நட்சத்திர தம்பதி எவ்வளவு கூட்டத்தில் வந்தாலும் தனியா தெரியுறாங்க! வாங்கிய கார் அந்த மாதிரியானது!

நஸ்ரியா நசீம் & பகத் பாசில் (Nazriya Nazim & Fahad Fasil) இந்த நட்சத்திர தம்பதியை பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கேரளா (Kerala)-ஐ சேர்ந்தவர்களாக இருந்தாலும், நடிகை நஸ்ரியாவும், நடிகர் பகத் பாசிலும் தென்னிந்திய அளவில் பிரபலமானவர்கள். மற்ற மலையாள நடிகர்களை போலவே பகத் பாசில்- நஸ்ரியா தம்பதியினரும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை விரும்பக் கூடியவர்கள். அவ்வப்போது புதுசு புதுசா விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்க கூடியவர்கள்.

அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த தம்பதியினர் விலைமிக்க ஸ்போர்ட்ஸ் காரான போர்ஷே 911 கர்ரேரா எஸ் (Porsche 911 Carrera S)-ஐ வாங்கினர். பொதுவாக பச்சை நிறத்தில் சாலையில் கார்களை பார்க்க முடியாது. ஆனால், இவர்கள் முற்றிலும் பச்சை நிறத்திலான போர்ஷே காரை வைத்துள்ளனர்.

nazriya nazim fahad fasil spotted

இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், அந்த காரை இன்னமும் பகத் பாசில்- நஸ்ரியா தம்பதியினர் பயன்படுத்தி வருவதுதான். தற்போதுகூட, கேரளாவின் கொச்சி கோட்டை பகுதிக்கு தங்களது போர்ஷே 911 கர்ரேரா எஸ் காரில் இந்த தம்பதி வந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காரை பகத் பாசில் ஓட்ட, அருகில் நஸ்ரியா அமர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

இவர்களது போர்ஷே காரின் அடையாளமே அதன் பளிச்சிடும் பச்சை நிறம் ஆகும். ஏனெனில், பொதுவாகவே போர்ஷே கார் என்றால் சிவப்பு நிறம் என்கிற பார்வை நம்மிடத்தில் உள்ளது. அதற்கு மாற்றாக போர்ஷே காரை பச்சை நிறத்தில் தேர்வு செய்திருப்பது இந்த நட்சத்திர தம்பதியின் இரசனையை காட்டுகிறது. இப்படியொரு பச்சை நிறத்தில் போர்ஷே 911 கார் விற்பனை செய்யப்படுவதில்லை.

nazriya nazim fahad fasil spotted

இந்த பச்சை நிறத்திற்கு தனியாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பணம் செலவு செய்து காரை மாற்றிய பின்னரே பகத் பாசில்- நஸ்ரியா தம்பதியினர் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவ்வளவு செலவு செய்து காருக்கு இந்த பிரத்யேக பெயிண்ட்டை கொடுத்தது மட்டுமின்றி, நடிகர் பகத் பாசில் தனது இந்த போர்ஷே காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப பல விதங்களில் மாற்றிய பின்னரே டெலிவிரி பெற்று மனைவி உடன் பயன்படுத்த ஆரம்பித்தார்.

இதன்படி, காருக்குள் இருக்கைகள் கருப்பு லெதர்களினால் மூடப்பட்டன. அதேநேரம், தனியாக தெரியும் வகையில் சீட் பெல்ட்கள் நியான் பச்சை நிறத்தில் உள்ளன. இது, காரின் வெளிப்பக்க பச்சை-கருப்பு பெயிண்ட்டிற்கு இணையாக உள்ளது. 911 கர்ரேரா எஸ் கார் உடன் அப்போது போர்ஷே நிறுவனம் வழங்கி வந்த 'ஸ்போர்ட்ஸ் க்ரோனோ பேக்கேஜ்' (Sports Chrono Package) உடன் இந்த காரை பகத் பாசில் வாங்கினார்.

nazriya nazim fahad fasil spotted

இதன் மூலமாக, இவர்களது காருக்குள் டேஸ்போர்டில் ஸ்போர்ட்ஸ் க்ரோனோ டயல் (Dial) உள்ளது. இது இல்லாவற்றிற்கும் சேர்த்து ஏறக்குறைய காரின் விலை இல்லாமல் தனியாக ரூ.15 லட்சம் வரையில் நடிகர் பகத் பாசிலுக்கு செலவாகி உள்ளது. இவர் வாங்கிய சமயத்தில் போர்ஷே 911 கர்ரேரா எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.84 கோடி ஆக இருந்தது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்; ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த காருக்காக மொத்தம் ஏறக்குறைய ரூ.3 கோடி வரையில் பகத் பாசில்- நஸ்ரியா தம்பதியினர் செலவு செய்து இருப்பர். ஸ்போர்ட்ஸ் க்ரோனோ டயல் மட்டும் இல்லாமல், பல்வேறு விதமான டிரைவிங் மோட்களும் இந்த காரில் உள்ளன. இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 21 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பச்சை நிறத்திலான பெயிண்ட்டினால் இந்த போர்ஷே காரில் எந்த இடத்திற்கு வந்தாலும் நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் தம்பதி தனியாக தனித்து தெரிகின்றனர். இந்தியாவில் தற்சமயம் போர்ஷே 911 கர்ரேரா எஸ் கார் விற்பனையில் இல்லை. 911 கர்ரேரா மற்றும் 911 கர்ரேரா ஜிடிஎஸ் (GTS) கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 17:05 [IST]
English summary
Nazriya nazim and fahad fasil spotted with their porsche 911 carrera s car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X