல், பல்வேறு நில பரப்புகள் மற்றும் மலை பிரதேச வழிகளிலும் ஃபோர்டு எண்டவர் காரை ஓட்டி செல்லலாம்.

பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 காருக்கு முன்னர் ஸ்கார்பியோ மற்றும் டொயோட்டா இன்னோவோ கார்களை நயன்தாரா பயன்படுத்தி வந்தார்.

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வாங்கிய புதிய கார் இதுதான்!

தற்போது பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 மாடலுக்கு பிறகு ஃபோர்டு எண்டவர் காரை வாங்கி இருக்கும் நயன்தாராவிற்கு எஸ்யூவி கார்கள் மீது எப்போதும் அலாதியான காதல் உண்டு என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Nayanthara Visits Theater by Her New Ford Endeavour Car. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark