3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசின் காரணமாக இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகம் முழுவதிலும் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் மாசடைந்த காற்றை சுவாசித்ததன் பின்விளைவாக 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்திருப்பதாக அமெரிக்காவைச் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதில், டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சே முக்கிய காரணமாக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டீசல் மற்றும் டீசல் அல்லாத எரிபொருளால் இயங்கும் கார், டிரக், பஸ், கப்பல் ஆகியவற்றில் இருந்து வெளியேரும் புகை மக்களின் உடல் நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படும் அபாயமாக மாறி வருகிறது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும், டீசல் வாகனங்களால் ஏற்படும் இறப்பானது 47 சதவீதம் இருந்துவந்ததாக கூறப்பட்டநிலையில், அது 66 சதவீதத்தை தாண்டியிருப்பதாக ஆராய்ச்சிகள் குறிப்பிட்டுள்ளது. இதில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளே அதிக அளவில் உயிர்களை பலி கொடுத்திருப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

அரசு சாரா தனியார் நிறுவனமான ஐசிசிடி, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த நிறுவனமும், அமெரிக்காவைச் சார்ந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து, ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் செய்த மாசு உமிழ்வு மோசடியை தனது ஆய்வின்மூலம், கடந்த 2015ம் ஆண்டு வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகளவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், டீசல் கார்களில் மாசு உமிழ்வு அளவைக் குறிப்பதில் மோசடி செய்து தனது தயாரிப்புகளை விற்பனைச் செய்தது. இதனைத் தனது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்த ஜசிசிடி நிறுவனம், அந்த அதிர்ச்சி ரிப்போர்டை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்தது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

குற்றச்சாட்டை ஏற்ற அந்த நிறுவனம், மென்பொருள் மூலம் மாசு உமிழ்வு அளவைக் குறைத்து காட்டியதை ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகள் அந்த நிறுவனத்தின்மீது நடவடிக்கையை மேற்கொண்டன. அதேபோல, இந்தியாவும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்நிலையில், ஐசிசிடி ஆராய்ச்சி நிறுவனம் புதிய அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் டீசல் வாகனங்களில் இருந்து வெளிவந்த புகையினால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் இறந்ததிருப்பதாக தனது புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டால் பலர் தங்களது, டீசல் வாகனங்களைப் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளை தவிர்க்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், இந்த அறிவிப்பானது சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

டீசல் வாகனங்களில் இருந்த வெளிவரும் புகையானது நுரையீரல், இதய கோளாறு, இதய அடைப்பு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளான இந்தியா, சீனா, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் அதிகளவில் டீசல் வாகனங்களே பயன்பாட்டில் உள்ளன. இதனால், இங்கு காற்று மாசின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளை காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி தகவல் தெரிவிக்கின்றன.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகளாவிய அளவில் டீசல் வாகனத்தால் அதிகம் பாதிப்புகளைச் சந்திக்கும் நாடாக ஐரோப்பா உள்ளது. இதற்கு காரணம் அந்த நாட்டில் இயங்கும் அதிக அளவில் மாசை ஏற்படுத்தும் டீசல் வாகனங்கள் தான். ஆகையால், இங்கு இயக்கப்படும் வாகனங்களின் எஞ்ஜின்களை உலக தரம் வாய்ந்த எமிஸ்ஸன் கட்டுப்பாட்டுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று ஐசிசிடியின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜோசுவா மில்லர் அறிவுறுத்தியுள்ளார்.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சீனாவில் மட்டும் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இது அந்த நாட்டின் மொத்த இறப்பில் 10 சதவீதம் ஆகும். அதேபோன்று, ஜெர்மனி நாட்டிலும் டீசல் உள்ளிட்ட காற்று மாசு காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதையடுத்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, இங்கு அதிகபட்சமாக 74 ஆயிரம் பேரும், இத்தாலியில் 7 ஆயிரத்து 800 பேரும், பிரான்ஸில் 6 ஆயிரத்து 400 பேரும் இறந்திருப்பதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதேபோல மிலான், டுரின், ஸ்டட்கார்ட், கீவ், கோலக்னே, பெர்லின் மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளும் இந்த அபாயத்தில் தற்போது சிக்கிய இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கரிய அமில வயுக்களால் ஏற்படும் இறப்பானது மொத்த இறப்பில் 11 சதவீதமாக இருப்பதாக மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 லட்சத்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கிய டீசல் வாகனங்கள்: ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐசிசிடி நிறுவனத்தின் இந்த ஆய்வு மின்வாகனத்தின் பயன்பாடு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்குகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nearly 3 Lakh Peoples Killed By Air Pollution All Over World. Read In Tamil.
Story first published: Wednesday, February 27, 2019, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X