கப்பல் மாதிரி இருக்கு! காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரை வாங்கியது அவரா! விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடி போயிருவீங்க!

மலையாள திரை உலகை சேர்ந்தவர் நீரஜ் மாதவ் (Neeraj Madhav). இவருக்கு நடிகர் மற்றும் டான்சர் என பல்வேறு முகங்கள் இருக்கின்றன. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) கார் ஆகும்.

இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் ஆரம்ப விலை (Price) 95.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் (variant) விலை 1.08 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

BMW X5 SUV

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் உடனும், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டீசல் வெர்ஷன்களில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 381 பிஹெச்பி மற்றும் 520 என்எம் டார்க் ஆகும். அதே நேரத்தில் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 286 பிஹெச்பி மற்றும் 650 என்எம் டார்க் ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

Neeraj Madhav Buys BMW X5 SUV

டிசைன் (Design) மற்றும் வசதிகள் (Features) என பல்வேறு அம்சங்களிலும் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த ஜூலை மாதம்தான் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து செல்வந்தர்கள் பலரும் இந்த காரை வாங்கி வருகின்றனர்.

இந்த வரிசையில்தான் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் தற்போது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை டெலிவரி எடுத்துள்ளார். 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளும் 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மலையாள நடிகர் நீரஜ் மாதவ் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் அவர் வாங்கியிருப்பது இந்த காரின் டாப் வேரியண்ட் ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 13:06 [IST]
English summary
Neeraj madhav buys bmw x5 suv worth rs 1 08 crore check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+