5 கோடி ரூபா காரை ஓட்டீட்டு போன தேவதை! கல்யாணமாகி 10 வருஷம் ஆனாலும் இவங்க இன்னமும் இளசுகளுக்கு கனவு கன்னிதான்!

இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனந்த் அம்பானி (Anant Ambani), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), துல்கர் சல்மான் (Dulquer Salmaan) மற்றும் சாரா அலி கான் (Sara Ali Khan) உள்ளிட்ட பிரபலங்கள் பலரிடமும், இந்த கார் இருக்கிறது.

இந்த வரிசையில் மற்றொரு திரையுலக நட்சத்திரம் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை வாங்கியுள்ளார். மாமன்னன், விக்ரம் மற்றும் வேட்டையன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்த மலையாள நடிகர் ஃபஹத் பாசில்தான் (Fahadh Faasil) அந்த நட்சத்திரம்.

Nazriya Spotted Driving Mercedes Benz G63 AMG

ஃபஹத் பாசிலிடம் ஏற்கனவே ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. அவரது கார் கலெக்ஸனில் (Car Collection), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த வரிசையில்தான் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை ஃபஹத் பாசில் வாங்கியுள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமில் இருந்து ஃபஹத் பாசில் இந்த காரை டெலிவரி எடுத்து கொண்டு செல்லும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஆனால் ஃபஹத் பாசில் காரை ஓட்டவில்லை. அவரது மனைவி நஸ்ரியாதான் (Nazriya) காரை ஓட்டி கொண்டு செல்கிறார்.

Fahadh Faasil

ஃபஹத் பாசில்-நஸ்ரியா நஸீம் ஆகிய இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை அவர்கள் வாங்கியிருப்பது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது மிகவும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 585 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபஹத் பாசில் வாங்கியுள்ள இந்த புதிய காரின் விலை 4.60 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபஹத் பாசில் தனது திரையுலக பயணத்தில் தற்போது உச்சத்தில் இருக்கிறார். எனவே வரும் காலங்களில் அவர் இன்னும் நிறைய விலை உயர்ந்த கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 14:42 [IST]
English summary
Nazriya spotted driving mercedes benz g63 amg viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+