விடுதலை படம் பார்த்த பிறகும் போலீஸ்காரர்கள் செய்த காரியம்! இதுக்காக எத்தனை ப்ரமோஷன் வேணாலும் தரலாம்!
பொதுவாக போலீஸ் (Police) என்றாலே, பொதுமக்கள் மத்தியில் அச்சமும், அதிருப்தியும் காணப்படுகிறது. ஆனால் மனித நேயம் மிக்க காவலர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதை நமக்கு தெளிவாக உணர்த்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இந்த வரிசையில் தமிழ்நாட்டில் (Tamil Nadu) தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் (மே 7) நடைபெற்ற நீட் தேர்வை (NEET), 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். மிகவும் முக்கியமான இந்த தேர்வை வெற்றிகரமாக எழுத ஒரு மாணவிக்கு காவல் துறையினர் உதவி செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

18 வயதான ஆனந்தி என்ற மாணவி, சென்னை ஆவடியில் உள்ள ஜெயகோபால் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். ஏனெனில் அது அவருக்கான தேர்வு மையம் இல்லை. தவறுதலாக அங்கு சென்று விட்டார்.
இந்த தகவல் அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் சற்றும் தாமதிக்காமல், மாணவி ஆனந்தி சரியான தேர்வு மையத்திற்கு செல்ல உடனடியாக உதவியுள்ளனர். ஆனந்தி தேர்வு எழுத வேண்டிய மையம் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள விவேகானந்தா வித்யாலாயா ஆகும்.
அவர் தவறுதலாக சென்ற மையத்தில் இருந்து, சரியான தேர்வு மையம் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. எனினும் போக்குவரத்து காவலர்கள் தனசேகர் மற்றும் தினேஷ் குமாரசாமி ஆகியோர் மாணவி ஆனந்தியை பாதுகாப்பாக அழைத்து சென்று, சரியான மையத்தில் விட்டுள்ளனர். மாணவி ஆனந்தி மட்டுமல்லாது, கூடவே அவரின் பெற்றோரையும் போக்குவரத்து காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இதற்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை, காவலர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது காவல் துறையினர் ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் கார் ஆகும். உயர் அதிகாரிகள் என்ன சொல்வார்களோ? என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், மாணவியின் எதிர் காலத்தை மட்டும் மனதில் வைத்து, போக்குவரத்து காவலர்கள் இதனை செய்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற விடுதலை படத்தில் மக்களுக்கு உதவி செய்ததற்காக நாயகன் சூரி, தனது உயர் அதிகாரியிடம் சிக்கி படாதபாடு படும் காட்சிகள் இங்கே நம் கண் முன் வந்து செல்கின்றன. ஆனால் நிஜத்தில் அவ்வாறு நிகழவில்லை. போக்குவரத்து காவலர்கள் தனசேகர் மற்றும் தினேஷ் குமாரசாமி ஆகியோர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாது, காவல் துறை உயர் அதிகாரிகளும் அவர்களை பாராட்டி கொண்டுள்ளனர். சரியான தேர்வு மையத்திற்கு முன் காவலர்கள் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நிறுத்துவதையும், மாணவி ஆனந்தி அதில் இருந்து இறங்கி தேர்வு மையத்திற்கு ஓடுவதையும் தற்போது வெளியாகியுள்ள வைரல் வீடியோவில் (Viral Video) காண முடிகிறது.மாணவி சாலையை கடக்க ஏதுவாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதும், பாராட்டுக்குரிய விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்கள் தற்போது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டன. வாகனங்கள் இருப்பதால்தான் நம்மால் போக்குவரத்தை சுலபமாக மேற்கொள்ள முடிகிறது. ஆனால் வாகன வசதி இல்லாமல் அவதிப்பட்ட மாணவிக்கு, சரியான நேரத்தில் காவலர்கள் உதவியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications